குருவி யெனப்பல கழுகு நரித்திரள் அரிய வனத்திடை மிருக மெனப்புழு குறவை யெனக்கரி மரமு மெனத்திரி ...... யுறவாகா
kuruvi yeṉappala kaḻuku narittiraḷ ariya vaṉattiṭai miruka meṉappuḻu kuṟavai yeṉakkari maramu meṉattiri ...... yuṟavākā
பாடல் 263 · பாடல் 263
pāṭal 263
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
குருவி யெனப்பல கழுகு நரித்திரள் அரிய வனத்திடை மிருக மெனப்புழு குறவை யெனக்கரி மரமு மெனத்திரி ...... யுறவாகா
kuruvi yeṉappala kaḻuku narittiraḷ ariya vaṉattiṭai miruka meṉappuḻu kuṟavai yeṉakkari maramu meṉattiri ...... yuṟavākā
குமரி கலித்துறை முழுகி மனத்துயர் கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி குலைய னெனப்புலை கலிய னெனப்பலர் ...... நகையாமல்
kumari kalittuṟai muḻuki maṉattuyar koṭumai yeṉappiṇi kalaka miṭattiri kulaiya ṉeṉappulai kaliya ṉeṉappalar ...... nakaiyāmal
மருவு புயத்திடை பணிக ளணப்பல கரிபரி சுற்றிட கலைகள் தரித்தொரு மதன சரக்கென கனக பலக்குட ...... னதுதேடேன்
maruvu puyattiṭai paṇika ḷaṇappala karipari cuṟṟiṭa kalaikaḷ tarittoru mataṉa carakkeṉa kaṉaka palakkuṭa ...... ṉatutēṭēṉ
வரிய பதத்தினி னருவி யிருப்பிடம் அமையு மெனக்கிட முனது பதச்சரண் மருவு திருப்புக ழருள எனக்கினி ...... யருள்வாயே
variya patattiṉi ṉaruvi yiruppiṭam amaiyu meṉakkiṭa muṉatu pataccaraṇ maruvu tiruppuka ḻaruḷa eṉakkiṉi ...... yaruḷvāyē
விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு ...... வெகுதாளம்
virutu taṉattaṉa taṉaṉa taṉattaṉa vitami timittimi timita timittimi vikirta ṭaṭuṭṭuṭu ririri yeṉakkuku ...... vekutāḷam
வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட ...... விடும்வேலா
veruva mukiḻtticai yurakaṉ muṭittalai neṟune ṟeṉatticai yatira aṭaittiṭa mikuti keṭapporu acurar teṟittiṭa ...... viṭumvēlā
அரிய திரிப்புர மெரிய விழித்தவன் அயனை முடித்தலை யரியு மழுக்கையன் அகில மனைத்தையு முயிரு மளித்தவ ...... னருள்சேயே
ariya tirippura meriya viḻittavaṉ ayaṉai muṭittalai yariyu maḻukkaiyaṉ akila maṉaittaiyu muyiru maḷittava ...... ṉaruḷcēyē
அமண ருடற்கெட வசியி லழுத்திவி ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ டழகு திருத்தணி மலையில் நடித்தருள் ...... பெருமாளே.
amaṇa ruṭaṟkeṭa vaciyi laḻuttivi ṇamarar koṭuttiṭu marivai kuṟattiyo ṭaḻaku tiruttaṇi malaiyil naṭittaruḷ ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).