கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை கோடா லழைத்துமல ...... ரணைமீதே
kūrvēl paḻittaviḻi yālē maruṭṭimulai kōṭā laḻaittumala ...... raṇaimītē
பாடல் 267 · பாடல் 267
pāṭal 267
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை கோடா லழைத்துமல ...... ரணைமீதே
kūrvēl paḻittaviḻi yālē maruṭṭimulai kōṭā laḻaittumala ...... raṇaimītē
கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணை கோல்போல் சுழற்றியிடை ...... யுடைநாணக்
kōpā vitaḻpparuka mārpō ṭaṇaittukaṇai kōlpōl cuḻaṟṟiyiṭai ...... yuṭaināṇak
கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிரு காதோ லையிற்றுவிழ ...... விளையாடுங்
kārpōl kuḻaṟcariya vēvā yataṭṭiyiru kātō laiyiṟṟuviḻa ...... viḷaiyāṭuṅ
காமா மயர்க்கியர்க ளூடே களித்துநம கானூ ருறைக்கலக ...... மொழியாதோ
kāmā mayarkkiyarka ḷūṭē kaḷittunama kāṉū ruṟaikkalaka ...... moḻiyātō
வீராணம் வெற்றிமுர சோடே தவிற்றிமிலை வேதா கமத்தொலிகள் ...... கடல்போல
vīrāṇam veṟṟimura cōṭē taviṟṟimilai vētā kamattolikaḷ ...... kaṭalpōla
வீறாய் முழக்கவரு சூரா ரிறக்கவிடும் வேலா திருத்தணியி ...... லுறைவோனே
vīṟāy muḻakkavaru cūrā riṟakkaviṭum vēlā tiruttaṇiyi ...... luṟaivōṉē
மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில் மாபோ தகத்தையருள் ...... குருநாதா
mārō ṉiṟakkanakai tātā tirucceviyil māpō takattaiyaruḷ ...... kurunātā
மாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகு மாலோ டனைத்துமகிழ் ...... பெருமாளே.
mālō ṉaḷittavaḷi yārmāl kaḷippaveku mālō ṭaṉaittumakiḻ ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).