Skip to content

பாடல் 268 · பாடல் 268

Song 268

pāṭal 268

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

கொந்து வார்குர வடியினு மடியவர் சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல கொண்ட வேதநன் முடியினு மருவியா ...... குருநாதா

kontu vārkura vaṭiyiṉu maṭiyavar cintai vārija naṭuviṉu neṟipala koṇṭa vētanaṉ muṭiyiṉu maruviyā ...... kurunātā

Report an error

கொங்கி லேர்தரு பழநியி லறுமுக செந்தில் காவல தணிகையி லிணையிலி கொந்து காவென மொழிதர வருசம ...... யவிரோத

koṅki lērtaru paḻaniyi laṟumuka centil kāvala taṇikaiyi liṇaiyili kontu kāveṉa moḻitara varucama ...... yavirōta

Report an error

தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர் சந்தி யாதது தனதென வருமொரு சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து ...... விரைநீபச்

tantra vātikaḷ peṟavari yatupiṟar canti yātatu taṉateṉa varumoru campra tāyamu mituveṉa vuraiceytu ...... virainīpac

Report an error

சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய கிண்கி ணீமுக விதபத யுகமலர் தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே

cañca rīkari karamural tamaṉiya kiṇki ṇīmuka vitapata yukamalar tanta pēraruḷ kaṉavilu naṉavilu ...... maṟavēṉē

Report an error

சிந்து வாரமு மிதழியு மிளநவ சந்த்ர ரேகையு மரவமு மணிதரு செஞ்ச டாதரர் திருமக வெனவரு ...... முருகோனே

cintu vāramu mitaḻiyu miḷanava cantra rēkaiyu maravamu maṇitaru ceñca ṭātarar tirumaka veṉavaru ...... murukōṉē

Report an error

செண்ப காடவி யினுமித ணினுமுயர் சந்த னாடவி யினுமுறை குறமகள் செம்பொ னூபுர கமலமும் வளையணி ...... புதுவேயும்

ceṇpa kāṭavi yiṉumita ṇiṉumuyar canta ṉāṭavi yiṉumuṟai kuṟamakaḷ cempo ṉūpura kamalamum vaḷaiyaṇi ...... putuvēyum

Report an error

இந்து வாண்முக வனசமு ம்ருகமத குங்கு மாசல யுகளமு மதுரித இந்த ளாம்ருத வசனமு முறுவலு ...... மபிராம

intu vāṇmuka vaṉacamu mrukamata kuṅku mācala yukaḷamu maturita inta ḷāmruta vacaṉamu muṟuvalu ...... mapirāma

Report an error

இந்த்ர கோபமு மரகத வடிவமு மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய ...... பெருமாளே.

intra kōpamu marakata vaṭivamu mintra cāpamu mirukuḻai yoṭuporu mintra nīlamu maṭaliṭai yeḻutiya ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).