பொரியப் பொரியப் பொலிமுத் துவடத் துகளிற் புதையத் ...... தனமீதே
poriyap poriyap polimut tuvaṭat tukaḷiṟ putaiyat ...... taṉamītē
பாடல் 285 · பாடல் 285
pāṭal 285
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
பொரியப் பொரியப் பொலிமுத் துவடத் துகளிற் புதையத் ...... தனமீதே
poriyap poriyap polimut tuvaṭat tukaḷiṟ putaiyat ...... taṉamītē
புரளப் புரளக் கறுவித் தறுகட் பொருவிற் சுறவக் ...... கொடிவேள்தோள்
puraḷap puraḷak kaṟuvit taṟukaṭ poruviṟ cuṟavak ...... koṭivēḷtōḷ
தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச் செயலற் றனள்கற் ...... பழியாதே
terivaik karivaip paravaik kurukic ceyalaṟ ṟaṉaḷkaṟ ...... paḻiyātē
செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத் தெரிவைக் குணர்வைத் ...... தரவேணும்
ceṟivuṟ ṟaṇaiyiṟ ṟuyiluṟ ṟarumait terivaik kuṇarvait ...... taravēṇum
சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச் சுரருக் குரிமைப் ...... புரிவோனே
corikaṟ pakanaṟ patiyait toḻukaic curaruk kurimaip ...... purivōṉē
சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச் சுருதிப் பொருளைப் ...... பகர்வோனே
cuṭarpoṟ kayilaik kaṭavuṭ kicaiyac curutip poruḷaip ...... pakarvōṉē
தரிகெட் டசுரப் படைகெட் டொழியத் தனிநெட் டயிலைத் ...... தொடும்வீரா
tarikeṭ ṭacurap paṭaikeṭ ṭoḻiyat taṉineṭ ṭayilait ...... toṭumvīrā
தவளப் பணிலத் தரளப் பழனத் தணிகைக் குமரப் ...... பெருமாளே.
tavaḷap paṇilat taraḷap paḻaṉat taṇikaik kumarap ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).