மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண் மதிப்பிள வாகும் ...... நுதலார்தம்
marukkula mēvuṅ kuḻaṟkaṉi vāyveṇ matippiḷa vākum ...... nutalārtam
பாடல் 289 · பாடல் 289
pāṭal 289
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண் மதிப்பிள வாகும் ...... நுதலார்தம்
marukkula mēvuṅ kuḻaṟkaṉi vāyveṇ matippiḷa vākum ...... nutalārtam
மயக்கினி லேநண் புறப்படு வேனுன் மலர்க்கழல் பாடுந் ...... திறநாடாத்
mayakkiṉi lēnaṇ puṟappaṭu vēṉuṉ malarkkaḻal pāṭun ...... tiṟanāṭāt
தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன் சமத்தறி யாவன் ...... பிலிமூகன்
tarukkaṉu tāran tuṇukkili lōpaṉ camattaṟi yāvaṉ ...... pilimūkaṉ
தலத்தினி லேவந் துறப்பணி யாதன் தனக்கினி யார்தஞ் ...... சபைதாராய்
talattiṉi lēvan tuṟappaṇi yātaṉ taṉakkiṉi yārtañ ...... capaitārāy
குருக்குல ராஜன் தனக்கொரு தூதன் குறட்பெல மாயன் ...... நவநீதங்
kurukkula rājaṉ taṉakkoru tūtaṉ kuṟaṭpela māyaṉ ...... navanītaṅ
குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன் குணத்ரய நாதன் ...... மருகோனே
kuṟittayil nēyaṉ tiruppayil mārpaṉ kuṇatraya nātaṉ ...... marukōṉē
திருக்குள நாளும் பலத்திசை மூசும் சிறப்பது றாஎண் ...... டிசையோடும்
tirukkuḷa nāḷum palatticai mūcum ciṟappatu ṟāeṇ ...... ṭicaiyōṭum
திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந் திருத்தணி மேவும் ...... பெருமாளே.
tiraikkaṭal cūḻum puvikkuyi rākun tiruttaṇi mēvum ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).