Skip to content

பாடல் 290 · பாடல் 290

Song 290

pāṭal 290

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர் மதிமு கத்திய ...... ரழகான

malaimu laicciyar kayalvi ḻicciyar matimu kattiya ...... raḻakāṉa

Report an error

மயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர் மனது ருக்கிக ...... ளணைமீதே

mayilna ṭaicciyar kuyilmo ḻicciyar maṉatu rukkika ...... ḷaṇaimītē

Report an error

கலைநெ கிழ்த்தியே உறவ ணைத்திடு கலவி யிற்றுவள் ...... பிணிதீராக்

kalaine kiḻttiyē uṟava ṇaittiṭu kalavi yiṟṟuvaḷ ...... piṇitīrāk

Report an error

கசட னைக்குண அசட னைப்புகல் கதியில் வைப்பது ...... மொருநாளே

kacaṭa ṉaikkuṇa acaṭa ṉaippukal katiyil vaippatu ...... morunāḷē

Report an error

குலகி ரிக்குல முருவ விட்டமர் குலவு சித்திர ...... முனைவேலா

kulaki rikkula muruva viṭṭamar kulavu cittira ...... muṉaivēlā

Report an error

குறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர் குமர சற்குண ...... மயில்வீரா

kuṟavar peṟṟiṭu ciṟumi yaippuṇar kumara caṟkuṇa ...... mayilvīrā

Report an error

தலம திற்புக லமர ருற்றிடர் தனைய கற்றிய ...... அருளாளா

talama tiṟpuka lamara ruṟṟiṭar taṉaiya kaṟṟiya ...... aruḷāḷā

Report an error

தருநி ரைத்தெழு பொழில்மி குத்திடு தணிம லைக்குயர் ...... பெருமாளே.

taruni raitteḻu poḻilmi kuttiṭu taṇima laikkuyar ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).