இறுகு மணிமுலை மருவு தரளமு மெரியு முமிழ்மதி ...... நிலவாலே
iṟuku maṇimulai maruvu taraḷamu meriyu mumiḻmati ...... nilavālē
பாடல் 404 · பாடல் 404
pāṭal 404
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
இறுகு மணிமுலை மருவு தரளமு மெரியு முமிழ்மதி ...... நிலவாலே
iṟuku maṇimulai maruvu taraḷamu meriyu mumiḻmati ...... nilavālē
இரவி யெனதுயிர் கவர வருகுழ லிசையி லுறுகட ...... லலையாலே
iravi yeṉatuyir kavara varukuḻa licaiyi luṟukaṭa ...... lalaiyālē
தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு சரமி லெளியெனு ...... மழியாதே
taṟukaṇ ratipati mataṉaṉ viṭukoṭu carami leḷiyeṉu ...... maḻiyātē
தருண மணிபொழி லருணை நகருறை சயில மிசையினில் ...... வரவேணும்
taruṇa maṇipoḻi laruṇai nakaruṟai cayila micaiyiṉil ...... varavēṇum
முறுகு திரிபுர மறுகு கனலெழ முறுவ லுடையவர் ...... குருநாதா
muṟuku tiripura maṟuku kaṉaleḻa muṟuva luṭaiyavar ...... kurunātā
முடிய கொடுமுடி யசுரர் பொடிபட முடுகு மரகத ...... மயில்வீரா
muṭiya koṭumuṭi yacurar poṭipaṭa muṭuku marakata ...... mayilvīrā
குறவர் மடமக ளமுத கனதன குவடு படுமொரு ...... திருமார்பா
kuṟavar maṭamaka ḷamuta kaṉataṉa kuvaṭu paṭumoru ...... tirumārpā
கொடிய சுடரிலை தனையு மெழுகடல் குறுக விடவல ...... பெருமாளே.
koṭiya cuṭarilai taṉaiyu meḻukaṭal kuṟuka viṭavala ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).