Skip to content

பாடல் 403 · பாடல் 403

Song 403

pāṭal 403

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

இருளளக மவிழமதி போத முத்த ரும்ப இலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள் இளகஇடை துவளவளை பூச லிட்டி ரங்க ...... எவராலும்

iruḷaḷaka maviḻamati pōta mutta rumpa ilakukayal puraḷairu pāra poṟṟa ṉaṅkaḷ iḷakaiṭai tuvaḷavaḷai pūca liṭṭi raṅka ...... evarālum

Report an error

எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தி யினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்த இதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்து ...... முனிவாறி

eḻutariya kalainekiḻa ācai metta vunti yiṉiyacuḻi maṭuviṉiṭai mūḻki naṭpo ṭanta itaḻamutu parukiyuyir tēka motti runtu ...... muṉivāṟi

Report an error

மருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து முகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்து மொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து ...... விடுபோதும்

marukukamaḻ malaramaḷi mīti ṉiṟpu kuntu mukavaṉaca malarkuviya mōka muṟṟa ḻintu moḻipataṟa vacamaḻiya ācai yiṟka viḻntu ...... viṭupōtum

Report an error

முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்த பழுதில்மறை பயிலுவஎ னாத ரித்து நின்று முநிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று ...... மறவேனே

muḻutuṇara vuṭaiyamutu māta vattu yarnta paḻutilmaṟai payiluvae ṉāta rittu niṉṟu munivarcurar toḻuturuku pāta patma meṉṟu ...... maṟavēṉē

Report an error

ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து கிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்து உலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து ...... சபையூடே

oruciṟuvaṉ maṇamatucey pōti leyttu vantu kiḻavaṭivu koṭumuṭuki vāca liṟpu kuntu ulakaṟiya ivaṉaṭimai yāme ṉakko ṇarntu ...... capaiyūṭē

Report an error

ஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று உரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்று உதறிமுறை யிடுபழைய வேத வித்தர் தந்த ...... சிறியோனே

orupaḻaiya carukumaṭi āva ṇattai yaṉṟu uramoṭava ṉatuvaliya vēki ḻikka niṉṟu utaṟimuṟai yiṭupaḻaiya vēta vittar tanta ...... ciṟiyōṉē

Report an error

அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த அமரரொடு பலர்முடுகி ஆழி யைக்க டைந்து ...... அமுதாக

ariyavuṭu patikaṭavi yāṭa kacci lampo ṭaḻakuvaṭa maṇimuṭivi yāḷa miṭṭa ḻunta amararoṭu palarmuṭuki āḻi yaikka ṭaintu ...... amutāka

Report an error

அருளுமரி திருமருக வார ணத்தை யன்று அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த அருணகிரி நகரிலெழு கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.

aruḷumari tirumaruka vāra ṇattai yaṉṟu aṟiviṉuṭa ṉorukoṭiyi lēta rittu kanta aruṇakiri nakarileḻu kōpu ratta marnta ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).