காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய காகளம டங்கவுமு ...... ழங்கு மதனாலே
kārumaru vumperuku cōlaimaru vuṅkoṭiya kākaḷama ṭaṅkavumu ...... ḻaṅku mataṉālē
பாடல் 413 · பாடல் 413
pāṭal 413
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய காகளம டங்கவுமு ...... ழங்கு மதனாலே
kārumaru vumperuku cōlaimaru vuṅkoṭiya kākaḷama ṭaṅkavumu ...... ḻaṅku mataṉālē
காலடர வம்பமளி மேலடர வந்துபொரு காமன்விடு விஞ்சுகணை ...... அஞ்சு மலராலே
kālaṭara vampamaḷi mēlaṭara vantuporu kāmaṉviṭu viñcukaṇai ...... añcu malarālē
ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென ஓரிரவு வந்தெனது ...... சிந்தை யழியாதே
ūrumula kumpaḻaiya pērukamvi ḷaintateṉa ōriravu vanteṉatu ...... cintai yaḻiyātē
ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு லாவியக டம்பமலர் ...... தந்த ருளுவாயே
ūṭiyiru koṅkaimicai kūṭivari vaṇṭiṉamu lāviyaka ṭampamalar ...... tanta ruḷuvāyē
ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய ராதிபர வும்படிநி ...... னைந்த குருநாதா
ārumara vumpiṟaiyu nīrumaṇi yuñcaṭaiya rātipara vumpaṭini ...... ṉainta kurunātā
ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவி யாளுமுர முந்திருவும் ...... அன்பு முடையோனே
āṟumuka muṅkuravu mēṟumayi luṅkuṟavi yāḷumura muntiruvum ...... aṉpu muṭaiyōṉē
மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரிய வேலையலை யும்பகையும் ...... அஞ்ச விடும்வேலா
mērumalai yumperiya cūrumalai yuṅkariya vēlaiyalai yumpakaiyum ...... añca viṭumvēlā
மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு வீதியிலெ ழுந்தருளி ...... நின்ற பெருமாளே.
mētiṉiyi ṟaiñcumaru ṇāpurivi ḷaṅkutiru vītiyile ḻuntaruḷi ...... niṉṟa perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).