கரதல முங்குறி கொண்ட கண்டமும் விரவியெ ழுந்துசு ருண்டு வண்டடர் கனவிய கொண்டைகு லைந்த லைந்திட ...... அதிபாரக்
karatala muṅkuṟi koṇṭa kaṇṭamum viraviye ḻuntucu ruṇṭu vaṇṭaṭar kaṉaviya koṇṭaiku lainta laintiṭa ...... atipārak
பாடல் 576 · பாடல் 576
pāṭal 576
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
கரதல முங்குறி கொண்ட கண்டமும் விரவியெ ழுந்துசு ருண்டு வண்டடர் கனவிய கொண்டைகு லைந்த லைந்திட ...... அதிபாரக்
karatala muṅkuṟi koṇṭa kaṇṭamum viraviye ḻuntucu ruṇṭu vaṇṭaṭar kaṉaviya koṇṭaiku lainta laintiṭa ...... atipārak
களபசு கந்தமி குந்த கொங்கைக ளிளகமு யங்கிம யங்கி யன்புசெய் கனியித ழுண்டுது வண்டு பஞ்சணை ...... மிசைவீழா
kaḷapacu kantami kunta koṅkaika ḷiḷakamu yaṅkima yaṅki yaṉpucey kaṉiyita ḻuṇṭutu vaṇṭu pañcaṇai ...... micaivīḻā
இரதம ருந்தியு றுங்க ருங்கயல் பொருதுசி வந்துகு விந்தி டும்படி யிதவிய வுந்தியெ னுந்த டந்தனி ...... லுற்முழ்கி
iratama runtiyu ṟuṅka ruṅkayal porutuci vantuku vinti ṭumpaṭi yitaviya vuntiye ṉunta ṭantaṉi ...... luṟmuḻki
இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய் வனிதையர் தங்கள்ம ருங்கி ணங்கிய இளமை கிழம்படு முன்ப தம்பெற ...... வுணர்வேனோ
iṉiyato riṉpamvi ḷainta ḷaintupoy vaṉitaiyar taṅkaḷma ruṅki ṇaṅkiya iḷamai kiḻampaṭu muṉpa tampeṟa ...... vuṇarvēṉō
பரத சிலம்புபு லம்பு மம்பத வரிமுக எண்கினு டன்கு ரங்கணி பணிவிடை சென்றுமு யன்ற குன்றணி ...... யிடையேபோய்ப்
parata cilampupu lampu mampata varimuka eṇkiṉu ṭaṉku raṅkaṇi paṇiviṭai ceṉṟumu yaṉṟa kuṉṟaṇi ...... yiṭaiyēpōyp
பகடியி லங்கை கலங்க அம்பொனின் மகுடசி ரந்தச முந்து ணிந்தெழு படியுந டுங்கவி ழும்ப னம்பழ ...... மெனவாகும்
pakaṭiyi laṅkai kalaṅka ampoṉiṉ makuṭaci rantaca muntu ṇinteḻu paṭiyuna ṭuṅkavi ḻumpa ṉampaḻa ...... meṉavākum
மருதமு தைந்தமு குந்த னன்புறு மருககு விந்தும லர்ந்த பங்கய வயலியில் வம்பவிழ் சண்ப கம்பெரி ...... யவிராலி
marutamu taintamu kunta ṉaṉpuṟu marukaku vintuma larnta paṅkaya vayaliyil vampaviḻ caṇpa kamperi ...... yavirāli
மலையில் விளங்கிய கந்த என்றுனை மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் ...... பெருமாளே.
malaiyil viḷaṅkiya kanta eṉṟuṉai makiḻvoṭu vanticey mainta ṉeṉṟaṉai vaḻivaḻi yaṉpucey toṇṭu koṇṭaruḷ ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).