காமாத்திர மாகி யிளைஞர்கள் வாழ்நாட்கொடு போகி யழகிய காதாட்டிய பார இருகுழை ...... யளவோடிக்
kāmāttira māki yiḷaiñarkaḷ vāḻnāṭkoṭu pōki yaḻakiya kātāṭṭiya pāra irukuḻai ...... yaḷavōṭik
பாடல் 578 · பாடல் 578
pāṭal 578
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
காமாத்திர மாகி யிளைஞர்கள் வாழ்நாட்கொடு போகி யழகிய காதாட்டிய பார இருகுழை ...... யளவோடிக்
kāmāttira māki yiḷaiñarkaḷ vāḻnāṭkoṭu pōki yaḻakiya kātāṭṭiya pāra irukuḻai ...... yaḷavōṭik
கார்போற்றவ ழோதி நிழல்தனி லார்வாட்கடை யீடு கனகொடு காலேற்றுவை வேலின் முனைகடை ...... யமதூதர்
kārpōṟṟava ḻōti niḻaltaṉi lārvāṭkaṭai yīṭu kaṉakoṭu kālēṟṟuvai vēliṉ muṉaikaṭai ...... yamatūtar
ஏமாப்பற மோக வியல்செய்து நீலோற்பல ஆசில் மலருட னேராட்டவி நோத மிடும்விழி ...... மடவார்பால்
ēmāppaṟa mōka viyalceytu nīlōṟpala ācil malaruṭa ṉērāṭṭavi nōta miṭumviḻi ...... maṭavārpāl
ஏகாப்பழி பூணு மருளற நீதோற்றிமு னாளு மடிமையை யீடேற்றுத லாலுன் வலிமையை ...... மறவேனே
ēkāppaḻi pūṇu maruḷaṟa nītōṟṟimu ṉāḷu maṭimaiyai yīṭēṟṟuta lāluṉ valimaiyai ...... maṟavēṉē
சீமாட்டியு மாய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி சீலோத்தமி நீலி சுரதிரி ...... புவநேசை
cīmāṭṭiyu māya tiripurai kālākkiṉi kōpa payiravi cīlōttami nīli curatiri ...... puvanēcai
சீகார்த்திகை யாய அறுவகை மாதாக்கள்கு மார னெனவெகு சீராட்டொடு பேண வடதிசை ...... கயிலாசக்
cīkārttikai yāya aṟuvakai mātākkaḷku māra ṉeṉaveku cīrāṭṭoṭu pēṇa vaṭaticai ...... kayilācak
கோமாற்குப தேச முபநிட வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள் கோதாட்டி ஸ்வாமி யெனவரு ...... மிளையோனே
kōmāṟkupa tēca mupaniṭa vētārttameyñ ñāṉa neṟiyaruḷ kōtāṭṭi svāmi yeṉavaru ...... miḷaiyōṉē
கோடாச்சிவ பூஜை பவுருஷ மாறாக்கொடை நாளு மருவிய கோனாட்டுவி ராலி மலையுறை ...... பெருமாளே.
kōṭācciva pūjai pavuruṣa māṟākkoṭai nāḷu maruviya kōṉāṭṭuvi rāli malaiyuṟai ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).