Skip to content

பாடல் 693 · பாடல் 693

Song 693

pāṭal 693

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்ற கலகமத வேள்தொ டுத்த ...... கணையாலுங்

kaḷapamaṇi yāra muṟṟa vaṉacamulai mītu koṟṟa kalakamata vēḷto ṭutta ...... kaṇaiyāluṅ

Report an error

கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள் பேச வுற்ற கனலெனவு லாவு வட்ட ...... மதியாலும்

kaṉimoḻimi ṉārkaḷ muṟṟu micaivacaikaḷ pēca vuṟṟa kaṉaleṉavu lāvu vaṭṭa ...... matiyālum

Report an error

வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீது ருக்கி வனிதை மடல் நாடி நித்த ...... நலியாதே

vaḷamaiyaṇi nīṭu puṣpa cayaṉaaṇai mītu rukki vaṉitai maṭal nāṭi nitta ...... naliyātē

Report an error

வரியளியு லாவு துற்ற இருபுயம ளாவி வெற்றி மலரணையில் நீய ணைக்க ...... வரவேணும்

variyaḷiyu lāvu tuṟṟa irupuyama ḷāvi veṟṟi malaraṇaiyil nīya ṇaikka ...... varavēṇum

Report an error

துளபமணி மார்ப சக்ர தரனரிமு ராரி சர்ப்ப துயிலதர னாத ரித்த ...... மருகோனே

tuḷapamaṇi mārpa cakra taraṉarimu rāri carppa tuyilatara ṉāta ritta ...... marukōṉē

Report an error

சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர துரகதக லாப பச்சை ...... மயில்வீரா

curutimaṟai vēḷvi mikka mayilainakar mēvu mukra turakataka lāpa paccai ...... mayilvīrā

Report an error

அளகைவணி கோர்கு லத்தில் வனிதையுயிர் மீள ழைப்ப அருள்பரவு பாடல் சொற்ற ...... குமரேசா

aḷakaivaṇi kōrku lattil vaṉitaiyuyir mīḷa ḻaippa aruḷparavu pāṭal coṟṟa ...... kumarēcā

Report an error

அருவரையை நீறெ ழுப்பி நிருதர்தமை வேர றுத்து அமரர்பதி வாழ வைத்த ...... பெருமாளே.

aruvaraiyai nīṟe ḻuppi nirutartamai vēra ṟuttu amararpati vāḻa vaitta ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).