உ ரையொ ழிந்துநின் றவர்பொரு ளெளிதென வுணர்வு கண்டுபின் திரவிய இகலரு ளொருவர் நண்படைந் துளதிரள் கவர்கொடு ...... பொருள்தேடி
u raiyo ḻintuniṉ ṟavarporu ḷeḷiteṉa vuṇarvu kaṇṭupiṉ tiraviya ikalaru ḷoruvar naṇpaṭain tuḷatiraḷ kavarkoṭu ...... poruḷtēṭi
பாடல் 825 · பாடல் 825
pāṭal 825
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
உ ரையொ ழிந்துநின் றவர்பொரு ளெளிதென வுணர்வு கண்டுபின் திரவிய இகலரு ளொருவர் நண்படைந் துளதிரள் கவர்கொடு ...... பொருள்தேடி
u raiyo ḻintuniṉ ṟavarporu ḷeḷiteṉa vuṇarvu kaṇṭupiṉ tiraviya ikalaru ḷoruvar naṇpaṭain tuḷatiraḷ kavarkoṭu ...... poruḷtēṭi
உ ளம கிழ்ந்துவந் துரிமையில் நினைவுறு சகல இந்த்ரதந்த் ரமும்வல விலைமக ளுபய கொங்கையும் புளகித மெழமிக ...... வுறவாயே
u ḷama kiḻntuvan turimaiyil niṉaivuṟu cakala intratant ramumvala vilaimaka ḷupaya koṅkaiyum puḷakita meḻamika ...... vuṟavāyē
விரக வன்புடன் பரிமள மிகவுள முழுகி நன்றியொன் றிடமல ரமளியில் வெகுவி தம்புரிந் தமர்பொரு சமயம ...... துறுநாளே
viraka vaṉpuṭaṉ parimaḷa mikavuḷa muḻuki naṉṟiyoṉ ṟiṭamala ramaḷiyil vekuvi tampurin tamarporu camayama ...... tuṟunāḷē
விளைத னங்கவர்ந் திடுபல மனதிய ரயல்த னங்களுந் தனதென நினைபவர் வெகுளி யின்கணின் றிழிதொழி லதுவற ...... அருள்வாயே
viḷaita ṉaṅkavarn tiṭupala maṉatiya rayalta ṉaṅkaḷun taṉateṉa niṉaipavar vekuḷi yiṉkaṇiṉ ṟiḻitoḻi latuvaṟa ...... aruḷvāyē
செருதி னைந்திடுஞ் சினவலி யசுரர்க ளுகமு டிந்திடும் படியெழு பொழுதிடை செகம டங்கலும் பயமற மயில்மிசை ...... தனிலேறித்
ceruti ṉaintiṭuñ ciṉavali yacurarka ḷukamu ṭintiṭum paṭiyeḻu poḻutiṭai cekama ṭaṅkalum payamaṟa mayilmicai ...... taṉilēṟit
திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனந் தெனதென தெனதென திமிதி மிந்திமிந் திமிதிமி திமியென ...... வருபூதங்
tikuti kuntikun tikutiku tikutiku teṉate ṉanteṉan teṉateṉa teṉateṉa timiti mintimin timitimi timiyeṉa ...... varupūtaṅ
கரையி றந்திடுங் கடலென மருவிய வுதிர மொண்டுமுண் டிடஅமர் புரிபவ கலவி யன்புடன் குறமகள் தழுவிய ...... முருகோனே
karaiyi ṟantiṭuṅ kaṭaleṉa maruviya vutira moṇṭumuṇ ṭiṭaamar puripava kalavi yaṉpuṭaṉ kuṟamakaḷ taḻuviya ...... murukōṉē
கனமு றுந்த்ரியம் பகபுர மருவிய கவுரி தந்தகந் தறுமுக எனஇரு கழல்ப ணிந்துநின் றமரர்கள் தொழவல ...... பெருமாளே.
kaṉamu ṟuntriyam pakapura maruviya kavuri tantakan taṟumuka eṉairu kaḻalpa ṇintuniṉ ṟamararkaḷ toḻavala ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).