கன்ன லொத்த மொழிச்சொல் வேசியர் வன்ம னத்தை யுருக்கு லீலையர் கண்வெ ருட்டி விழித்த பார்வையர் ...... இதமாகக்
kaṉṉa lotta moḻiccol vēciyar vaṉma ṉattai yurukku līlaiyar kaṇve ruṭṭi viḻitta pārvaiyar ...... itamākak
பாடல் 826 · பாடல் 826
pāṭal 826
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
கன்ன லொத்த மொழிச்சொல் வேசியர் வன்ம னத்தை யுருக்கு லீலையர் கண்வெ ருட்டி விழித்த பார்வையர் ...... இதமாகக்
kaṉṉa lotta moḻiccol vēciyar vaṉma ṉattai yurukku līlaiyar kaṇve ruṭṭi viḻitta pārvaiyar ...... itamākak
கையி லுற்ற பொருட்கள் யாவையும் வையெ னக்கை விரிக்கும் வீணியர் கைகள் பற்றி யிழுத்து மார்முலை ...... தனில்வீழப்
kaiyi luṟṟa poruṭkaḷ yāvaiyum vaiye ṉakkai virikkum vīṇiyar kaikaḷ paṟṟi yiḻuttu mārmulai ...... taṉilvīḻap
பின்னி விட்ட சடைக்கு ளேமலர் தன்னை வைத்து முடிப்பை நீயவி ழென்னு மற்ப குணத்த ராசையி ...... லுழலாமற்
piṉṉi viṭṭa caṭaikku ḷēmalar taṉṉai vaittu muṭippai nīyavi ḻeṉṉu maṟpa kuṇatta rācaiyi ...... luḻalāmaṟ
பெய்யு முத்தமி ழிற்ற யாபர என்ன முத்தர் துதிக்க வேமகிழ் பிஞ்ஞ கர்க்குரை செப்பு நாயக ...... அருள்தாராய்
peyyu muttami ḻiṟṟa yāpara eṉṉa muttar tutikka vēmakiḻ piñña karkkurai ceppu nāyaka ...... aruḷtārāy
வன்னி யொத்த படைக்க லாதிய துன்னு கைக்கொ ளரக்கர் மாமுடி மண்ணி லற்று விழச்செய் மாதவன் ...... மருகோனே
vaṉṉi yotta paṭaikka lātiya tuṉṉu kaikko ḷarakkar māmuṭi maṇṇi laṟṟu viḻaccey mātavaṉ ...... marukōṉē
மன்னு பைப்பணி யுற்ற நீள்விட மென்ன விட்டு முடுக்கு சூரனை மல்லு டற்று முருட்டு மார்பற ...... அடைவாகச்
maṉṉu paippaṇi yuṟṟa nīḷviṭa meṉṉa viṭṭu muṭukku cūraṉai mallu ṭaṟṟu muruṭṭu mārpaṟa ...... aṭaivākac
சென்னி பற்றி யறுத்த கூரிய மின்னி ழைத்த திறத்த வேலவ செய்ய பொற்புன வெற்பு மானணை ...... மணிமார்பா
ceṉṉi paṟṟi yaṟutta kūriya miṉṉi ḻaitta tiṟatta vēlava ceyya poṟpuṉa veṟpu māṉaṇai ...... maṇimārpā
செம்ம னத்தர் மிகுத்த மாதவர் நன்மை பெற்ற வுளத்தி லேமலர் செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.
cemma ṉattar mikutta mātavar naṉmai peṟṟa vuḷatti lēmalar celva cikkal nakarkkuḷ mēviya ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).