பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள் பஞ்செனஎ ரிந்துபொடி ...... யங்கமாகிப்
pañcapula ṉumpaḻaiya raṇṭuviṉai yumpiṇikaḷ pañceṉae rintupoṭi ...... yaṅkamākip
பாடல் 892 · பாடல் 892
pāṭal 892
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள் பஞ்செனஎ ரிந்துபொடி ...... யங்கமாகிப்
pañcapula ṉumpaḻaiya raṇṭuviṉai yumpiṇikaḷ pañceṉae rintupoṭi ...... yaṅkamākip
பண்டறவுடன்பழைய தொண்டர்களு டன்பழகி பஞ்சவர்வி யன்பதியு ...... டன்குலாவக்
paṇṭaṟavuṭaṉpaḻaiya toṇṭarkaḷu ṭaṉpaḻaki pañcavarvi yaṉpatiyu ...... ṭaṉkulāvak
குஞ்சரமு கன்குணமொ டந்தவனம் வந்துலவ கொஞ்சியசி லம்புகழல் ...... விந்துநாதங்
kuñcaramu kaṉkuṇamo ṭantavaṉam vantulava koñciyaci lampukaḻal ...... vintunātaṅ
கொஞ்சமயி லினற்புறமெல் வந்தருளி யென்கவலை கொன்றருள்நி றைந்தகழ ...... லின்றுதாராய்
koñcamayi liṉaṟpuṟamel vantaruḷi yeṉkavalai koṉṟaruḷni ṟaintakaḻa ...... liṉṟutārāy
எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழல இன்பரச கொங்கைகர ...... முங்கொளாமல்
eñciyiṭai yuñcuḻala ampuviḻi yuñcuḻala iṉparaca koṅkaikara ...... muṅkoḷāmal
எந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரள இந்துநுத லும்புரள ...... கங்குல்மேகம்
entavuṭai cintapela miñciyamu tampuraḷa intunuta lumpuraḷa ...... kaṅkulmēkam
அஞ்சுமள கம்புரள மென்குழைக ளும்புரள அம்பொனுரு மங்கைமண ...... முண்டபாலா
añcumaḷa kampuraḷa meṉkuḻaika ḷumpuraḷa ampoṉuru maṅkaimaṇa ...... muṇṭapālā
அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியில் அண்டரய னும்பரவு ...... தம்பிரானே.
aṉparkula vuntirune ṭuṅkaḷava ḷampatiyil aṇṭaraya ṉumparavu ...... tampirāṉē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).