வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம ராஜ நடையினு மம்பதி னும்பெரு வாதை வகைசெய்க ருங்கணு மெங்கணு ...... மரிதான
vāḷiṉ muṉaiyiṉu nañciṉum veñcama rāja naṭaiyiṉu mampati ṉumperu vātai vakaiceyka ruṅkaṇu meṅkaṇu ...... maritāṉa
பாடல் 916 · பாடல் 916
pāṭal 916
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம ராஜ நடையினு மம்பதி னும்பெரு வாதை வகைசெய்க ருங்கணு மெங்கணு ...... மரிதான
vāḷiṉ muṉaiyiṉu nañciṉum veñcama rāja naṭaiyiṉu mampati ṉumperu vātai vakaiceyka ruṅkaṇu meṅkaṇu ...... maritāṉa
வாரி யமுதுபொ சிந்துக சிந்தசெ வாயு நகைமுக வெண்பலு நண்புடன் வாரு மிருமெனு மின்சொலு மிஞ்சிய ...... பனிநீருந்
vāri yamutupo cintuka cintace vāyu nakaimuka veṇpalu naṇpuṭaṉ vāru mirumeṉu miṉcolu miñciya ...... paṉinīrun
தூளி படுநவ குங்கும முங்குளி ரார மகில்புழு கும்புனை சம்ப்ரம சோதி வளர்வன கொங்கையு மங்கையு ...... மெவரேனுந்
tūḷi paṭunava kuṅkuma muṅkuḷi rāra makilpuḻu kumpuṉai camprama cōti vaḷarvaṉa koṅkaiyu maṅkaiyu ...... mevarēṉun
தோயு மளறெனி தம்பமு முந்தியு மாயை குடிகொள்கு டம்பையுள் மன்பயில் சூளை யரையெதிர் கண்டும ருண்டிட ...... லொழிவேனோ
tōyu maḷaṟeṉi tampamu muntiyu māyai kuṭikoḷku ṭampaiyuḷ maṉpayil cūḷai yaraiyetir kaṇṭuma ruṇṭiṭa ...... loḻivēṉō
காளி திரிபுரை யந்தரி சுந்தரி நீலி கவுரிப யங்கரி சங்கரி காரு ணியசிவை குண்டலி சண்டிகை ...... த்ரிபுராரி
kāḷi tiripurai yantari cuntari nīli kavuripa yaṅkari caṅkari kāru ṇiyacivai kuṇṭali caṇṭikai ...... tripurāri
காதல் மனைவிப ரம்பரை யம்பிகை ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை கான நடனமு கந்தவள் செந்திரு ...... அயன்மாது
kātal maṉaivipa ramparai yampikai āti malaimakaḷ maṅkalai piṅkalai kāṉa naṭaṉamu kantavaḷ centiru ...... ayaṉmātu
வேளி னிரதிய ருந்ததி யிந்திர தேவி முதல்வர்வ ணங்குத்ரி யம்பகி மேக வடிவர்பின் வந்தவள் தந்தரு ...... ளிளையோனே
vēḷi ṉiratiya runtati yintira tēvi mutalvarva ṇaṅkutri yampaki mēka vaṭivarpiṉ vantavaḷ tantaru ...... ḷiḷaiyōṉē
வேலு மயிலுநி னைந்தவர் தந்துயர் தீர வருள்தரு கந்தநி ரந்தர மேலை வயலையு கந்துள நின்றருள் ...... பெருமாளே.
vēlu mayiluni ṉaintavar tantuyar tīra varuḷtaru kantani rantara mēlai vayalaiyu kantuḷa niṉṟaruḷ ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).