Skip to content

பாடல் 917 · பாடல் 917

Song 917

pāṭal 917

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

24 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.

விகட பரிமள ம்ருகமத இமசல வகிர படிரமு மளவிய களபமு மட்டித்தி தழ்த்தொடைமு டித்துத்தெ ருத்தலையில்

vikaṭa parimaḷa mrukamata imacala vakira paṭiramu maḷaviya kaḷapamu maṭṭitti taḻttoṭaimu ṭittutte ruttalaiyil

Report an error

உ லவி யிளைஞர்கள் பொருளுட னுயிர்கவர் கலவி விதவிய னரிவையர் மருள்வலை யிட்டுத்து வக்கியிடர் பட்டுத் தியக்கியவர்

u lavi yiḷaiñarkaḷ poruḷuṭa ṉuyirkavar kalavi vitaviya ṉarivaiyar maruḷvalai yiṭṭuttu vakkiyiṭar paṭṭut tiyakkiyavar

Report an error

விரவு நவமணி முகபட எதிர்பொரு பரண புளகித இளமுலை யுரமிசை தைக்கக் கழுத்தொடுகை யொக்கப்பி ணித்திறுகி ...... யன்புகூர

viravu navamaṇi mukapaṭa etirporu paraṇa puḷakita iḷamulai yuramicai taikkak kaḻuttoṭukai yokkappi ṇittiṟuki ...... yaṉpukūra

Report an error

விபுத ரமுதென மதுவென அறுசுவை அபரி மிதமென இலவிதழ் முறைமுறை துய்த்துக்க ளித்துநகம் வைத்துப்ப லிற்குறியின்

viputa ramuteṉa matuveṉa aṟucuvai apari mitameṉa ilavitaḻ muṟaimuṟai tuyttukka ḷittunakam vaittuppa liṟkuṟiyiṉ

Report an error

வரையு முறைசெய்து முனிவரு மனவலி கரையு மரிசன பரிசன ப்ரியவுடை தொட்டுக்கு லைத்துநுதல் பொட்டுப்ப டுத்திமதர்

varaiyu muṟaiceytu muṉivaru maṉavali karaiyu maricaṉa paricaṉa priyavuṭai toṭṭukku laittunutal poṭṭuppa ṭuttimatar

Report an error

விழிகள் குழைபொர மதிமுகம் வெயர்வெழ மொழிகள் பதறிட ரதிபதி கலைவழி கற்றிட்ட புட்குரல்மி டற்றிற்ப யிற்றிமடு ...... வுந்திமூழ்கிப்

viḻikaḷ kuḻaipora matimukam veyarveḻa moḻikaḷ pataṟiṭa ratipati kalaivaḻi kaṟṟiṭṭa puṭkuralmi ṭaṟṟiṟpa yiṟṟimaṭu ...... vuntimūḻkip

Report an error

புகடு வெகுவித கரணமு மருவிய வகையின் முகிலென இருளென வனமென ஒப்பித்த நெய்த்தபல புட்பக்கு ழற்சரிய

pukaṭu vekuvita karaṇamu maruviya vakaiyiṉ mukileṉa iruḷeṉa vaṉameṉa oppitta neyttapala puṭpakku ḻaṟcariya

Report an error

அமுத நிலைமல ரடிமுதல் முடிகடை குமுத பதிகலை குறைகலை நிறைகலை சித்தத்த ழுத்தியநு வர்க்கத்து ருக்கியொரு

amuta nilaimala raṭimutal muṭikaṭai kumuta patikalai kuṟaikalai niṟaikalai cittatta ḻuttiyanu varkkattu rukkiyoru

Report an error

பொழுதும் விடலரி தெனுமநு பவமவை முழுது மொழிவற மருவிய கலவியி தத்துப்ரி யப்படந டித்துத்து வட்சியினில் ...... நைந்துசோரப்

poḻutum viṭalari teṉumanu pavamavai muḻutu moḻivaṟa maruviya kalaviyi tattupri yappaṭana ṭittuttu vaṭciyiṉil ...... naintucōrap

Report an error

புணரு மிதுசிறு சுகமென இகபரம் உ ணரு மறிவிலி ப்ரைமைதரு திரிமலம் அற்றுக்க ருத்தொருமை யுற்றுப்பு லத்தலையில்

puṇaru mituciṟu cukameṉa ikaparam u ṇaru maṟivili praimaitaru tirimalam aṟṟukka ruttorumai yuṟṟuppu lattalaiyil

Report an error

மறுகு பொறிகழல் நிறுவியெ சிறிதுமெய் உ ணர்வு முணர்வுற வழுவற வொருஜக வித்தைக்கு ணத்ரயமும் நிர்த்தத்து வைத்துமறை

maṟuku poṟikaḻal niṟuviye ciṟitumey u ṇarvu muṇarvuṟa vaḻuvaṟa vorujaka vittaikku ṇatrayamum nirttattu vaittumaṟai

Report an error

புகலு மநுபவ வடிவினை யளவறு அகில வெளியையு மொளியையு மறிசிவ தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை ...... யென்றுசேர்வேன்

pukalu manupava vaṭiviṉai yaḷavaṟu akila veḷiyaiyu moḷiyaiyu maṟiciva tatvapra cittitaṉai mutticci vakkaṭalai ...... yeṉṟucērvēṉ

Report an error

திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட

tikuṭa tikukuṭa tikukuṭa tikukuṭa takuṭa takukuṭa takukuṭa takukuṭa tikkutti kuttikuṭa takkutta kuttakuṭa

Report an error

டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட டமட டமமட டமமட டமமட டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட

ṭumiṭa ṭumimiṭa ṭumimiṭa ṭumimiṭa ṭamaṭa ṭamamaṭa ṭamamaṭa ṭamamaṭa ṭuṭṭuṭṭu ṭuṭṭumiṭa ṭaṭṭaṭṭa ṭaṭṭamaṭa

Report an error

திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி ...... என்றுபேரி

tikurti tikutiku tikukurti tikukurti takurti takutaku takukurti takukurti tikkutti kuttikurti takkutta kuttakurti ...... eṉṟupēri

Report an error

திமிலை கரடிகை பதலைச லரிதவில் தமர முரசுகள் குடமுழ வொடுதுடி சத்தக்க ணப்பறைகள் மெத்தத்தொ னித்ததிர

timilai karaṭikai patalaica laritavil tamara muracukaḷ kuṭamuḻa voṭutuṭi cattakka ṇappaṟaikaḷ mettatto ṉittatira

Report an error

அசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதி குசல பசுபதி குருவென விருதுகள் ஒத்தத்தி ரட்பலவு முற்றிக்க லிக்கஎழு

acurar kulaari amararkaḷ jayapati kucala pacupati kuruveṉa virutukaḷ ottatti raṭpalavu muṟṟikka likkaeḻu

Report an error

சிகர கொடுமுடி கிடுகிடு கிடுவென மகர சலநிதி மொகுமொகு மொகுவென எட்டுத்தி சைக்களிறு மட்டற்ற றப்பிளிற ...... நின்றசேடன்

cikara koṭumuṭi kiṭukiṭu kiṭuveṉa makara calaniti mokumoku mokuveṉa eṭṭutti caikkaḷiṟu maṭṭaṟṟa ṟappiḷiṟa ...... niṉṟacēṭaṉ

Report an error

மகுட சிரதலம் நெறுநெறு நெறுவென அகில புவனமும் ஹரஹர ஹரவென நக்ஷத்ர முக்கிவிழ வக்கிட்ட துட்டகுண

makuṭa ciratalam neṟuneṟu neṟuveṉa akila puvaṉamum harahara haraveṉa nakṣatra mukkiviḻa vakkiṭṭa tuṭṭakuṇa

Report an error

நிருதர் தலையற வடிவெனு மலைசொரி குருதி யருவியின் முழுகிய கழுகுகள் பக்கப்ப ழுத்தவுடல் செக்கச்சி வத்துவிட

nirutar talaiyaṟa vaṭiveṉu malaicori kuruti yaruviyiṉ muḻukiya kaḻukukaḷ pakkappa ḻuttavuṭal cekkacci vattuviṭa

Report an error

வயிறு சரிகுடல் நரிதின நிணமவை எயிறு அலைகள் நெடுகிய குறளிகள் பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்த லைப்பரவி ...... யும்பர்வாழ

vayiṟu carikuṭal naritiṉa niṇamavai eyiṟu alaikaḷ neṭukiya kuṟaḷikaḷ pakṣittu nirttamiṭa rakṣitta laipparavi ...... yumparvāḻa

Report an error

மடிய அவுணர்கள் குரகத கஜரத கடக முடைபட வெடிபட எழுகிரி அற்றுப்ப றக்கவெகு திக்குப்ப டித்துநவ

maṭiya avuṇarkaḷ kurakata kajarata kaṭaka muṭaipaṭa veṭipaṭa eḻukiri aṟṟuppa ṟakkaveku tikkuppa ṭittunava

Report an error

நதிகள் குழைதர இபபதி மகிழ்வுற அமர்செய் தயில்கையில் வெயிலெழ மயில்மிசை அக்குக்கு டக்கொடிசெ ருக்கப்பெ ருக்கமுடன்

natikaḷ kuḻaitara ipapati makiḻvuṟa amarcey tayilkaiyil veyileḻa mayilmicai akkukku ṭakkoṭice rukkappe rukkamuṭaṉ

Report an error

வயலி நகருறை சரவண பவகுக இயலு மிசைகளு நடனமும் வகைவகை சத்யப்ப டிக்கினித கஸ்த்யர்க்கு ணர்த்தியருள் ...... தம்பிரானே.

vayali nakaruṟai caravaṇa pavakuka iyalu micaikaḷu naṭaṉamum vakaivakai catyappa ṭikkiṉita kastyarkku ṇarttiyaruḷ ...... tampirāṉē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).