புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி யெறியக் கொங்கையி ரண்டெனு மதகரி பொரமுத் தந்தரு மிங்கித நயவித ...... மதனாலே
puruvac ceñcilai koṇṭiru kaṇaiviḻi yeṟiyak koṅkaiyi raṇṭeṉu matakari poramut tantaru miṅkita nayavita ...... mataṉālē
பாடல் 961 · பாடல் 961
pāṭal 961
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி யெறியக் கொங்கையி ரண்டெனு மதகரி பொரமுத் தந்தரு மிங்கித நயவித ...... மதனாலே
puruvac ceñcilai koṇṭiru kaṇaiviḻi yeṟiyak koṅkaiyi raṇṭeṉu matakari poramut tantaru miṅkita nayavita ...... mataṉālē
புகலச் சங்கிசை கண்டம தனிலெழ உ ருவச் செந்துவர் தந்தத ரமுமருள் புதுமைத் தம்பல முஞ்சில தரவரு ...... மனதாலே
pukalac caṅkicai kaṇṭama taṉileḻa u ruvac centuvar tantata ramumaruḷ putumait tampala muñcila taravaru ...... maṉatālē
பருகித் தின்றிட லஞ்சுக மெனமன துருகிக் குங்கும சந்தன மதிவியர் படியச் சம்ப்ரம ரஞ்சித மருள்கல ...... வியினாலே
parukit tiṉṟiṭa lañcuka meṉamaṉa turukik kuṅkuma cantaṉa mativiyar paṭiyac camprama rañcita maruḷkala ...... viyiṉālē
பலருக் குங்கடை யென்றனை யிகழவு மயலைத் தந்தரு மங்கையர் தமைவெகு பலமிற் கொண்டிடு வண்டனு முனதடி ...... பணிவேனோ
palaruk kuṅkaṭai yeṉṟaṉai yikaḻavu mayalait tantaru maṅkaiyar tamaiveku palamiṟ koṇṭiṭu vaṇṭaṉu muṉataṭi ...... paṇivēṉō
திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை வரவச் சங்கொடு வந்திடு முழையுடல் சிதறக் கண்டக வெங்கர னொடுதிரி ...... சிரனோடு
tiruvaik koṇṭoru taṇṭaka vaṉamicai varavac caṅkoṭu vantiṭu muḻaiyuṭal citaṟak kaṇṭaka veṅkara ṉoṭutiri ...... ciraṉōṭu
திரமிற் றங்கிய கும்பக னொருபது தலைபெற் றும்பரை வென்றிடு மவனொடு சிலையிற் கொன்றமு குந்தன லகமகிழ் ...... மருகோனே
tiramiṟ ṟaṅkiya kumpaka ṉorupatu talaipeṟ ṟumparai veṉṟiṭu mavaṉoṭu cilaiyiṟ koṉṟamu kuntaṉa lakamakiḻ ...... marukōṉē
மருவைத் துன்றிய பைங்குழ லுமையவள் சிவனுக் கன்பரு ளம்பிகை கவுரிகை மலையத் தன்தரு சங்கரி கருணைசெய் ...... முருகோனே
maruvait tuṉṟiya paiṅkuḻa lumaiyavaḷ civaṉuk kaṉparu ḷampikai kavurikai malaiyat taṉtaru caṅkari karuṇaicey ...... murukōṉē
வடவெற் பங்கய லன்றணி குசசர வணையிற் றங்கிய பங்கய முகதமிழ் மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் ...... பெருமாளே.
vaṭaveṟ paṅkaya laṉṟaṇi kucacara vaṇaiyiṟ ṟaṅkiya paṅkaya mukatamiḻ maturaic caṅkili maṇṭapa imaiyavar ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).