Skip to content

பாடல் 962 · பாடல் 962

Song 962

pāṭal 962

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

முகமெ லாநெய் பூசித் தயங்கு நுதலின் மீதி லேபொட் டணிந்து முருகு மாலை யோதிக் கணிந்த ...... மடமாதர்

mukame lāney pūcit tayaṅku nutaliṉ mīti lēpoṭ ṭaṇintu muruku mālai yōtik kaṇinta ...... maṭamātar

Report an error

முதிரு மார பாரத் தனங்கள் மிசையி லாவி யாய்நெக் கழிந்து முடிய மாலி லேபட் டலைந்து ...... பொருள்தேடிச்

mutiru māra pārat taṉaṅkaḷ micaiyi lāvi yāynek kaḻintu muṭiya māli lēpaṭ ṭalaintu ...... poruḷtēṭic

Report an error

செகமெ லாமு லாவிக் கரந்து திருட னாகி யேசற் றுழன்று திமிர னாகி யோடிப் பறந்து ...... திரியாமல்

cekame lāmu lāvik karantu tiruṭa ṉāki yēcaṟ ṟuḻaṉṟu timira ṉāki yōṭip paṟantu ...... tiriyāmal

Report an error

தெளியு ஞான மோதிக் கரைந்து சிவபு ராண நூலிற் பயின்று செறியு மாறு தாளைப் பரிந்து ...... தரவேணும்

teḷiyu ñāṉa mōtik karaintu civapu rāṇa nūliṟ payiṉṟu ceṟiyu māṟu tāḷaip parintu ...... taravēṇum

Report an error

அகர மாதி யாமக்ஷ ரங்க ளவனி கால்வி ணாரப் பொடங்கி அடைய வேக ரூபத்தி லொன்றி ...... முதலாகி

akara māti yāmakṣa raṅka ḷavaṉi kālvi ṇārap poṭaṅki aṭaiya vēka rūpatti loṉṟi ...... mutalāki

Report an error

அமரர் காண வேயத்த மன்றில் அரிவை பாட ஆடிக் கலந்த அமல நாத னார்முற் பயந்த ...... முருகோனே

amarar kāṇa vēyatta maṉṟil arivai pāṭa āṭik kalanta amala nāta ṉārmuṟ payanta ...... murukōṉē

Report an error

சகல வேத சாமுத்ரி யங்கள் சமய மாறு லோகத்ர யங்கள் தரும நீதி சேர்தத் துவங்கள் ...... தவயோகம்

cakala vēta cāmutri yaṅkaḷ camaya māṟu lōkatra yaṅkaḷ taruma nīti cērtat tuvaṅkaḷ ...... tavayōkam

Report an error

தவறி லாம லாளப் பிறந்த தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று தவிர ஆல வாயிற் சிறந்த ...... பெருமாளே.

tavaṟi lāma lāḷap piṟanta tamiḻcey māṟar kūṉvep poṭaṉṟu tavira āla vāyiṟ ciṟanta ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).