Skip to content

பாடல் 963 · பாடல் 963

Song 963

pāṭal 963

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

ஏலப்பனி நீரணி மாதர்கள் கானத்தினு மேயுற வாடிடு மீரத்தினு மேவளை சேர்கர ...... மதனாலும்

ēlappaṉi nīraṇi mātarkaḷ kāṉattiṉu mēyuṟa vāṭiṭu mīrattiṉu mēvaḷai cērkara ...... mataṉālum

Report an error

ஏமக்கிரி மீதினி லேகரு நீலக்கய மேறிய னேரென ஏதுற்றிடு மாதன மீதினு ...... மயலாகிச்

ēmakkiri mītiṉi lēkaru nīlakkaya mēṟiya ṉēreṉa ētuṟṟiṭu mātaṉa mītiṉu ...... mayalākic

Report an error

சோலைக்குயில் போல்மொழி யாலுமெ தூசுற்றிடு நூலிடை யாலுமெ தோமிற்கத லீநிக ராகிய ...... தொடையாலும்

cōlaikkuyil pōlmoḻi yālume tūcuṟṟiṭu nūliṭai yālume tōmiṟkata līnika rākiya ...... toṭaiyālum

Report an error

சோமப்ரபை வீசிய மாமுக சாலத்திலு மாகடு வேல்விழி சூதத்தினு நானவ மேதின ...... முழல்வேனோ

cōmaprapai vīciya māmuka cālattilu mākaṭu vēlviḻi cūtattiṉu nāṉava mētiṉa ...... muḻalvēṉō

Report an error

ஆலப்பணி மீதினில் மாசறு மாழிக்கிடை யேதுயில் மாதவ னானைக்கினி தாயுத வீயருள் ...... நெடுமாயன்

ālappaṇi mītiṉil mācaṟu māḻikkiṭai yētuyil mātava ṉāṉaikkiṉi tāyuta vīyaruḷ ...... neṭumāyaṉ

Report an error

ஆதித்திரு நேமியன் வாமன னீலப்புயல் நேர்தரு மேனியன் ஆரத்துள வார்திரு மார்பினன் ...... மருகோனே

ātittiru nēmiyaṉ vāmaṉa ṉīlappuyal nērtaru mēṉiyaṉ ārattuḷa vārtiru mārpiṉaṉ ...... marukōṉē

Report an error

கோலக்கய மாவுரி போர்வையர் ஆலக்கடு வார்கள் நாயகர் கோவிற்பொறி யால்வரு மாசுத ...... குமரேசா

kōlakkaya māvuri pōrvaiyar ālakkaṭu vārkaḷ nāyakar kōviṟpoṟi yālvaru mācuta ...... kumarēcā

Report an error

கூர்முத்தமிழ் வாணர்கள் வீறிய சீரற்புத மாநக ராகிய கூடற்பதி மீதினில் மேவிய ...... பெருமாளே.

kūrmuttamiḻ vāṇarkaḷ vīṟiya cīraṟputa mānaka rākiya kūṭaṟpati mītiṉil mēviya ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).