அதிகாரம் 15 · பிறனில் விழையாமை
Non-Desiring of Another Man'S Wife
piṟaṉil viḻaiyāmai
॥
Kurals 141–150, on non-desiring of another man's wife.
10 verses·Tamil with translation
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
piṟaṉporuḷāḷ peṭṭoḻukum pētaimai ñālattu
aṟamporuḷ kaṇṭārkaṇ il.
Behold the men whose eyes are turned towards righteousness and towards wealth: they commit not the folly of desiring another man's wife.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
aṟaṉkaṭai niṉṟāruḷ ellām piṟaṉkaṭai
niṉṟāriṉ pētaiyār il.
Among those that have fallen from virtue there is no greater fool than he that standeth at his neighbour's threshold.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துஒழுகு வார்.
viḷintāriṉ vēṟallar maṉṟa teḷintāril
tīmai purintuoḻuku vār.
Verily they are in the jaws of death who invade the home of an unsuspecting friend.
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
eṉaittuṇaiyar āyiṉum eṉṉām tiṉaittuṇaiyum
tērāṉ piṟaṉil pukal.
Let a man be ever so great : what availeth it all if he committeth adultery without thinking ever so little of the shame that floweth therefrom?
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
eḷiteṉa illiṟappāṉ eytumeñ ñāṉṟum
viḷiyātu niṟkum paḻi.
Behold the man who hangeth on to his neighbour's wife because she is accessible: his name is sullied for ever.
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
pakaipāvam accam paḻiyeṉa nāṉkum
ikavāvām illiṟappāṉ kaṇ.
The adulterer knoweth no respite from four things, hatred, sin, fear, and shame.
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
aṟaṉiyalāṉ ilvāḻvāṉ eṉpāṉ piṟaṉiyalāḷ
peṇmai nayavā tavaṉ.
He is the righteous householder who careth not for the charms of his neighbour's wife.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
piṟaṉmaṉai nōkkāta pērāṇmai cāṉṟōrkku
aṟaṉoṉṟō āṉṟa voḻukku.
Behold the high-souled man that looketh not on another's wife: he is more than righteous : he is saintly.
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
nalakkuriyār yāreṉiṉ nāmanīr vaippiṉ
piṟarkkuriyāḷ tōḷtōyā tār.
Who on earth deserve all the good things of the world ? It is they who clasp not the arms of her who belongeth to another.
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
aṟaṉvaraiyāṉ alla ceyiṉum piṟaṉvaraiyāḷ
peṇmai nayavāmai naṉṟu.
Though thou shouldst transgress and yield to every other sin, it were well for thee if thou desire not thy neighbour's wife.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).