Skip to content

நான்காம் தந்திரம் · நான்காம் தந்திரம்

The Fourth Tantra

nāṉkām tantiram

Verses 884–1418 of the Tirumantiram.

Part 1 of 2: verses 884–1151 of 535Tamil with transliteration

A bronze bell above still water suggests the resonance of mantra.

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத் தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை ஏற்றுகின் றேன்எம் பிரான்ஓர் எழுத்தே.

pōṟṟukiṉ ṟēṉpukaḻn tumpukal ñāṉattait tēṟṟukiṉ ṟēṉcintai nāyakaṉ cēvaṭi cāṟṟukiṉ ṟēṉaṟai yōciva yōkattai ēṟṟukiṉ ṟēṉem pirāṉōr eḻuttē.

Report an error

ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய் மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை மாவெழுத் தாலே மயக்கம துற்றதே.

ōreḻut tālē ulakeṅkum tāṉāki īreḻut tālē icaintaṅ kiruvarāy mūveḻut tālē muḷaikkiṉṟa cōtiyai māveḻut tālē mayakkama tuṟṟatē.

Report an error

தேவர் உறைகின்ற சிற்றம் பலமென்றுந் தேவர் உறைகின்ற சிதம்பர மேயென்றுந் தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந் தேவர் உறைகின்ற தென்பொது வாமே.

tēvar uṟaikiṉṟa ciṟṟam palameṉṟun tēvar uṟaikiṉṟa citampara mēyeṉṟun tēvar uṟaikiṉṟa tiruam palameṉṟun tēvar uṟaikiṉṟa teṉpotu vāmē.

Report an error

ஆமேயொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம் ஆமே திருக்கூத் தனவரத தாண்டவம் ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம் ஆமேசங் காரத் தருந்தாண் டவங்களே.

āmēyoṉ ṉampalam aṟputam āṉantam āmē tirukkūt taṉavarata tāṇṭavam āmē piraḷaya mākumat tāṇṭavam āmēcaṅ kārat taruntāṇ ṭavaṅkaḷē.

Report an error

தாண்டவ மான தனியெழுத் தோரெழுத் தாண்டவ மான தனுக்கிர கத்தொழில் தாண்டவங் கூத்துத் தனிநின்ற தற்பரந் தாண்டவங் கூத்துத் தமனியந் தானே.

tāṇṭava māṉa taṉiyeḻut tōreḻut tāṇṭava māṉa taṉukkira kattoḻil tāṇṭavaṅ kūttut taṉiniṉṟa taṟparan tāṇṭavaṅ kūttut tamaṉiyan tāṉē.

Report an error

தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்குந் தானே அகார உகாரம தாய்நிற்குந் தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத் தானே தனக்குத் தராதலந் தானே.

tāṉē parañcuṭar tattuva māyniṟkun tāṉē akāra ukārama tāyniṟkun tāṉē parañcuṭar tattuvak kūttukkut tāṉē taṉakkut tarātalan tāṉē.

Report an error

தராதல மூலைக்குத் தற்பர மாபரன் தராதலம் வெப்பு நமவா சியவாம் தராதலஞ் சொல்லிற் றானவா சியவாகுந் தராதல யோகந் தயாவாசி யாமே.

tarātala mūlaikkut taṟpara māparaṉ tarātalam veppu namavā ciyavām tarātalañ colliṟ ṟāṉavā ciyavākun tarātala yōkan tayāvāci yāmē.

Report an error

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள் ஆமே பரங்கள் அறியா விடம்என்ப ஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம் ஆமே சிவகதி ஆனந்த மாமே.

āmē civaṅkaḷ akāra ukāraṅkaḷ āmē paraṅkaḷ aṟiyā viṭameṉpa āmē tirukkūt taṭaṅkiya ciṟparam āmē civakati āṉanta māmē.

Report an error

ஆனந்த மூன்றும் அறிவிரண் டொன்றாகும் ஆனந்தகுஞ் சிவாய அறிவார் பலரில்லை ஆனந்த மோடும் அறியவல் லார்கட்கு ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே.

āṉanta mūṉṟum aṟiviraṇ ṭoṉṟākum āṉantakuñ civāya aṟivār palarillai āṉanta mōṭum aṟiyaval lārkaṭku āṉantak kūttāy akappaṭun tāṉē.

Report an error

படுவ திரண்டும் பலகலை வல்லார் படுவ தோங்கார பஞ்சாக் கரங்கள் படுவது சங்காரத் தாண்டவப் பத்தி படுவது கோணம் பரந்திடும் வாறே.

paṭuva tiraṇṭum palakalai vallār paṭuva tōṅkāra pañcāk karaṅkaḷ paṭuvatu caṅkārat tāṇṭavap patti paṭuvatu kōṇam parantiṭum vāṟē.

Report an error

வாறே சதாசிவ மாறிலா ஆகமம் வாறே சிவகதி வண்டுறை புன்னையும் வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள் வாறே பொதுவாகு மன்றின் அமலமே.

vāṟē catāciva māṟilā ākamam vāṟē civakati vaṇṭuṟai puṉṉaiyum vāṟē tirukkūttu ākama vacaṉaṅkaḷ vāṟē potuvāku maṉṟiṉ amalamē.

Report an error

அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம் அமலந் திரோதாயி யாகுமா னந்தமாம் அமலஞ்சொல் ஆணவ மாயை காமியம் அமலந் திருக்கூத்தங் காடு மிடந்தானே.

amalam patipacu pācaṅkaḷ ākamam amalan tirōtāyi yākumā ṉantamām amalañcol āṇava māyai kāmiyam amalan tirukkūttaṅ kāṭu miṭantāṉē.

Report an error

தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும் தானே தனக்குத் தனமலை யாய்நிற்கும் தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும் தானே தனக்குத் தலைவனு மாமே.

tāṉē taṉakkut talaivaṉu māyniṟkum tāṉē taṉakkut taṉamalai yāyniṟkum tāṉē taṉakkut taṉmaya māyniṟkum tāṉē taṉakkut talaivaṉu māmē.

Report an error

தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத் தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத் தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத் தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

talaivaṉu māyniṉṟa taṟparak kūttaṉait talaivaṉu māyniṉṟa caṟpāt tirattait talaivaṉu māyniṉṟa tātaviḻ ñāṉat talaivaṉu māyniṉṟa tāḷiṇai tāṉē.

Report an error

இணையார் திருவடி எட்டெழுத் தாகும் இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும் இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும் இணையார் கழலிணை ஏழா யிரமே.

iṇaiyār tiruvaṭi eṭṭeḻut tākum iṇaiyār kaḻaliṇai yīraiñca tākum iṇaiyār kaḻaliṇai aimpattoṉ ṟākum iṇaiyār kaḻaliṇai ēḻā yiramē.

Report an error

ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய் ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம் ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே.

ēḻā yiramāy irupatāy muppatāy ēḻā yirattum eḻukōṭi tāṉāki ēḻā yirattuyir eṇṇilā mantiram ēḻā yiraṇṭāy irukkiṉṟa vāṟē.

Report an error

இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம் இருக்கின்ற மந்திரம் இத்திறம் இல்லை இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே

irukkiṉṟa mantiram ēḻā yiramām irukkiṉṟa mantiram ittiṟam illai irukkiṉṟa mantiram civaṉtiru mēṉi irukkiṉṟa mantiram ivvaṇṇan tāṉē

Report an error

தானே தனக்குத் தகுநட்டந் தானாகுந் தானே அகார உகாரம தாய்நிற்குந் தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத் தானே உலகில் தனிநடந் தானே.

tāṉē taṉakkut takunaṭṭan tāṉākun tāṉē akāra ukārama tāyniṟkun tāṉē rīṅkārat tattuvak kūttukkut tāṉē ulakil taṉinaṭan tāṉē.

Report an error

நடமிரண் டொன்றே நளினம தாகும் நடமிரண் டொன்றே நமன்செய்யுங் கூத்து நடமிரண் டொன்றே நகைசெயும் மந்திரம் நடஞ்சிவ லிங்க நலஞ்செம்பு பொன்னே.

naṭamiraṇ ṭoṉṟē naḷiṉama tākum naṭamiraṇ ṭoṉṟē namaṉceyyuṅ kūttu naṭamiraṇ ṭoṉṟē nakaiceyum mantiram naṭañciva liṅka nalañcempu poṉṉē.

Report an error

செம்புபொன் னாகுஞ் சிவாயநம வென்னிற் செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ் செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச் செம்பொன் னான திருவம் பலமே.

cempupoṉ ṉākuñ civāyanama veṉṉiṟ cempupoṉ ṉākat tiraṇṭatu ciṟparañ cempupoṉ ṉākum srīyuṅ kirīyumeṉac cempoṉ ṉāṉa tiruvam palamē.

Report an error

திருவம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத் திருவம் பலமாக வீராறு கீறித் திருவம் பலமாக விருபத்தைஞ் சாக்கித் திருவம் பலமாகச் செபிக்கின்ற வாறே.

tiruvam palamākac cīrccak karattait tiruvam palamāka vīrāṟu kīṟit tiruvam palamāka virupattaiñ cākkit tiruvam palamākac cepikkiṉṟa vāṟē.

Report an error

வாறே சிவாய நமச்சி வாயநம வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை வாறே யருளால் வளர்கூத்துக் காணலாம் வாறே செபிக்கல் வரும்செம்பு பொன்னே.

vāṟē civāya namacci vāyanama vāṟē cepikkil varumpēr piṟappillai vāṟē yaruḷāl vaḷarkūttuk kāṇalām vāṟē cepikkal varumcempu poṉṉē.

Report an error

பொன்னான மந்திரம் புகலவு மொண்ணாது பொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும் பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற் பொன்னாகும் வல்லார்க் குடம்புபொற் பாதமே.

poṉṉāṉa mantiram pukalavu moṇṇātu poṉṉāṉa mantiram poṟikiñcu kattākum poṉṉāṉa mantiram pukaiyuṇṭu pūrikkiṟ poṉṉākum vallārk kuṭampupoṟ pātamē.

Report an error

பொற்பாதங் காணலாம் புத்திர ருண்டாகும் பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும் பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும் பொற்பாத நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.

poṟpātaṅ kāṇalām puttira ruṇṭākum poṟpātat tāṇaiyē cempupoṉ ṉāyiṭum poṟpātaṅ kāṇat tirumēṉi yāyiṭum poṟpāta naṉṉaṭañ cintaṉai collumē.

Report an error

சொல்லு மொருகூட்டிற் புக்குச் சுகிக்கலாம் நல்ல மடவார் நயந்துட னேவருஞ் சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடுஞ் சொல்லுந் திருக்கூத்தின் சூக்குமந் தானே.

collu morukūṭṭiṟ pukkuc cukikkalām nalla maṭavār nayantuṭa ṉēvaruñ colliṉum pācac cuṭarppāmpu nīṅkiṭuñ collun tirukkūttiṉ cūkkuman tāṉē.

Report an error

சூக்கும மெண்ணா யிரஞ்செபித் தாலுமேற் சூக்கும மான வழியிடைக காணலாஞ் சூக்கும மான வினையைக் கெடுக்கலாஞ் சூக்கும மான சிவனதா னந்தமே.

cūkkuma meṇṇā yirañcepit tālumēṟ cūkkuma māṉa vaḻiyiṭaika kāṇalāñ cūkkuma māṉa viṉaiyaik keṭukkalāñ cūkkuma māṉa civaṉatā ṉantamē.

Report an error

ஆனந்த மொன்றென் றறைந்திட வானந்தம் ஆனந்தம் ஆ-ஈ-ஊ-ஏ ஓமொன் றைந்திடம் ஆனந்த மானந்தம் மஞ்சும தாயிடும் ஆனந்தம் -அம்-ஹ்ரீம்-அம்-க்ஷம்-ஆம் ஆகுமே

āṉanta moṉṟeṉ ṟaṟaintiṭa vāṉantam āṉantam ā-ī-ū-ē ōmoṉ ṟaintiṭam āṉanta māṉantam mañcuma tāyiṭum āṉantam -am-hrīm-am-kṣam-ām ākumē

Report an error

மேனி யிரண்டும் விளங்காமல் மேற்கொள்ள மேனி யிரண்டு மிக்கார விகாரியா மேனி யிரண்டும் -ஊ-ஆ-ஈ-ஏ-ஓ என்னும் மேனி யிரண்டும்-ஈ-ஓ-ஊ-ஆ-ஏ- கூத்துவே.

mēṉi yiraṇṭum viḷaṅkāmal mēṟkoḷḷa mēṉi yiraṇṭu mikkāra vikāriyā mēṉi yiraṇṭum -ū-ā-ī-ē-ō eṉṉum mēṉi yiraṇṭum-ī-ō-ū-ā-ē- kūttuvē.

Report an error

கூத்தே சிவாய நமசி வாயிடுங் கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம்-சிவாயநம வாயிடுங் கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம்-சிவாயநம வாயிடுங் கூத்தே இ-ஊ-ஆ-ஏ-ஓம் நமசிவாய கோளொன்று மாறே

kūttē civāya namaci vāyiṭuṅ kūttē ī-ū-ā-ē-ōm-civāyanama vāyiṭuṅ kūttē ī-ū-ā-ē-ōm-civāyanama vāyiṭuṅ kūttē i-ū-ā-ē-ōm namacivāya kōḷoṉṟu māṟē

Report an error

ஒன்றிரண் டாடவோ ரொன்று முடனாட ஒன்றினின் மூன்றாட வோரேழு மொத்தாட ஒன்றினா லாடவோ ரொன்பது முடனாட மன்றினி லாடினான் மாணிக்கக் கூத்தே.

oṉṟiraṇ ṭāṭavō roṉṟu muṭaṉāṭa oṉṟiṉiṉ mūṉṟāṭa vōrēḻu mottāṭa oṉṟiṉā lāṭavō roṉpatu muṭaṉāṭa maṉṟiṉi lāṭiṉāṉ māṇikkak kūttē.

Report an error

இருந்தவிவ் வட்டங்க ளீராறி ரேகை இருந்த விரேகைமே லீரா றிருத்தி இருந்த மனைகளு மீராறு பத்தொன் றிருந்த மனையொன்றி லெய்துவன் றானே.

iruntaviv vaṭṭaṅka ḷīrāṟi rēkai irunta virēkaimē līrā ṟirutti irunta maṉaikaḷu mīrāṟu pattoṉ ṟirunta maṉaiyoṉṟi leytuvaṉ ṟāṉē.

Report an error

தானொன்றி வாழிடந் தன்னெழுத் தேயாகுந் தானொன்று மந்நான்குந் தன்பே ரெழுத்தாகுந் தானொன்று நாற்கோணந் தன்னைந் தெழுத்தாகுந் தானொன்றி லேயொன்று மவ்வரன் றானே.

tāṉoṉṟi vāḻiṭan taṉṉeḻut tēyākun tāṉoṉṟu mannāṉkun taṉpē reḻuttākun tāṉoṉṟu nāṟkōṇan taṉṉain teḻuttākun tāṉoṉṟi lēyoṉṟu mavvaraṉ ṟāṉē.

Report an error

அரகர என்ன அரியதொன் றில்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப் பன்றே.

arakara eṉṉa ariyatoṉ ṟillai arakara eṉṉa aṟikilar māntar arakara eṉṉa amararum āvar arakara eṉṉa aṟumpiṟap paṉṟē.

Report an error

எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம் எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும் ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப் பட்டது மந்திரம் பான்மொழி பாலே.

eṭṭu nilaiyuḷa eṅkōṉ iruppiṭam eṭṭiṉil oṉṟum irumūṉṟum īrēḻum oṭṭiya vintuvum nātamum ōṅkiṭap paṭṭatu mantiram pāṉmoḻi pālē.

Report an error

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன் ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர் விட்ட எழுத்தை விடாத எழுத்துடன் கட்டவல் லாருயிர் காக்கவல் லாரே.

maṭṭaviḻ tāmarai mātunal lāḷuṭaṉ oṭṭi irunta upāyam aṟikilar viṭṭa eḻuttai viṭāta eḻuttuṭaṉ kaṭṭaval lāruyir kākkaval lārē.

Report an error

ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம் ஆலய மாக அமர்ந்தவித் தூலம்பேர் ஆலய மாக வருகின்ற சூக்குமம் ஆலய மாக அமர்ந்திருந் தானே.

ālaya māka amarntapañ cākkaram ālaya māka amarntavit tūlampēr ālaya māka varukiṉṟa cūkkumam ālaya māka amarntirun tāṉē.

Report an error

இருந்தவிவ் வட்ட மிருமூன்றி ரேகை இருந்த வதனு ளிரேகை யைந்தாக இருந்த வறைக ளிருபத்தைஞ் சாக இருந்த வறையொன்றி லெய்து மகாரமே.

iruntaviv vaṭṭa mirumūṉṟi rēkai irunta vataṉu ḷirēkai yaintāka irunta vaṟaika ḷirupattaiñ cāka irunta vaṟaiyoṉṟi leytu makāramē.

Report an error

மகார நடுவே வளைந்திடுஞ் சத்தியை ஒகாரம் வளைந்திட் டும்பிளந் தேற்றி யகாரந் தலையா யிருகண் சிகாரமாய் நகார வகாரநற் காலது நாடுமே.

makāra naṭuvē vaḷaintiṭuñ cattiyai okāram vaḷaintiṭ ṭumpiḷan tēṟṟi yakāran talaiyā yirukaṇ cikāramāy nakāra vakāranaṟ kālatu nāṭumē.

Report an error

நாடும் பிரணவ நடுவிரு பக்கமும் ஆடு மவர்வா யமர்ந்தங்கு நின்றது நாடு நடுவுண் முகநம சிவாய வாடுஞ் சிவாயநம புறவட்டத் தாயதே.

nāṭum piraṇava naṭuviru pakkamum āṭu mavarvā yamarntaṅku niṉṟatu nāṭu naṭuvuṇ mukanama civāya vāṭuñ civāyanama puṟavaṭṭat tāyatē.

Report an error

ஆயுஞ் சிவாய நமமசி வாயந வாயு நமசிவா யயநம சிவாயந வாயுமே வாய நமசியெனு மந்திர மாயுஞ் சிகாரந் தொட்டந்தத் தடைவிலே.

āyuñ civāya namamaci vāyana vāyu namacivā yayanama civāyana vāyumē vāya namaciyeṉu mantira māyuñ cikāran toṭṭantat taṭaivilē.

Report an error

அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின் அடையும் அறையொன்றுக் கீரெழுத் தாக்கி அடையு மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும் அடைவின் எழுத்தைம் பத்தொன்றும் அமர்ந்ததே

aṭaiviṉil aimpatum aiyain taṟaiyiṉ aṭaiyum aṟaiyoṉṟuk kīreḻut tākki aṭaiyu makārattil antamām kṣavvum aṭaiviṉ eḻuttaim pattoṉṟum amarntatē

Report an error

அமர்ந்த அரகர வாம்புர வட்டம் அமர்ந்த அரிகரி யாமத னுள்வட்டம் அமர்ந்த அசபை யாமத னுள்வட்டம் அமர்ந்தவி ரேகையும் ஆகின்ற சூலமே.

amarnta arakara vāmpura vaṭṭam amarnta arikari yāmata ṉuḷvaṭṭam amarnta acapai yāmata ṉuḷvaṭṭam amarntavi rēkaiyum ākiṉṟa cūlamē.

Report an error

சூலத் தலையினில் தோற்றிடுஞ் சத்தியுஞ் சூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால் சூலத் திடைவெளி தோற்றிடும் அஞ்செழுத் தாலப் பதிக்கும் அடைவது வாமே.

cūlat talaiyiṉil tōṟṟiṭuñ cattiyuñ cūlat talaiyiṉil cūḻumōṅ kārattāl cūlat tiṭaiveḷi tōṟṟiṭum añceḻut tālap patikkum aṭaivatu vāmē.

Report an error

அதுவாம் அகார இகார உகாரம் அதுவாம் எகாரம் ஒகார மதஞ்சாம் அதுவாகுஞ் சக்கர வட்டமேல் வட்டம் பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.

atuvām akāra ikāra ukāram atuvām ekāram okāra matañcām atuvākuñ cakkara vaṭṭamēl vaṭṭam potuvām iṭaiveḷi poṅkunam pērē.

Report an error

பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியின் நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம் ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.

pērpeṟ ṟatumūla mantiram piṉṉatu cōrvuṟṟa cakkara vaṭṭattuṭ cantiyiṉ nērpeṟ ṟiruntiṭa niṉṟatu cakkaram ērpeṟ ṟirunta iyalpitu vāmē.

Report an error

இயலுமிம் மந்திரம் எய்தும் வழியின் செயலும் அறியத் தெளிவிக்கு நாதன் புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண் முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே.

iyalumim mantiram eytum vaḻiyiṉ ceyalum aṟiyat teḷivikku nātaṉ puyalum puṉalum poruntaṅki maṇviṇ muyalum eḻuttukku muṉṉā iruntatē.

Report an error

ஆரெட் டெழுத்தின்மே லாறும் பதினாலும் ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமுஞ் சீரிட்டு நின்று சிவாய நமவென்னக் கூறிட்டு மும்மலங் கூப்பிட்டுப் போமே.

āreṭ ṭeḻuttiṉmē lāṟum patiṉālum ēṟiṭ ṭataṉmēlē vintuvum nātamuñ cīriṭṭu niṉṟu civāya namaveṉṉak kūṟiṭṭu mummalaṅ kūppiṭṭup pōmē.

Report an error

அண்ணல் இருப்ப தவளங் கரத்துளே பெண்ணினல் லாளும் பிரானக் கரத்துளே எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப் புண்ணிய வாளர் பொருளறி வார்களே.

aṇṇal iruppa tavaḷaṅ karattuḷē peṇṇiṉal lāḷum pirāṉak karattuḷē eṇṇi iruvar icaintaṅ kiruntiṭap puṇṇiya vāḷar poruḷaṟi vārkaḷē.

Report an error

அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும் அவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே.

avviṭṭu vaittaṅ karaviṭṭu mēlvaittu ivviṭṭup pārkkil iliṅkama tāyniṟkum avviṭṭu mēlē vaḷiyuṟak kaṇṭapiṉ tommiṭṭu niṉṟa cuṭarkkoḻun tāmē.

Report an error

அவ்வுண்டு சவ்வுண் டனைத்துமங் குள்ளது கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாரில்லை கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச் சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே.

avvuṇṭu cavvuṇ ṭaṉaittumaṅ kuḷḷatu kavvuṇṭu niṟkuṅ karuttaṟi vārillai kavvuṇṭu niṟkuṅ karuttaṟi vāḷarkkuc cavvuṇṭu catti catācivaṉ tāṉē.

Report an error

அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும் அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம் அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம் அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே.

añceḻut tālē amarntaṉaṉ nantiyum añceḻut tālē amarntapañ cākkaram añceḻut tākiya vakkara cakkaram añceḻut tuḷḷē amarntirun tāṉē.

Report an error

கூத்தனைக் காணுங் குறிபல பேசிடிற் கூத்த னெழுத்தின் முதலெழுத் தோதினார் கூத்தனொ டொன்றிய கொள்கைய ராய்நிற்பர் கூத்தனைக் காணும் குறியது வாமே.

kūttaṉaik kāṇuṅ kuṟipala pēciṭiṟ kūtta ṉeḻuttiṉ mutaleḻut tōtiṉār kūttaṉo ṭoṉṟiya koḷkaiya rāyniṟpar kūttaṉaik kāṇum kuṟiyatu vāmē.

Report an error

அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பியே அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால் அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை அத்திசைக் குள்ளுற வாக்கினன் தானே.

atticaik kuḷniṉṟa aṉalai eḻuppiyē atticaik kuḷniṉṟa navveḻut tōtiṉāl atticaik kuḷniṉṟa anta maṟaiyaṉai atticaik kuḷḷuṟa vākkiṉaṉ tāṉē.

Report an error

தானே யளித்திடுந் தையலை நோக்கினால் தானே யளித்திட்டு மேலுற வைத்திடுந் தானே யளித்த மகாரத்தை ஓதிடத் தானே யளித்ததோர் கல்லொளி யாகுமே.

tāṉē yaḷittiṭun taiyalai nōkkiṉāl tāṉē yaḷittiṭṭu mēluṟa vaittiṭun tāṉē yaḷitta makārattai ōtiṭat tāṉē yaḷittatōr kalloḷi yākumē.

Report an error

கல்லொளி யேயென நின்ற வடதிசை கல்லொளி யேயென நின்றனன் இந்திரன் கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக் கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.

kalloḷi yēyeṉa niṉṟa vaṭaticai kalloḷi yēyeṉa niṉṟaṉaṉ intiraṉ kalloḷi yēyeṉa niṉṟa cikārattaik kalloḷi yēyeṉak kāṭṭiniṉ ṟāṉē.

Report an error

தானே யெழுகுணத் தண்சுட ராய்நிற்குந் தானே யெழுகுணம் வேதமு மாய்நிற்கும் தானே யெழுகுண மாவதும் ஓதிடில் தானே யெழுந்த மறையவ னாமே.

tāṉē yeḻukuṇat taṇcuṭa rāyniṟkun tāṉē yeḻukuṇam vētamu māyniṟkum tāṉē yeḻukuṇa māvatum ōtiṭil tāṉē yeḻunta maṟaiyava ṉāmē.

Report an error

மறையவ னாக மதித்த பிறவி மறையவ னாக மதித்திடக் காண்பர் மறையவன் அஞ்செழுத் துண்ணிற்கப் பெற்ற மறையவன் அஞ்செழுத் தாமது வாகுமே.

maṟaiyava ṉāka matitta piṟavi maṟaiyava ṉāka matittiṭak kāṇpar maṟaiyavaṉ añceḻut tuṇṇiṟkap peṟṟa maṟaiyavaṉ añceḻut tāmatu vākumē.

Report an error

ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம் ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின் ஆகின்ற வச்சுட ரவ்வியல் பாமே.

ākiṉṟa pātamu mannavāy niṉṟiṭum ākiṉṟa nāpiyuḷ aṅkē makāramām ākiṉṟa cīyiru tōḷvavvāyk kaṇṭapiṉ ākiṉṟa vaccuṭa ravviyal pāmē.

Report an error

அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையுஞ் செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும் ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடிற் பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.

avviyal pāya irumūṉ ṟeḻuttaiyuñ cevviyal pākac ciṟantaṉaṉ nantiyum ovviyal pāka oḷiyuṟa nōkkiṭiṟ pavviyal pākap parantuniṉ ṟāṉē.

Report an error

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம் வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித் துரந்திடு மந்திரஞ் சூழ்பகை போக உரந்தரு மந்திரம் ஓமென் றெழுப்பே.

parantatu mantiram palluyirk kellām varantaru mantiram vāyttiṭa vāṅkit turantiṭu mantirañ cūḻpakai pōka urantaru mantiram ōmeṉ ṟeḻuppē.

Report an error

ஓமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியை நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை ஆமென் றெழுப்பியவ் வாற்றி வார்கள் மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.

ōmeṉ ṟeḻuppittaṉ uttama nantiyai nāmeṉ ṟeḻuppi naṭuveḻu tīpattai āmeṉ ṟeḻuppiyav vāṟṟi vārkaḷ māmaṉṟu kaṇṭu makiḻntirun tārē.

Report an error

ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும் பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும் ஆகின்ற ஐம்பத் தோரெழுத் துள்நிற்கப் பாகொன்றி நிற்கும் பராபரன் தானே.

ākiṉṟa cakkarat tuḷḷē eḻuttaintum pākoṉṟi niṉṟa pataṅkaḷil varttikkum ākiṉṟa aimpat tōreḻut tuḷniṟkap pākoṉṟi niṟkum parāparaṉ tāṉē.

Report an error

பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப் பரமாய நவசிம் பார்க்கில் மவயநசி பரமாய சியநம வாமபரத் தோதிற் பரமாய வாசி மயநமாய் நின்றே.

paramāya añceḻut tuḷnaṭu vākap paramāya navacim pārkkil mavayanaci paramāya ciyanama vāmaparat tōtiṟ paramāya vāci mayanamāy niṉṟē.

Report an error

நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும் நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும் நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில் நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.

niṉṟa eḻuttukkaḷ nērtaru pūtamum niṉṟa eḻuttukkaḷ nērtaru vaṇṇamum niṉṟa eḻuttukkaḷ nērtara niṉṟiṭil niṉṟa eḻuttuḷḷum niṉṟaṉaṉ tāṉē.

Report an error

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம் மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக் கன்றது வாகக் கறந்தனன் நந்தியுங் குன்றிடை நின்றிடுங் கொள்கைய னாமே.

niṉṟatu cakkaram nīḷum puviyellām maṉṟatu vāyniṉṟa māyanaṉ ṉāṭaṉaik kaṉṟatu vākak kaṟantaṉaṉ nantiyuṅ kuṉṟiṭai niṉṟiṭuṅ koḷkaiya ṉāmē.

Report an error

கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல கொண்டஇச் சக்கரத் துள்ளே குறியைந்து கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்தைந்துங் கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

koṇṭaic cakkarat tuḷḷē kuṇampala koṇṭaic cakkarat tuḷḷē kuṟiyaintu koṇṭaic cakkaraṅ kūttaṉ eḻuttaintuṅ koṇṭaic cakkarat tuḷniṉṟa kūttē.

Report an error

வெளியி லிரேகை யிரேகையி லத்தலை சுளியில் உகாரமாஞ் சுற்றிய வன்னி நெளிதரு கால்கொம்பு நேர்விந்து நாதந் தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே.

veḷiyi lirēkai yirēkaiyi lattalai cuḷiyil ukāramāñ cuṟṟiya vaṉṉi neḷitaru kālkompu nērvintu nātan teḷiyum pirakārañ civaman tiramē.

Report an error

அகார வுகார சிகார நடுவாய் வகாரமோ டாறும் வளியுடன் கூடிச் சிகார முடனே சிவன்சிந்தை செய்ய ஒகார முதல்வன் உவந்துநின் றானே.

akāra vukāra cikāra naṭuvāy vakāramō ṭāṟum vaḷiyuṭaṉ kūṭic cikāra muṭaṉē civaṉcintai ceyya okāra mutalvaṉ uvantuniṉ ṟāṉē.

Report an error

அற்ற விடத்தே அகாரம் தாவது உற்ற விடத்தே யுறுபொருள் கண்டிடச் செற்றம் மறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள் குற்றம் அறுத்த பொன்போலுங் குளிகையே.

aṟṟa viṭattē akāram tāvatu uṟṟa viṭattē yuṟuporuḷ kaṇṭiṭac ceṟṟam maṟutta ceḻuñcuṭar meypporuḷ kuṟṟam aṟutta poṉpōluṅ kuḷikaiyē.

Report an error

அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால் உவ்வென்ற முத்தி யுருகிக் கலந்திடும் மவ்வென்றென் னுள்ளே வழிபட்ட நந்தியை எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

avveṉṟa pōtiṉil uvveḻut tālittāl uvveṉṟa mutti yurukik kalantiṭum mavveṉṟeṉ ṉuḷḷē vaḻipaṭṭa nantiyai evvaṇañ collukēṉ entai iyaṟkaiyē.

Report an error

நீரில் எழுத்திவ் வுலகா ரறிவது வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை யாரிவ் வெழுத்தை அறிவா ரவர்கள் ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே

nīril eḻuttiv vulakā raṟivatu vāṉil eḻuttoṉṟu kaṇṭaṟi vārillai yāriv veḻuttai aṟivā ravarkaḷ ūṉil eḻuttai uṇarkilar tāmē

Report an error

காலை நடுவுறக் காயத்தில் அக்கரம் மாலை நடுவுற ஐம்பது மாவன மேலை நடுவுற வேதம் விளம்பிய மூலம் நடுவுற முத்திதந் தானே.

kālai naṭuvuṟak kāyattil akkaram mālai naṭuvuṟa aimpatu māvaṉa mēlai naṭuvuṟa vētam viḷampiya mūlam naṭuvuṟa muttitan tāṉē.

Report an error

நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று பாவிக ளத்தின் பயனறி வாரில்லை ஓவிய ராலும் அறியவொண் ணாதது தேவியுந் தானுந் திகழ்ந்திருந் தானே.

nāviyiṉ kīḻatu nalla eḻuttoṉṟu pāvika ḷattiṉ payaṉaṟi vārillai ōviya rālum aṟiyavoṇ ṇātatu tēviyun tāṉun tikaḻntirun tāṉē.

Report an error

அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம் அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர் அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின் அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே.

avvoṭu cavveṉṟa taraṉuṟṟa mantiram avvoṭu cavveṉṟa tārum aṟikilar avvoṭu cavveṉṟa tārum aṟintapiṉ avvoṭu cavvum aṉātiyu māmē.

Report an error

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்குஞ் சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர் சந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே.

mantiram oṉṟuḷ malarāl utippatu untiyi ṉuḷḷē utayampaṇ ṇāniṟkuñ canticey yāniṟpar tāma taṟikilar canti toḻutupō yārttakaṉ ṟārkaḷē.

Report an error

சேவிக்கு மந்திரஞ் செல்லுந் திசைபெற ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில் ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே

cēvikku mantirañ cellun ticaipeṟa āvikkuḷ mantiram ātāra māvaṉa pūvukkuḷ mantiram pōkkaṟa nōkkiṭil āvikkuḷ mantiram aṅkuca māmē

Report an error

அருவினில் அம்பரம் அங்கெழு நாதம் பெருகு துடியிடை பேணிய விந்து மருவி யகார சிகார நடுவாய் உருவிட வூறு முறுமந் திரமே

aruviṉil amparam aṅkeḻu nātam peruku tuṭiyiṭai pēṇiya vintu maruvi yakāra cikāra naṭuvāy uruviṭa vūṟu muṟuman tiramē

Report an error

விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச் சந்திர னோடே தலைப்படு மாயிடில் அந்தர வானத் தமுதம்வந் தூறிடும் அங்குதி மந்திரம் ஆகுதி யாமே

vintuvum nātamum mēvi yuṭaṉkūṭic cantira ṉōṭē talaippaṭu māyiṭil antara vāṉat tamutamvan tūṟiṭum aṅkuti mantiram ākuti yāmē

Report an error

ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலார் ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள் வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு ஓரெழுத் தாலே உயிர்பெற லாமே

āṟeḻut tōtum aṟivār aṟikilār āṟeḻut toṉṟāka ōti uṇarārkaḷ vēṟeḻut tiṉṟi viḷampaval lārkaṭku ōreḻut tālē uyirpeṟa lāmē

Report an error

ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைஞ்சும் ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர் சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள நாத எழுத்திட்டு நாடிக்கொள் வீரே.

ōtum eḻuttō ṭuyirkkalai mūvaiñcum āti eḻuttavai aimpatō ṭoṉṟeṉpar cōti eḻuttiṉil aiyiru mūṉṟuḷa nāta eḻuttiṭṭu nāṭikkoḷ vīrē.

Report an error

விந்துவி லுஞ்சுழி நாதம் எழுந்திடப் பந்தத் தலைவி பதினாறு கலையதாய்க் சுந்தர வாகரங் காலுடம் பாயினாள் அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.

vintuvi luñcuḻi nātam eḻuntiṭap pantat talaivi patiṉāṟu kalaiyatāyk cuntara vākaraṅ kāluṭam pāyiṉāḷ antamum iṉṟiyē aimpattoṉ ṟāyatē.

Report an error

ஐம்ப தெழுத்தே அனைத்தும்வே தங்களும் ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும் ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின் ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

aimpa teḻuttē aṉaittumvē taṅkaḷum aimpa teḻuttē aṉaittāka maṅkaḷum aimpa teḻuttēyu māva taṟintapiṉ aimpa teḻuttumpōy añceḻut tāmē.

Report an error

அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன் அஞ்செழுத் தாற்பல யோனி படைத்தனன் அஞ்செழுத் தாலிவ் வகலிடந் தாங்கினன் அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.

añceḻut tālaintu pūtam paṭaittaṉaṉ añceḻut tāṟpala yōṉi paṭaittaṉaṉ añceḻut tāliv vakaliṭan tāṅkiṉaṉ añceḻut tālē amarntuniṉ ṟāṉē.

Report an error

வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச் சேர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச் சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும் போந்திடும் என்னும் புரிசடை யோனே.

vīḻnteḻa lāmvikir taṉtiru nāmattaic cērntoḻi yāmal toṭaṅkum oruvaṟkuc cārnta viṉaittuyar pōkat talaivaṉum pōntiṭum eṉṉum puricaṭai yōṉē.

Report an error

உண்ணு மருந்தும் உலப்பிலி காலமும் பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும் விண்ணின் றமரர் விரும்பி அடிதொழ எண்ணின் றெழுத்தஞ்சு மாகிநின் றானே.

uṇṇu maruntum ulappili kālamum paṇṇuṟu kēḷviyum pāṭalu māyniṟkum viṇṇiṉ ṟamarar virumpi aṭitoḻa eṇṇiṉ ṟeḻuttañcu mākiniṉ ṟāṉē.

Report an error

ஐந்தின் பெருமையே அகலிட மாவதும் ஐந்தின் பெருமையே ஆலய மாவதும் ஐந்தின் பெருமையே யறவோன் வழக்கமும் ஐந்தின் வகைசெயப் பாலனு மாமே.

aintiṉ perumaiyē akaliṭa māvatum aintiṉ perumaiyē ālaya māvatum aintiṉ perumaiyē yaṟavōṉ vaḻakkamum aintiṉ vakaiceyap pālaṉu māmē.

Report an error

வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும் நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குள்ள சீரேழுத் தாயங்கி யாயுயி ராமெழுத் தோரெழுத் தீசனும் ஒண்சுட ராமே.

vēreḻut tāyviṇṇāy appuṟa māyniṟkum nīreḻut tāynilan tāṅkiyum aṅkuḷḷa cīrēḻut tāyaṅki yāyuyi rāmeḻut tōreḻut tīcaṉum oṇcuṭa rāmē.

Report an error

நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு நாலாம் எழுத்தது நன்னெறி தானே.

nālām eḻuttōcai ñālam uruvatu nālām eḻuttiṉuḷ ñālam aṭaṅkiṟṟu nālām eḻuttē navilaval lārkaṭku nālām eḻuttatu naṉṉeṟi tāṉē.

Report an error

இயைந்தனள் ஏந்திழை என்னுள மேவி நயந்தன ளங்கே நமசிவ என்னும் பயந்தனை யோரும் பதமது பற்றும் பெயர்ந்தனன் மற்றும் பிதற்றறுத் தேனே.

iyaintaṉaḷ ēntiḻai eṉṉuḷa mēvi nayantaṉa ḷaṅkē namaciva eṉṉum payantaṉai yōrum patamatu paṟṟum peyarntaṉaṉ maṟṟum pitaṟṟaṟut tēṉē.

Report an error

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினை ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன் நாம் நமசிவ என்றிருப் பாருக்கு நேமத் தலைவி நிலவிநின் றாளே.

āmat tiṉitirun taṉṉa mayattiṉai ōmatti lēyutam paṇṇum oruttitaṉ nām namaciva eṉṟirup pārukku nēmat talaivi nilaviniṉ ṟāḷē.

Report an error

பட்டம் பரிசே பரமஞ் செழுத்ததின் இட்ட மறிந்திட் டிரவு பகல்வர நட்டம் தாடு நடுவே நிலயங்கொண் டட்டதே சப்பொரு ளாகிநின் றாளே.

paṭṭam paricē paramañ ceḻuttatiṉ iṭṭa maṟintiṭ ṭiravu pakalvara naṭṭam tāṭu naṭuvē nilayaṅkoṇ ṭaṭṭatē capporu ḷākiniṉ ṟāḷē.

Report an error

அகாரம் உயிரே உகாரம் பரமே மகார மலமாய் வருமுப்ப தாறிற் சிகாரஞ் சிவமாய் வகாரம் வடிவமாய் அகாரம் உயிரென் றறையலு மாமே.

akāram uyirē ukāram paramē makāra malamāy varumuppa tāṟiṟ cikārañ civamāy vakāram vaṭivamāy akāram uyireṉ ṟaṟaiyalu māmē.

Report an error

நகார மகார சிகார நடுவாய் வகாரம் இரண்டு வளியுடன் கூடி ஒகார முதற்கொண் டொருக்கால் உறைக்க மகார முதல்வன் மனத்தகத் தானே.

nakāra makāra cikāra naṭuvāy vakāram iraṇṭu vaḷiyuṭaṉ kūṭi okāra mutaṟkoṇ ṭorukkāl uṟaikka makāra mutalvaṉ maṉattakat tāṉē.

Report an error

அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன அஞ்சையுங் கூடத் தடுக்கவல் லார்கட்கே அஞ்சாதி யாதி அகம்புக லாமே.

añcuḷa vāṉai aṭaviyuḷ vāḻvaṉa añcukkum añceḻut taṅkuca māvaṉa añcaiyuṅ kūṭat taṭukkaval lārkaṭkē añcāti yāti akampuka lāmē.

Report an error

ஐந்து கலையில் அகாராதி தன்னிலே வந்த நகாராதி மாற்றி மகாராதி நந்தியை மூலத்தே நாடிப் பரையொடுஞ் சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.

aintu kalaiyil akārāti taṉṉilē vanta nakārāti māṟṟi makārāti nantiyai mūlattē nāṭip paraiyoṭuñ canticey vārkkuc caṭaṅkillai tāṉē.

Report an error

மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும் அருமந்த யோகமும் ஞானமு மாகுந் தெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே அருள்தங்கி யச்சிவ மாவது வீடே.

maruvuñ civāyamē maṉṉum uyirum arumanta yōkamum ñāṉamu mākun teruḷvanta cīvaṉār ceṉṟivaṟ ṟālē aruḷtaṅki yacciva māvatu vīṭē.

Report an error

அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின் நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம் வஞ்சக மில்லை மனைக்கும் அழிவில்லை தஞ்ச மிதுவென்று சாற்றுகின் றேனே.

añcuka añceḻut tuṇmai aṟintapiṉ neñcakat tuḷḷē niṟaiyum parāparam vañcaka millai maṉaikkum aḻivillai tañca mituveṉṟu cāṟṟukiṉ ṟēṉē.

Report an error

சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச் சிவாயவொ டவ்வே சிவனுரு வாகுஞ் சிவாயவொ டவ்வுந் தெளியவல் லார்கள் சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே.

civāyavo ṭavvē teḷintuḷat tōtac civāyavo ṭavvē civaṉuru vākuñ civāyavo ṭavvun teḷiyaval lārkaḷ civāyavo ṭavvē teḷintirun tārē.

Report an error

சிகார வகார யகார முடனே நகார மகார நடுவுற நாடி ஒகார முடனே ஒருகா லுரைக்கு மகார முதல்வன் மதித்துநின் றானே.

cikāra vakāra yakāra muṭaṉē nakāra makāra naṭuvuṟa nāṭi okāra muṭaṉē orukā luraikku makāra mutalvaṉ matittuniṉ ṟāṉē.

Report an error

நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள் அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை சிம்முத லுள்ளே தெளியவல் லார்கட்குத் தம்முத லாகுஞ் சதாசிவந் தானே.

nammutal ōraintiṉ nāṭuṅ karumaṅkaḷ ammutal aintil aṭaṅkiya valviṉai cimmuta luḷḷē teḷiyaval lārkaṭkut tammuta lākuñ catācivan tāṉē.

Report an error

நவமுஞ் சிவமும் உயிர்பர மாகுந் தவமொன் றிலாதன தத்துவ மாகுஞ் சிவமொன்றி யாய்பவ ராதர வாலச் வாலச் சிவமென்ப தானாம் எனுந்தெளி வுற்றதே.

navamuñ civamum uyirpara mākun tavamoṉ ṟilātaṉa tattuva mākuñ civamoṉṟi yāypava rātara vālac vālac civameṉpa tāṉām eṉunteḷi vuṟṟatē.

Report an error

கூடிய எட்டும் இரண்டுங் குவிந்தறி நாடிய நந்தியை ஞானத்து ளேவைத்து ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள் தேடி அதனைத் தெளிந்தறி யீரே.

kūṭiya eṭṭum iraṇṭuṅ kuvintaṟi nāṭiya nantiyai ñāṉattu ḷēvaittu āṭiya aivarum aṅkuṟa vāvarkaḷ tēṭi ataṉait teḷintaṟi yīrē.

Report an error

எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர் எட்டும் இரண்டும் அறியாத ஏழையர் எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே

eṭṭum iraṇṭum iṉitaṟi kiṉṟilar eṭṭum iraṇṭum aṟiyāta ēḻaiyar eṭṭum iraṇṭum irumūṉṟu nāṉkeṉap paṭṭatu cittānta caṉmārkka pātamē

Report an error

எட்டு வரையின் மேலெட்டு வரைகீறி இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில் வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டுமிட்டுச் சிட்டஞ் செழுத்துஞ் செபிசீக் கிரமே.

eṭṭu varaiyiṉ mēleṭṭu varaikīṟi iṭṭa naṭuvuḷ iṟaivaṉ eḻuttoṉṟil vaṭṭatti lēyaṟai nāṟpatteṭ ṭumiṭṭuc ciṭṭañ ceḻuttuñ cepicīk kiramē.

Report an error

தானவர் சட்டர் சதிரர் இருவர்கள் ஆனவிம் மூவரோ டாற்றவ ராதிகள் ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமுஞ் சேனையுஞ் செய்சிவ சக்கரந் தானே.

tāṉavar caṭṭar catirar iruvarkaḷ āṉavim mūvarō ṭāṟṟava rātikaḷ ēṉaip patiṉaintum vintuvum nātamuñ cēṉaiyuñ ceyciva cakkaran tāṉē.

Report an error

பட்டன மாதவ மாற்றும் பராபரம் விட்டனர் தம்மை விகிர்தா நமவென்பர் எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம் ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.

paṭṭaṉa mātava māṟṟum parāparam viṭṭaṉar tammai vikirtā namaveṉpar eṭṭaṉai yāyiṉum īcaṉ tiṟattiṟam oṭṭuvaṉ pēcuvaṉ oṉṟaṟi yēṉē.

Report an error

சிவமுதல் மூவரோ டைவர் சிறந்து அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றான அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.

civamutal mūvarō ṭaivar ciṟantu avaimutal āṟiraṇ ṭoṉṟoṭoṉ ṟāṉa avaimutal vintuvum nātamum ōṅkac cavaimutal caṅkaraṉ taṉpeyar tāṉē.

Report an error

வித்தாஞ் செகமய மாக வரைகீறி நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின் உத்தாரம் பன்னிரண் டாதி கலைதொகும் பத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே.

vittāñ cekamaya māka varaikīṟi nattār kalaikaḷ patiṉāṟu nāṭṭippiṉ uttāram paṉṉiraṇ ṭāti kalaitokum pattām pirama caṭaṅkupārt tōtiṭē.

Report an error

கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடை கொண்டொழிந் தேனுடன் கூடிய காலத்துப் பண்பழி யாத பதிவழி யேசென்று நண்பழி யாமே நமவென லாமே

kaṇṭeḻun tēṉkama lammala ruḷḷiṭai koṇṭoḻin tēṉuṭaṉ kūṭiya kālattup paṇpaḻi yāta pativaḻi yēceṉṟu naṇpaḻi yāmē namaveṉa lāmē

Report an error

புண்ணிய வானவர் பூமழை தூவிநின்(று) எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம் நண்ணுவர் நண்ணி நமஎன்னு நாமத்தைக் கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.

puṇṇiya vāṉavar pūmaḻai tūviniṉ(ṟu) eṇṇuvar aṇṇal iṇaiyaṭi mantiram naṇṇuvar naṇṇi namaeṉṉu nāmattaik kaṇṇeṉa uṉṉik kalantuniṉ ṟārē.

Report an error

ஆறெழுத் தாலவ் வாறு சமயங்கள் ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர் சாவித் திரியில் தலையெழுத் தொன்றுள பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.

āṟeḻut tālav vāṟu camayaṅkaḷ āṟukku nālē irupattu nāleṉpar cāvit tiriyil talaiyeḻut toṉṟuḷa pētikka vallār piṟaviyaṟ ṟārkaḷē.

Report an error

எட்டினில் எட்டறை யிட்டோ ரறையிலே கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச் சுட்டி இவற்றைப் பிரணவஞ் சூழ்ந்திட்டு மட்டும் உயிர்கட் குமாபதி யானுண்டே.

eṭṭiṉil eṭṭaṟai yiṭṭō raṟaiyilē kaṭṭiya oṉṟeṭṭāyk kāṇa niṟaiyiṭṭuc cuṭṭi ivaṟṟaip piraṇavañ cūḻntiṭṭu maṭṭum uyirkaṭ kumāpati yāṉuṇṭē.

Report an error

நம்முதல் அவ்வொடு நாவின ராகிய யம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டு உம்முத லாகவே உணர்பவர் உச்சிமேல் உம்முத லாயவன் உற்றுநின் றானே.

nammutal avvoṭu nāviṉa rākiya yammuta lākiya eṭṭiṭai yuṟṟiṭṭu ummuta lākavē uṇarpavar uccimēl ummuta lāyavaṉ uṟṟuniṉ ṟāṉē.

Report an error

நின்ற அரசம் பலகைமேல் நேராக ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகந் துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத் தன்ற வெதும்பிடத் தம்பனங் காணுமே.

niṉṟa aracam palakaimēl nērāka oṉṟiṭa mavviṭṭu ōlaiyiṟ cātakan tuṉṟu meḻukaiyuḷ pūcic cuṭariṭait taṉṟa vetumpiṭat tampaṉaṅ kāṇumē.

Report an error

கரண விறளிப் பலகை யமன்றிசை மரணமிட் டேட்டின் மகார வெழுத்திட்டு வரணமி லைங்காயம் பூசி யடுப்பிடை முரணிற் புதைத்திட மோகன மாகுமே.

karaṇa viṟaḷip palakai yamaṉṟicai maraṇamiṭ ṭēṭṭiṉ makāra veḻuttiṭṭu varaṇami laiṅkāyam pūci yaṭuppiṭai muraṇiṟ putaittiṭa mōkaṉa mākumē.

Report an error

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற் பாங்கு படவே பலாசப் பலகையில் காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்(டு) ஓங்காரம் வைத்திடு உச்சாட னத்துக்கே.

āṅku vaṭamēṟkil aiyaṉār kōṭṭattiṟ pāṅku paṭavē palācap palakaiyil kāṅkaru mēṭṭiṟ kaṭuppūci vintuviṭ(ṭu) ōṅkāram vaittiṭu uccāṭa ṉattukkē.

Report an error

உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையிற் பச்சோலை யிற்பஞ்ச காயத்தைப் பாரித்து முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திடு வைச்சபின் மேலோர் மாரணம் வேண்டிலே.

ucciyam pōtil oḷivaṉṉi mūlaiyiṟ paccōlai yiṟpañca kāyattaip pārittu muccatu rattiṉ mutukāṭṭil vaittiṭu vaiccapiṉ mēlōr māraṇam vēṇṭilē.

Report an error

ஏய்ந்த வரிதார மேட்டின்மேலே பூசி ஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்திட்டு வாய்ந்ததோர் வில்வப் பலகை வசியத்துக் கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே

ēynta varitāra mēṭṭiṉmēlē pūci ēynta vakāram ukāram eḻuttiṭṭu vāyntatōr vilvap palakai vaciyattuk kēyntavait teṇpati ṉāyiram vēṇṭilē

Report an error

எண்ணாக் கருடனை ஏட்டின் யகாரமிட்(டு) எண்ணாப் பொன்னாளில் எழுவெள்ளி பூசிடா வெண்ணாவற் பலகையிலிட்டுமேற் கேநோக்கி எண்ணா வெழுத்தொடெண் ணாயிரம் வேண்டிலே

eṇṇāk karuṭaṉai ēṭṭiṉ yakāramiṭ(ṭu) eṇṇāp poṉṉāḷil eḻuveḷḷi pūciṭā veṇṇāvaṟ palakaiyiliṭṭumēṟ kēnōkki eṇṇā veḻuttoṭeṇ ṇāyiram vēṇṭilē

Report an error

அம்புய நீலங் கழுநீ ரணிநெய்தல் வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளஞ் சுரபுன்னை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

ampuya nīlaṅ kaḻunī raṇineytal vampaviḻ pūkamum mātavi mantāram tumpai vakuḷañ curapuṉṉai mallikai ceṇpakam pātiri cevvanti cāttiṭē.

Report an error

சாங்கம் தாகவே சந்தொடு சந்தனந் தேங்கமழ் குங்குமங் கர்ப்பூரங் காரகில் பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்(து) ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே

cāṅkam tākavē cantoṭu cantaṉan tēṅkamaḻ kuṅkumaṅ karppūraṅ kārakil pāṅku paṭappaṉi nīrāṟ kuḻaittuvait(tu) āṅkē aṇintunīr arcciyum aṉpoṭē

Report an error

அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே பொன்செய் விளக்கும் புகைதீபந் திசைதொறுந் துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால் இன்புட னேவந் தெய்திடும் முத்தியே.

aṉpuṭa ṉēniṉ ṟamutamum ēṟṟiyē poṉcey viḷakkum pukaitīpan ticaitoṟun tuṉpam akaṟṟit toḻuvōr niṉaiyuṅkāl iṉpuṭa ṉēvan teytiṭum muttiyē.

Report an error

எய்தி வழிப்படில் எய்தா தனவில்லை எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமும் எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும் எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே.

eyti vaḻippaṭil eytā taṉavillai eyti vaḻippaṭil intiraṉ celvamum eyti vaḻippaṭil eṇcitti uṇṭākum eyti vaḻippaṭil eytiṭum muttiyē.

Report an error

நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார் மண்ணிய நைவேத் தியமனு சந்தான நண்ணிய பஞ்சாங்க நண்ணுஞ் செபமென்னு மன்னு மனபவ னத்தொடு வைகுமே.

naṇṇum piṟatāra nīttār avittār maṇṇiya naivēt tiyamaṉu cantāṉa naṇṇiya pañcāṅka naṇṇuñ cepameṉṉu maṉṉu maṉapava ṉattoṭu vaikumē.

Report an error

வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர் வேண்டார்கள் கன்ம மதிலிச்சை யற்றபேர் வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள் வேண்டார்கள் கன்மம் மிகுதியோ ராய்ந்தன்பே

vēṇṭārkaḷ kaṉmam vimalaṉuk kāṭpaṭṭōr vēṇṭārkaḷ kaṉma matiliccai yaṟṟapēr vēṇṭārkaḷ kaṉmam mikuciva yōkikaḷ vēṇṭārkaḷ kaṉmam mikutiyō rāyntaṉpē

Report an error

அறிவரு ஞானத் தெவரும் அறியார் பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள் நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில் எறிமணி யுள்ளே இருக்கலு மாமே

aṟivaru ñāṉat tevarum aṟiyār poṟivaḻi tēṭip pulampukiṉ ṟārkaḷ neṟimaṉai yuḷḷē nilaipeṟa nōkkil eṟimaṇi yuḷḷē irukkalu māmē

Report an error

இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம் அருளறி யாமையும் மன்னு மறிவு மருளியவை விட்டெறி யாமை மயங்கு மருளுஞ் சிதைத்தோ ரவர்களா மன்றே.

iruḷum veḷiyumpōl iraṇṭām itayam aruḷaṟi yāmaiyum maṉṉu maṟivu maruḷiyavai viṭṭeṟi yāmai mayaṅku maruḷuñ citaittō ravarkaḷā maṉṟē.

Report an error

தானவ னாக அவனேதா னாயிட ஆன இரண்டில் அறிவன் சிவமாகப் போனவ னன்பிது நாலாம் மரபுறத் தாவை னாகுமோ ராதித்த தேவரே.

tāṉava ṉāka avaṉētā ṉāyiṭa āṉa iraṇṭil aṟivaṉ civamākap pōṉava ṉaṉpitu nālām marapuṟat tāvai ṉākumō rātitta tēvarē.

Report an error

ஓங்கார முந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா வகாரமும் நீள்கண்டத் தாயிடும் பாங்கார் நகாரம் பயில்நெற்றி யுற்றிடும் வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே.

ōṅkāra muntikkīḻ uṟṟiṭum ennāḷum nīṅkā vakāramum nīḷkaṇṭat tāyiṭum pāṅkār nakāram payilneṟṟi yuṟṟiṭum vīṅkākum vintuvum nātamē lākumē.

Report an error

நமவது வாசன மான பசுவே சிவமது சித்திச் சிவமாம் பதியே நமலற வாதி நாடுவ தன்றாஞ் சிவமாகு மாமோனஞ் சேர்தல்மெய் வீடே.

namavatu vācaṉa māṉa pacuvē civamatu cittic civamām patiyē namalaṟa vāti nāṭuva taṉṟāñ civamāku māmōṉañ cērtalmey vīṭē.

Report an error

தெளிவரு நாளிற் சிவஅமு தூறும் ஒளிவரு நாளில் ஓரெட்டில் உகளுங் ஒளிவரு அப்பதத் தோரிரண் டாகில் வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே

teḷivaru nāḷiṟ civaamu tūṟum oḷivaru nāḷil ōreṭṭil ukaḷuṅ oḷivaru appatat tōriraṇ ṭākil veḷitaru nātaṉ veḷiyāy iruntē

Report an error

நவகுண்ட மானவை நானுரை செய்யின் நவகுண்டத் துள்ளெழு நற்றீபந் தானும் நவகுண்டத் துள்ளெழு நன்மைகள் எல்லாம் நவகுண்ட மானவை நானுரைப் பேனே.

navakuṇṭa māṉavai nāṉurai ceyyiṉ navakuṇṭat tuḷḷeḻu naṟṟīpan tāṉum navakuṇṭat tuḷḷeḻu naṉmaikaḷ ellām navakuṇṭa māṉavai nāṉuraip pēṉē.

Report an error

உரைத்திடுங் குண்டத்தின் உள்ளேமுக் காலும் நகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும் பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே மிகைத்திடு குண்டங்கள் மேலறி யோமே.

uraittiṭuṅ kuṇṭattiṉ uḷḷēmuk kālum nakaitteḻu nāṟkōṇa naṉmaikaḷ aintum pakaittiṭu muppuram pāraṅki yōṭē mikaittiṭu kuṇṭaṅkaḷ mēlaṟi yōmē.

Report an error

மேலறிந் துள்ளே வெளிசெய்த வப்பொருள் காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர் பாரறிந் தண்டஞ் சிறகற நின்றது நானறிந் துள்ளே நாடிக்கொண் டேனே.

mēlaṟin tuḷḷē veḷiceyta vapporuḷ kālaṟin tuḷḷē karuttuṟṟa ceñcuṭar pāraṟin taṇṭañ ciṟakaṟa niṉṟatu nāṉaṟin tuḷḷē nāṭikkoṇ ṭēṉē.

Report an error

கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியால் அண்டங்கள் ஈரேழு மாக்கி அழிக்கலாம் பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம் இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.

koṇṭaik kuṇṭattiṉ uḷḷeḻu cōtiyāl aṇṭaṅkaḷ īrēḻu mākki aḻikkalām paṇṭaiyuḷ vētam paranta parappelām iṉṟucol nūlāy eṭutturait tēṉē.

Report an error

எடுத்தவக் குண்டத் திடம்பதி னாறிற் பதித்த கலைகளும் பாலித்து நிற்கும் கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே கொதித்தெழு வல்வினை கூடகி லாவே.

eṭuttavak kuṇṭat tiṭampati ṉāṟiṟ patitta kalaikaḷum pālittu niṟkum katittaṉal uḷḷeḻak kaṇṭukoḷ vārkkē kotitteḻu valviṉai kūṭaki lāvē.

Report an error

கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள் ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும் பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே

kūṭamuk kūṭattiṉ uḷḷeḻu kuṇṭattuḷ āṭiya aintum akampuṟam pāyniṟkum pāṭiya paṉṉī rirāciyum aṅkeḻa nāṭikkoḷ vārkaṭku naṟcuṭar tāṉē

Report an error

நற்சுட ராகுஞ் சிரமுக வட்டமாங் கைச்சுட ராகுங் கருத்துற்ற கைகளிற் பைச்சுடர் மேனி பதைப்புற் றிலிங்கமும் நற்சுட ராயெழு நல்லதென் றாளே.

naṟcuṭa rākuñ ciramuka vaṭṭamāṅ kaiccuṭa rākuṅ karuttuṟṟa kaikaḷiṟ paiccuṭar mēṉi pataippuṟ ṟiliṅkamum naṟcuṭa rāyeḻu nallateṉ ṟāḷē.

Report an error

நல்லதென் றாளே நமக்குற்ற நாயகஞ் சொல்லதென் றாளே சடர்முடி பாதமா மெல்லநின் றாளை வினவகில் லாதவர் கல்லதன் றாளையுங் கற்றும்வின் னாளே.

nallateṉ ṟāḷē namakkuṟṟa nāyakañ collateṉ ṟāḷē caṭarmuṭi pātamā mellaniṉ ṟāḷai viṉavakil lātavar kallataṉ ṟāḷaiyuṅ kaṟṟumviṉ ṉāḷē.

Report an error

வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச் சொன்னால் இரண்டுஞ் சுடர்நாகந் திக்கெங்கும் பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர் என்னாகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

viṉṉā viḷampiṟai mēviya kuṇṭattuc coṉṉāl iraṇṭuñ cuṭarnākan tikkeṅkum paṉṉālu nākam paranta parañcuṭar eṉṉākat tuḷḷē iṭaṅkoṇṭa vāṟē.

Report an error

இடங்கொண்ட பாதம் எழிற்சுட ரேக நடங்கொண்ட பாதங்கள் நன்னீ ரதற்குச் சகங்கொண்ட கையிரண் டாறுந் தழைப்ப முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.

iṭaṅkoṇṭa pātam eḻiṟcuṭa rēka naṭaṅkoṇṭa pātaṅkaḷ naṉṉī rataṟkuc cakaṅkoṇṭa kaiyiraṇ ṭāṟun taḻaippa mukaṅkoṇṭa ceñcuṭar mukkaṇa ṉārkkē.

Report an error

முக்கணன் றானே முச்சுட ராயவன் அக்கணன் றானே அகிலமும் உண்டவன் திக்கணனாகித் திசையெட்டுங் கண்டவன் எட்கணன் றானுக்கும் எந்தை பிரானே.

mukkaṇaṉ ṟāṉē muccuṭa rāyavaṉ akkaṇaṉ ṟāṉē akilamum uṇṭavaṉ tikkaṇaṉākit ticaiyeṭṭuṅ kaṇṭavaṉ eṭkaṇaṉ ṟāṉukkum entai pirāṉē.

Report an error

எந்தைபிரானுக் கிருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னே சண்முகந் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலான் மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே.

entaipirāṉuk kirumūṉṟu vaṭṭamāyt tantaitaṉ muṉṉē caṇmukan tōṉṟalāl kantaṉ cuvāmi kalantaṅ kiruttalāṉ maintaṉ ivaṉeṉṟu māṭṭikkoḷ ḷīrē.

Report an error

மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள் ஆட்டிய காலொன்றும் இரண்டாய் அலர்ந்திடும் வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழு நாட்டுஞ் சுரரிவர் நல்லொளி தானே

māṭṭiya kuṇṭattiṉ uḷḷeḻu vētattuḷ āṭṭiya kāloṉṟum iraṇṭāy alarntiṭum vāṭṭiya kaiyiraṇ ṭoṉṟu pataitteḻu nāṭṭuñ curarivar nalloḷi tāṉē

Report an error

நல்லொளி யாக நடந்த வுலகெங்குங் கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும் சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம் கல்லொளி கண்ணுள மாகிநின் றாளே.

nalloḷi yāka naṭanta vulakeṅkuṅ kalloḷi yākak kalantuḷ iruntiṭum colloḷi yākat toṭarnta uyirkkelām kalloḷi kaṇṇuḷa mākiniṉ ṟāḷē.

Report an error

நின்றஇக் குண்டம் நிலையாறு கோணமாய்ப் பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறுங் கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ விண்ணுளும் என்ன எடுக்கலு மாமே.

niṉṟaik kuṇṭam nilaiyāṟu kōṇamāyp paṇṭaiyil vaṭṭam pataitteḻu māṟāṟuṅ koṇṭait tattuvam uḷḷē kalanteḻa viṇṇuḷum eṉṉa eṭukkalu māmē.

Report an error

எடுக்கின்ற பாதங்கண் மூன்ற தெழுகை கடுத்த முகம்இரண் டாறுகண் ணாகப் படித்தெண்ணு நாவெழு கொம்பொரு நாலும் அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே.

eṭukkiṉṟa pātaṅkaṇ mūṉṟa teḻukai kaṭutta mukamiraṇ ṭāṟukaṇ ṇākap paṭitteṇṇu nāveḻu komporu nālum aṭutteḻu kaṇṇāṉa tantami lāṟkē.

Report an error

அந்தமில் லானுக் ககடலிந் தானில்லை தந்தமில் லானை அளப்பவர் தாமில்லை தந்தமில் லானுக் கடுத்த சொற் றானில்லை அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.

antamil lāṉuk kakaṭalin tāṉillai tantamil lāṉai aḷappavar tāmillai tantamil lāṉuk kaṭutta coṟ ṟāṉillai antamil lāṉai aṟintukoḷ pattē.

Report an error

பத்திட்டங் கெட்டிட் டாறிட்டு நாலிட்டு மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகமும் பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

pattiṭṭaṅ keṭṭiṭ ṭāṟiṭṭu nāliṭṭu maṭṭiṭṭa kuṇṭam malarnteḻu tāmarai kaṭṭiṭṭu niṉṟu kalantamey yākamum paṭṭiṭṭu niṉṟatu pārppati pālē.

Report an error

பார்ப்ப பாகன் பரந்தகை நாலைஞ்சு காற்பதி பத்து முகம்பத்துக் கணகளும் பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே.

pārppa pākaṉ parantakai nālaiñcu kāṟpati pattu mukampattuk kaṇakaḷum pūppati pātam iraṇṭu cuṭarmuṭi nāṟpatu cōttiram nalliru pattañcē.

Report an error

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும் அஞ்சிட்ட குண்டமலர்ந் தங்கிருத்தலால் பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர் கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதன் முத்தியே.

añciṭṭa kōlam aḷappaṉa aiyaintum añciṭṭa kuṇṭamalarn taṅkiruttalāl pañciṭṭa cōti paranta parañcuṭar koñciṭṭa vaṉṉiyaik kūṭutaṉ muttiyē.

Report an error

முத்தநற் சோதி முழுச்சுட ராயவன் கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும் பற்றற நாடிப் பரந்தொளி யூடுபோய் செற்றற் றிருந்தவர் சேர்ந்திருந் தாரே.

muttanaṟ cōti muḻuccuṭa rāyavaṉ kaṟṟaṟṟu niṉṟār karuttuḷ iruntiṭum paṟṟaṟa nāṭip parantoḷi yūṭupōy ceṟṟaṟ ṟiruntavar cērntirun tārē.

Report an error

சேர்ந்த கலையஞ்சுஞ் சேருமிக் குண்டமும் ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும் பாய்ந்தஜம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக் காய்ந்தவர் என்றுங் கலந்தவர் தாமே.

cērnta kalaiyañcuñ cērumik kuṇṭamum ārnta ticaikaḷum aṅkē amarntiṭum pāyntajam pūtamum pārkkiṉṟa vaṉṉiyaik kāyntavar eṉṟuṅ kalantavar tāmē.

Report an error

மெய்கண்ட மாழ்விரி நீருல கேழையும் உய்கண்டஞ் செய்த ஒருவனைச் சேருமின் செய்கண்ட ஞானந் திருந்திய தேவர்கள் பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே.

meykaṇṭa māḻviri nīrula kēḻaiyum uykaṇṭañ ceyta oruvaṉaic cērumiṉ ceykaṇṭa ñāṉan tiruntiya tēvarkaḷ poykaṇṭam illāp poruḷkalan tārē.

Report an error

கலந்திரு பாதம் இருகர மாகும் மலர்ந்திரு குண்ட மகாரத்தோர் மூக்கு மலர்ந்தெழு செம்முக மற்றைக்கண் நெற்றி உணர்ந்திரு குஞ்சியங் குத்தம னார்க்கே.

kalantiru pātam irukara mākum malarntiru kuṇṭa makārattōr mūkku malarnteḻu cemmuka maṟṟaikkaṇ neṟṟi uṇarntiru kuñciyaṅ kuttama ṉārkkē.

Report an error

உத்தமன் சோதி உளனொரு பாலனாய் மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும் பச்சிம திக்கும் பரந்து குழிந்தன சத்திமா னாகத் தழைத்த கொடியே.

uttamaṉ cōti uḷaṉoru pālaṉāy mattima ṉāki malarntaṅ kiruntiṭum paccima tikkum parantu kuḻintaṉa cattimā ṉākat taḻaitta koṭiyē.

Report an error

கொடியாறு சென்று குலாவிய குண்டம் அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும் படியே முலகும் பரந்த சுடரை மடியாது கண்டவர் மாதன மாமே

koṭiyāṟu ceṉṟu kulāviya kuṇṭam aṭiyiru kōṇamāy antamum okkum paṭiyē mulakum paranta cuṭarai maṭiyātu kaṇṭavar mātaṉa māmē

Report an error

மாதன மாக வளர்கின்ற வன்னியைச் சாதன மாகச் சமைந்த குருவென்றும் போதன மாகப் பொருந்த உலகாளும் பாதன மாகப் பரிந்தது பார்த்தே.

mātaṉa māka vaḷarkiṉṟa vaṉṉiyaic cātaṉa mākac camainta kuruveṉṟum pōtaṉa mākap porunta ulakāḷum pātaṉa mākap parintatu pārttē.

Report an error

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை ஆத்தம தாகவே யாய்ந்தறி வாரில்லை காத்துட லுள்ளே கருதி இருந்தவர் மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

pārttiṭam eṅkum paranteḻu cōtiyai āttama tākavē yāyntaṟi vārillai kāttuṭa luḷḷē karuti iruntavar mūttuṭal kōṭi yukaṅkaṇṭa vāṟē.

Report an error

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும் பயங்கண்டு கொண்டவிப் பாய்கரு வொப்பச் சகங்கண்டு கொண்டது சாதன மாமே

ukaṅkaṇṭa oṉpatu kuṇṭamum okka akaṅkaṇṭa yōkiyuḷ nāṭi eḻuppum payaṅkaṇṭu koṇṭavip pāykaru voppac cakaṅkaṇṭu koṇṭatu cātaṉa māmē

Report an error

சாதனை நாலு தழல்மூன்று வில்வயம் வேதனை வட்டம் விளையாறு பூநிலை போதனை போதைஞ்சு பொற்கய வாரண நாதனை நாடு நவகோடி தானே.

cātaṉai nālu taḻalmūṉṟu vilvayam vētaṉai vaṭṭam viḷaiyāṟu pūnilai pōtaṉai pōtaiñcu poṟkaya vāraṇa nātaṉai nāṭu navakōṭi tāṉē.

Report an error

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில் தாமான மந்திரஞ் சத்திதன் மூர்த்திகள் ஆமா யலவாந் திரிபுரை யாங்கே.

māmāyai māyai vayintavam vaikari ōmāyai uḷḷoḷi ōrāṟu kōṭiyil tāmāṉa mantirañ cattitaṉ mūrttikaḷ āmā yalavān tiripurai yāṅkē.

Report an error

திரிபுரை சுந்தரி அந்தரி சுந்துரப் பரிபுரை நாரணி யாம்பல வண்ணத்தி இருள்புரை ஈசி மனோன்மணி என்ன வருபல வாய்நிற்கு மாமாது தானே.

tiripurai cuntari antari cunturap paripurai nāraṇi yāmpala vaṇṇatti iruḷpurai īci maṉōṉmaṇi eṉṉa varupala vāyniṟku māmātu tāṉē.

Report an error

தானா அமைந்தவம் முப்புரந் தன்னிடைத் தானான மூவுரு வோருருத் தன்மையள் தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி தானான போகமும் முக்தியும் நல்குமே.

tāṉā amaintavam muppuran taṉṉiṭait tāṉāṉa mūvuru vōrurut taṉmaiyaḷ tāṉāṉa poṉcemmai veṇṇiṟat tāḷkalvi tāṉāṉa pōkamum muktiyum nalkumē.

Report an error

நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள் பல்கும் பரவிந்து பாரண்ட மானவை நல்கும் பரையபி ராமி அகோசரி புல்கு மருளுமப் போதாந்தந் தாளுமே.

nalkun tiripurai nātanā tāntaṅkaḷ palkum paravintu pāraṇṭa māṉavai nalkum paraiyapi rāmi akōcari pulku maruḷumap pōtāntan tāḷumē.

Report an error

தாளணி நூபுரஞ் செம்பட்டுத் தானுடை வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில் ஏரணி அங்குச பாசம் எழில்முடி காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.

tāḷaṇi nūpurañ cempaṭṭut tāṉuṭai vāraṇi koṅkai malarkkaṉṉal vāḷivil ēraṇi aṅkuca pācam eḻilmuṭi kāraṇi māmaṇik kuṇṭalak kātikkē.

Report an error

குண்டலக் காதி கொலைவில் புருவத்தள் கொண்ட வரத்தினின் மன்னுகோ லத்தள் கண்டிகை யாரங் கதிர்முடி மாமதிச் சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

kuṇṭalak kāti kolaivil puruvattaḷ koṇṭa varattiṉiṉ maṉṉukō lattaḷ kaṇṭikai yāraṅ katirmuṭi māmatic caṇṭikai nāṟṟicai tāṅkiniṉ ṟāḷē.

Report an error

நின்ற திரிபுரை நீளும் புராதனி குன்றலில் மோகினி மாதிருக் குஞ்சிகை நன்றறி கண்டிகை நாற்காற் கரீடணி துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

niṉṟa tiripurai nīḷum purātaṉi kuṉṟalil mōkiṉi mātiruk kuñcikai naṉṟaṟi kaṇṭikai nāṟkāṟ karīṭaṇi tuṉṟiya naṟcutta tāmaraic cuttaiyē.

Report an error

சுத்தவம் பாரத் தனத்தி சுகோதயன் வத்துவ மாயா ளுமாசத்தி மாபரை அத்தகை யான மனோரணி தானுமாய் வைத்தவக் கோல மதியவ ளாகுமே.

cuttavam pārat taṉatti cukōtayaṉ vattuva māyā ḷumācatti māparai attakai yāṉa maṉōraṇi tāṉumāy vaittavak kōla matiyava ḷākumē.

Report an error

அவளை யறியா அமரரும் இல்லை அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை அவளன்றி யூர்புகு மாறறி யேனே.

avaḷai yaṟiyā amararum illai avaḷaṉṟic ceyyum aruntavam illai avaḷaṉṟi aivarāl āvatoṉ ṟillai avaḷaṉṟi yūrpuku māṟaṟi yēṉē.

Report an error

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பார் அறிவார் அறிவுரு வாமவள் என்பார் அறிவார் கரும மவளிச்சை என்பார் அறிவார் பரனு மவளிடத் தானே.

aṟivār parācatti āṉantam eṉpār aṟivār aṟivuru vāmavaḷ eṉpār aṟivār karuma mavaḷiccai eṉpār aṟivār paraṉu mavaḷiṭat tāṉē.

Report an error

தானெங் குளதங் குளதையன் மாதேவி ஊனெங் குளஅங் குள்ளுயிர்க் காவலன் வானெங் குளஅங் குளேவந்து மப்பாலாம் கோனெங்கும் நின்ற குறிபல பாரே.

tāṉeṅ kuḷataṅ kuḷataiyaṉ mātēvi ūṉeṅ kuḷaaṅ kuḷḷuyirk kāvalaṉ vāṉeṅ kuḷaaṅ kuḷēvantu mappālām kōṉeṅkum niṉṟa kuṟipala pārē.

Report an error

பராசத்தி மாசத்தி பல்வகை யாலுந் தராசத்தி யாய்நின்ற தன்மை யுணரா உராசத்தி ஊழிகள் தோறும் உடனே புராசத்தி புண்ணிய மாகிய போகமே.

parācatti mācatti palvakai yālun tarācatti yāyniṉṟa taṉmai yuṇarā urācatti ūḻikaḷ tōṟum uṭaṉē purācatti puṇṇiya mākiya pōkamē.

Report an error

போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும் பாகஞ்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும் ஆகஞ்செய் தாங்கே அடியவர் நாடொறும் பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.

pōkañcey catti purikuḻa lāḷoṭum pākañcey tāṅkē parācatti yāyniṟkum ākañcey tāṅkē aṭiyavar nāṭoṟum pākañcey ñāṉam paṭarkiṉṟa kompē.

Report an error

கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச் செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை நம்பிஎன் உள்ளே நயந்துவைத் தேனே.

kompaṉai yāḷaik kuvimulai maṅkaiyai vampaviḻ kōtaiyai vāṉavar nāṭiyaic cempava ḷattiru mēṉic ciṟumiyai nampieṉ uḷḷē nayantuvait tēṉē.

Report an error

வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும் பத்து முகமும் பரையும் பராபரைச் சித்தக் கரணச் செயல்களுஞ் செய்திடுஞ் சத்தியும் வித்தைத் தலையவ ளாமே.

vaitta poruḷum maruvuyirp paṉmaiyum pattu mukamum paraiyum parāparaic cittak karaṇac ceyalkaḷuñ ceytiṭuñ cattiyum vittait talaiyava ḷāmē.

Report an error

தலைவி தடமுலை மேல்நின்ற தையல் தொலைவில் தவஞ்செயுஞ் தூய்நெறித் தோகை கலைபல வென்றிடுங் கன்னியென் னுள்ளம் நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

talaivi taṭamulai mēlniṉṟa taiyal tolaivil tavañceyuñ tūyneṟit tōkai kalaipala veṉṟiṭuṅ kaṉṉiyeṉ ṉuḷḷam nilaipeṟa iṅkē niṟaintuniṉ ṟāḷē.

Report an error

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற என்றன் அகம்படிந் தேழுல குந்தொழ மன்றது வொன்றி மனோன்மணி மங்கலி ஒன்றென்ன வொன்றநின் றொத்தடைந் தாளே.

niṉṟavaḷ nēriḻai nīḷkalai yōṭuṟa eṉṟaṉ akampaṭin tēḻula kuntoḻa maṉṟatu voṉṟi maṉōṉmaṇi maṅkali oṉṟeṉṉa voṉṟaniṉ ṟottaṭain tāḷē.

Report an error

ஒத்தடங் குங்கும லத்திடை யாயிழை அத்தகை செய்கின்ற வாய பெரும்பதி மத்தடை கின்ற மனோன்மணி மங்கலி சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

ottaṭaṅ kuṅkuma lattiṭai yāyiḻai attakai ceykiṉṟa vāya perumpati mattaṭai kiṉṟa maṉōṉmaṇi maṅkali cittaṭaik kumvaḻi tērntuṇa rārkaḷē.

Report an error

உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும் புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக் கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பானே.

uṇarntuṭa ṉēniṟkum uḷḷoḷi yāki maṇaṅkamaḻ pūṅkuḻal maṅkaiyun tāṉum puṇarntuṭa ṉēniṟkum pōtaruṅ kālaik kaṇinteḻu vārkkuk katiyaḷip pāṉē.

Report an error

அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி புளியுறு புன்பழம் போலுள்ள நோக்கித் தெளியுறு சித்துச் சிவகதி காட்டி ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே.

aḷiyotta peṇpiḷḷai āṉanta cuntari puḷiyuṟu puṉpaḻam pōluḷḷa nōkkit teḷiyuṟu cittuc civakati kāṭṭi oḷiyuṟa vaitteṉṉai uyyavuṇ ṭāḷē.

Report an error

உண்டில்லை என்ற துருச்செய நின்றது வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது கண்டிலர் காரண காரணி தம்மொடு மண்டல மூன்றுற மன்னிநின் றாளே.

uṇṭillai eṉṟa turucceya niṉṟatu vaṇṭillai maṉṟiṉuḷ maṉṉi niṟaintatu kaṇṭilar kāraṇa kāraṇi tammoṭu maṇṭala mūṉṟuṟa maṉṉiniṉ ṟāḷē.

Report an error

நின்றா ளவன்றன் உடலும் உயிருமாய்ச் சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே நின்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.

niṉṟā ḷavaṉṟaṉ uṭalum uyirumāyc ceṉṟāḷ civakati cērum parācatti oṉṟāka eṉṉuṭ pukuntuṇar vākiyē niṉṟāḷ parañcuṭar ēṭaṅkai yāḷē.

Report an error

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை பாடுந் திருமுறை பார்ப்பனி பாதங்கள் சூடுமென் சென்னிவாய் தோத்திரஞ் சொல்லுமே.

ēṭaṅkai naṅkai iṟaieṅkaḷ mukkaṇṇi vēṭam paṭikam virumpumveṇ ṭāmarai pāṭun tirumuṟai pārppaṉi pātaṅkaḷ cūṭumeṉ ceṉṉivāy tōttirañ collumē.

Report an error

தோத்திரஞ் செய்து தொழுது துணையடி வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும் பரர்த்திடு மங்குச பாசம் பசுங்கரும் பார்த்திடும் பூம்பிள்ளை யாகுமாம் ஆதிக்கே.

tōttirañ ceytu toḻutu tuṇaiyaṭi vāyttiṭa ētti vaḻipaṭu māṟirum pararttiṭu maṅkuca pācam pacuṅkarum pārttiṭum pūmpiḷḷai yākumām ātikkē.

Report an error

ஆதி விதமிகுத் தண்டந்த மால்தங்கை நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப் பாதியில் வைத்துப் பல்காற் பயில்விரேல் சோதி மிகுத்துமுக் காலமுந் தோன்றுமே.

āti vitamikut taṇṭanta māltaṅkai nīti malariṉmēl nēriḻai nāmattaip pātiyil vaittup palkāṟ payilvirēl cōti mikuttumuk kālamun tōṉṟumē.

Report an error

மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல் வேதாதி நூலின் விளங்கும் பராபரை ஆதார மாகியே ஆய்ந்து பரப்பினன் நாதாதி நாதத்து நல்லரு ளாளே.

mētāti īreṭṭu mākiya melliyal vētāti nūliṉ viḷaṅkum parāparai ātāra mākiyē āyntu parappiṉaṉ nātāti nātattu nallaru ḷāḷē.

Report an error

அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர் பொருள்பெற்ற சிந்தை புவனா பதியார் மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவன் நானே.

aruḷpeṟ ṟavarcolla vārīr maṉitar poruḷpeṟṟa cintai puvaṉā patiyār maruḷuṟṟa cintaiyai māṟṟi yarumaip poruḷuṟṟa cēvaṭi pōṟṟuvaṉ nāṉē.

Report an error

ஆன வராக முகத்தி பதத்தினள் ஈன வராகம் இடிக்கும் முசலத்தோ(டு) ஏனை யுழுபடை ஏந்திய வெண்ணகை ஊன மறவுணர்ந் தாருளத் தோங்குமே.

āṉa varāka mukatti patattiṉaḷ īṉa varākam iṭikkum mucalattō(ṭu) ēṉai yuḻupaṭai ēntiya veṇṇakai ūṉa maṟavuṇarn tāruḷat tōṅkumē.

Report an error

ஓங்காரி என்பா ளவளொரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை யுடையவள் ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு ரீங்காரத் துள்ளே யினிதிருந் தாளே.

ōṅkāri eṉpā ḷavaḷoru peṇpiḷḷai nīṅkāta paccai niṟattai yuṭaiyavaḷ āṅkāri yākiyē aivaraip peṟṟiṭṭu rīṅkārat tuḷḷē yiṉitirun tāḷē.

Report an error

தானே தலைவி யெனநின்ற தற்பரை தானே யுயிர்வித்துத் தந்த பதினாறும் வானோர் தலமும் மனமும்நற் புத்தியுந் தானே சிவகதி தன்மையு மாமே.

tāṉē talaivi yeṉaniṉṟa taṟparai tāṉē yuyirvittut tanta patiṉāṟum vāṉōr talamum maṉamumnaṟ puttiyun tāṉē civakati taṉmaiyu māmē.

Report an error

பன்னிரண் டாங்கலை யாதி பயிரவி தன்னில் அகரரமு மாயையுங் கற்பித்துப் பன்னிரண் டாதியோ டந்தப் பதினாலுஞ் சொன்னிலை சோடச மந்தமென் றோதிடே.

paṉṉiraṇ ṭāṅkalai yāti payiravi taṉṉil akararamu māyaiyuṅ kaṟpittup paṉṉiraṇ ṭātiyō ṭantap patiṉāluñ coṉṉilai cōṭaca mantameṉ ṟōtiṭē.

Report an error

அந்தப் பதினாலும் அதுவே வயிரவி முந்து நடுவும் முடிவும் முதலாகச் சிந்தைக் கலசத் தெழுகின்ற மாசத்தி அந்தமும் ஆதியு மாகிநின் றாளே.

antap patiṉālum atuvē vayiravi muntu naṭuvum muṭivum mutalākac cintaik kalacat teḻukiṉṟa mācatti antamum ātiyu mākiniṉ ṟāḷē.

Report an error

ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர் போகின்ற பூதம் பொருந்து புராதரர் சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறம் போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.

ākiṉṟa mūvarum aṅkē aṭaṅkuvar pōkiṉṟa pūtam poruntu purātarar cārkiṉṟa cārvuḻic cārār catirpeṟam pōkun tiripurai puṇṇiyat tōrē.

Report an error

புண்ணிய நந்தி புன்தன் திருவாகும் எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி பண்ணிய வன்னி பகலோன் மதியீறு திண்ணிய சிந்தையன் தென்னனு மாமே.

puṇṇiya nanti puṉtaṉ tiruvākum eṇṇiya nāṭkaḷ irupattēḻ cūḻmati paṇṇiya vaṉṉi pakalōṉ matiyīṟu tiṇṇiya cintaiyaṉ teṉṉaṉu māmē.

Report an error

தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும் பொன்னங் கீரியிற் பூதலம் போற்றிடும் மன்னும் பரிபிடி யந்தம் பகவனோ(டு) உன்னுந் திரிபுரை ஓதிநின் றானுக்கே.

teṉṉaṉ tirunanti cēvakaṉ taṉṉoṭum poṉṉaṅ kīriyiṟ pūtalam pōṟṟiṭum maṉṉum paripiṭi yantam pakavaṉō(ṭu) uṉṉun tiripurai ōtiniṉ ṟāṉukkē.

Report an error

ஓதிய நந்தி உணருந் திருவருள் நீதியில் வேத நெறிவந் துரைசெய்யும் போதம் இருபத் தெழுநாள் புணர்மதி சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.

ōtiya nanti uṇarun tiruvaruḷ nītiyil vēta neṟivan turaiceyyum pōtam irupat teḻunāḷ puṇarmati cōti vayiravi cūlamvan tāḷumē.

Report an error

சூலங் கபாலங்கை ஏந்திய சூலிக்கு நாலாங் கரமுள நாகபா சாங்குச மாலங் கயனறி யாத வடிவுக்கு மேலங்க மாய்நின்ற மெல்லிய லாறே.

cūlaṅ kapālaṅkai ēntiya cūlikku nālāṅ karamuḷa nākapā cāṅkuca mālaṅ kayaṉaṟi yāta vaṭivukku mēlaṅka māyniṉṟa melliya lāṟē.

Report an error

மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை கல்லியல் ஒப்பது காணுந் திருமேனி பல்லிய லாடையும் பன்மணி தானே.

melliyal vañci viṭami kalaiñāṉi colliya kiñcuka niṟamaṉṉu cēyiḻai kalliyal oppatu kāṇun tirumēṉi palliya lāṭaiyum paṉmaṇi tāṉē.

Report an error

பன்மணி சந்திர கோடி திருமுடி சொன்மணி குண்டலக் காதி யுழைக்கண்ணி நன்மணி சூரிய சோம நயனத்தள் பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.

paṉmaṇi cantira kōṭi tirumuṭi coṉmaṇi kuṇṭalak kāti yuḻaikkaṇṇi naṉmaṇi cūriya cōma nayaṉattaḷ poṉmaṇi vaṉṉiyum pūrikkiṉ ṟāḷē.

Report an error

பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேயோர் அரியத் தாளுண்டங் கெண்மர் கன்னியர் பாரித்த பெண்கள் அறுபத்து நால்வருஞ் சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.

pūritta pūvitaḻ eṭṭiṉuk kuḷḷēyōr ariyat tāḷuṇṭaṅ keṇmar kaṉṉiyar pāritta peṇkaḷ aṟupattu nālvaruñ cārittuc cattiyait tāṅkaḷkaṇ ṭārē.

Report an error

கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம் எண்டிசை யோகி இறைவி பராசத்தி அண்டமோ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி புண்டரி கத்தினுட் பூசனை யாளே.

kaṇṭa cilampu vaḷaicaṅku cakkaram eṇṭicai yōki iṟaivi parācatti aṇṭamō ṭeṇṭicai tāṅkum aruṭcelvi puṇṭari kattiṉuṭ pūcaṉai yāḷē.

Report an error

பூசனை கந்தம் புனைமலர் மாகோடி யோசனை பஞ்சத் தொலிவந் துரைசெய்யும் வாசமி லாத மணிமந் திரயோகம் தேசந் திகழுந் திரிபுரை காணே.

pūcaṉai kantam puṉaimalar mākōṭi yōcaṉai pañcat tolivan turaiceyyum vācami lāta maṇiman tirayōkam tēcan tikaḻun tiripurai kāṇē.

Report an error

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும் பேணுஞ் சிவனும் பிரமனும் மாயனுங் காணுந் தலைவிநற் காரணி காணே.

kāṇum palapala teyvaṅkaḷ vevvēṟu pūṇum palapala poṉpōlat tōṟṟiṭum pēṇuñ civaṉum piramaṉum māyaṉuṅ kāṇun talaivinaṟ kāraṇi kāṇē.

Report an error

காரண மந்திரம் ஓதுங் கமலத்துப் பூரண கும்ப விரேசம் பொருந்திய நாரணி நந்தி நடுவங் குரைசெய்த ஆரண வேதநூல் அந்தமு மாமே.

kāraṇa mantiram ōtuṅ kamalattup pūraṇa kumpa virēcam poruntiya nāraṇi nanti naṭuvaṅ kuraiceyta āraṇa vētanūl antamu māmē.

Report an error

அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறி யுரைசெய்யுஞ் செந்தமி ழாதி தெளிந்து வழிபடு நந்தி இதனை நவமுரைத் தானே.

anta naṭuviral āti ciṟuviral vanta vaḻimuṟai māṟi yuraiceyyuñ centami ḻāti teḷintu vaḻipaṭu nanti itaṉai navamurait tāṉē.

Report an error

உரைத்த நவசத்தி ஒன்று முடிய நிரைத்த விராசி நெடுமுறை எண்ணிப் பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி நிரைத்து நியதி நியமஞ்செய் தானே.

uraitta navacatti oṉṟu muṭiya niraitta virāci neṭumuṟai eṇṇip piraiccatam eṭṭumuṉ pēciya nanti niraittu niyati niyamañcey tāṉē.

Report an error

தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற வேமத் திருளற வீசும் இளங்கொடி ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை மேவித் தமுதொடு மீண்டது காணே.

tāmak kuḻali tayaikkaṇṇi uḷniṉṟa vēmat tiruḷaṟa vīcum iḷaṅkoṭi ōmap peruñcuṭar uḷḷeḻu nuṇpukai mēvit tamutoṭu mīṇṭatu kāṇē.

Report an error

காணும் இருதய மந்திர முங்கண்டு பேணு நமவென்று பேசுந் தலைமேலே வேணு நடுவு மிகநின்ற வாகுதி பூணு நடுவென்ற வந்தஞ் சிகையே.

kāṇum irutaya mantira muṅkaṇṭu pēṇu namaveṉṟu pēcun talaimēlē vēṇu naṭuvu mikaniṉṟa vākuti pūṇu naṭuveṉṟa vantañ cikaiyē.

Report an error

சிகைநின்ற வந்தக் கவசங்கொண் டாதிப் பகைநின்ற லங்கத்தைப் பாரென்று மாறித் தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம் வகைநின்ற யோனி வருத்தலு மாமே.

cikainiṉṟa vantak kavacaṅkoṇ ṭātip pakainiṉṟa laṅkattaip pāreṉṟu māṟit tokainiṉṟa nēttira muttirai cūlam vakainiṉṟa yōṉi varuttalu māmē.

Report an error

வருத்த மிரண்டுஞ் சிறுவிரன் மாறிப் பொருத்தி அணிவிரற் சுட்டிப் பிடித்து நெறித்தொன்ற வைத்து நெடிது நடுவே பெருத்த விரலிரண் டுள்புக்குப் பேசே.

varutta miraṇṭuñ ciṟuviraṉ māṟip porutti aṇiviraṟ cuṭṭip piṭittu neṟittoṉṟa vaittu neṭitu naṭuvē perutta viraliraṇ ṭuḷpukkup pēcē.

Report an error

பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக் கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.

pēciya mantiram ikāram piritturai kūcami lāta cakārattai muṉkoṇṭu vācip pirāṇaṉ upatēca mākaikkuk kūciya vintu vuṭaṉkoṇṭu kūvē.

Report an error

கூவிய சீவன் பிராணன் முதலாகப் பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை மேவிய மாயை விரிசங்கு முத்திரை தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.

kūviya cīvaṉ pirāṇaṉ mutalākap pāviya cavvuṭaṉ paṇṇum yakārattai mēviya māyai viricaṅku muttirai tēvi naṭuvuḷ tikaḻntuniṉ ṟāḷē.

Report an error

நின்ற வயிரவி நீலி நிசாசரி ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச் சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே நன்றருள் ஞாலத்து நாடிடுஞ் சாற்றியே.

niṉṟa vayiravi nīli nicācari oṉṟum iraṇṭum oruṅkiya uḷḷattuc ceṉṟaruḷ nāyaki tēvar pirāṉukkē naṉṟaruḷ ñālattu nāṭiṭuñ cāṟṟiyē.

Report an error

சாற்றிய வேதஞ் சராசரம் ஐம்பூதம் நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே.

cāṟṟiya vētañ carācaram aimpūtam nāṟṟicai mukkaṇṇi nāṭum iruḷveḷi tōṟṟum uyirppaṉmai cōti parāparai āṟṟalo ṭāyniṟkum āti mutalviyē.

Report an error

ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி ஓதி யுணரில் உடலுயிர் ஈசனாம் பேதை உலகிற் பிறவிகள் நாசமாம் ஓத வுலவாத கோலமொன் றாகுமே.

āti vayiravi kaṉṉit tuṟaimaṉṉi ōti yuṇaril uṭaluyir īcaṉām pētai ulakiṟ piṟavikaḷ nācamām ōta vulavāta kōlamoṉ ṟākumē.

Report an error

கோலக் குழலி குலாய புருவத்தள் நீலக் குவளை மலரன்ன கண்ணினாள் ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி மேவிச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

kōlak kuḻali kulāya puruvattaḷ nīlak kuvaḷai malaraṉṉa kaṇṇiṉāḷ ālikkum iṉṉamu tāṉanta cuntari mēvic civattai veḷippaṭut tāḷē.

Report an error

வெளிப்படு வித்து விளைவறி வித்துத் தெளிப்படு வித்தென் சிந்தையி னுள்ளே களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதியை ஒளிப்படு வித்தென்னை உய்யக்கொண் டாளே.

veḷippaṭu vittu viḷaivaṟi vittut teḷippaṭu vitteṉ cintaiyi ṉuḷḷē kaḷippaṭu vittuk katirppaṭu cōtiyai oḷippaṭu vitteṉṉai uyyakkoṇ ṭāḷē.

Report an error

கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள் கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள் விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையுந் தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.

koṇṭaṉaḷ kōlaṅ kōṭi anēkaṅkaḷ kaṇṭaṉaḷ eṇṇeṇ kalaiyiṉkaṇ mālaikaḷ viṇṭaṉaḷ mēlai virikatir mūṉṟaiyun taṇṭalai mēlniṉṟa taiyalnal lāḷē.

Report an error

தையல்நல் லாளைத் தலத்தின் தலைவியை மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப் பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின் வெய்ய பவமினி மேவகி லாவே.

taiyalnal lāḷait talattiṉ talaiviyai maiyalai nōkkum maṉōṉmaṇi maṅkaiyaip paiyaniṉ ṟēttip paṇimiṉ paṇintapiṉ veyya pavamiṉi mēvaki lāvē.

Report an error

வேயன தோளி விரையுறு மென்மலர் ஏய குழலி இளம்பிறை ஏந்திழை தூய சடைமுடிச் சூலினி சுந்தரி ஏயென துள்ளத் தினிதிருந் தாளே.

vēyaṉa tōḷi viraiyuṟu meṉmalar ēya kuḻali iḷampiṟai ēntiḻai tūya caṭaimuṭic cūliṉi cuntari ēyeṉa tuḷḷat tiṉitirun tāḷē.

Report an error

இனியதென் மூலை இருக்குங் குமரி தனியொரு நாயகி தானே தலைவி தனிப்படு வித்தனள் சார்வு படுத்து நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.

iṉiyateṉ mūlai irukkuṅ kumari taṉiyoru nāyaki tāṉē talaivi taṉippaṭu vittaṉaḷ cārvu paṭuttu naṉippaṭu vittuḷḷam nāṭiniṉ ṟāḷē.

Report an error

நாடிய கண்மூன்று நடுவெழு ஞானத்துக் கூடி இருந்த குமரி குலக்கன்னி ஆடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி ஊடக மேவி உறங்குகின் றாளே.

nāṭiya kaṇmūṉṟu naṭuveḻu ñāṉattuk kūṭi irunta kumari kulakkaṉṉi āṭakac cīṟaṭip paimpoṟ cilampoli ūṭaka mēvi uṟaṅkukiṉ ṟāḷē.

Report an error

உறங்கு மளவின் மனோன்மணி வந்து கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப் பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட் டுறங்கலை யாவென் றுபாயஞ்செய் தாளே.

uṟaṅku maḷaviṉ maṉōṉmaṇi vantu kaṟaṅku vaḷaikkaik kaḻuttārap pullip piṟaṅkoḷit tampalam vāyil umiḻntiṭ ṭuṟaṅkalai yāveṉ ṟupāyañcey tāḷē.

Report an error

உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத் தபாயம் அறக்கெடுத் தன்பு விளைத்துச் சுவாவை விளக்குஞ் சுழியகத் துள்ளே அவாவை அடக்கிவைத் தஞ்சலென் றாளே.

upāyam aḷikkum oruttiyeṉ uḷḷat tapāyam aṟakkeṭut taṉpu viḷaittuc cuvāvai viḷakkuñ cuḻiyakat tuḷḷē avāvai aṭakkivait tañcaleṉ ṟāḷē.

Report an error

அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை தஞ்சமென் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க் கிஞ்சொல் அளிக்கம் இறைவியென் றாரே.

añcol moḻiyāḷ aruntavap peṇpiḷḷai ceñcol maṭamoḻi cīruṭaic cēyiḻai tañcameṉ ṟeṇṇittaṉ cēvaṭi pōṟṟuvārk kiñcol aḷikkam iṟaiviyeṉ ṟārē.

Report an error

ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை காரியல் கோதையள் காரணி நாரணி ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடுங் கோரியென் உள்ளங் குலாவிநின் றாளே.

āruyi rāyum aruntavap peṇpiḷḷai kāriyal kōtaiyaḷ kāraṇi nāraṇi ūrum uyirum ulakum oṭukkiṭuṅ kōriyeṉ uḷḷaṅ kulāviniṉ ṟāḷē.

Report an error

குலாவிய கோலக் குமரியென் னுள்ளம் நிலாவி இருந்து நெடுநாள் அணைந்தும் உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே கலாவி யிருந்த கலைத்தலை யாளே.

kulāviya kōlak kumariyeṉ ṉuḷḷam nilāvi iruntu neṭunāḷ aṇaintum ulāvi yiruntuṇarn tucciyi ṉuḷḷē kalāvi yirunta kalaittalai yāḷē.

Report an error

கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள் முலைத்தலை மங்கை முயங்கி இருக்குஞ் சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே.

kalaittalai neṟṟiyōr kaṇṇuṭaik kaṇṇuḷ mulaittalai maṅkai muyaṅki irukkuñ cilaittalai yāya teriviṉai nōkki alaittapūṅ kompiṉaḷ aṅkirun tāḷē.

Report an error

இருந்தனள் ஏந்திழை என்னுள்ள மேவிப் பொருந்திரு நால்விரல் புக்கனள் புல்கித் திருந்திய தானுவிற் சேர்ந்துடன் ஒன்றி அருந்தவ மெய்தினள் ஆதியி னாளே.

iruntaṉaḷ ēntiḻai eṉṉuḷḷa mēvip poruntiru nālviral pukkaṉaḷ pulkit tiruntiya tāṉuviṟ cērntuṭaṉ oṉṟi aruntava meytiṉaḷ ātiyi ṉāḷē.

Report an error

ஆதி யனாதி யகாரண காரணி சோதிய சோதி சுகபர சுந்தரி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதியென் னுள்ளத் துடனியைந் தாளே.

āti yaṉāti yakāraṇa kāraṇi cōtiya cōti cukapara cuntari mātu camāti maṉōṉmaṇi maṅkali ōtiyeṉ ṉuḷḷat tuṭaṉiyain tāḷē.

Report an error

இயைந்தனள் ஏந்திழை என்னுள்ள மேவி நயந்தனள் அங்கே நமசிவ என்னும் அயன்தனை யோரும் பதமது பற்றும் பெயர்ந்தனள் மற்றும் பிதற்றறுத் தாளே.

iyaintaṉaḷ ēntiḻai eṉṉuḷḷa mēvi nayantaṉaḷ aṅkē namaciva eṉṉum ayaṉtaṉai yōrum patamatu paṟṟum peyarntaṉaḷ maṟṟum pitaṟṟaṟut tāḷē.

Report an error

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர் முயற்றியின் முத்தி அருளும் முதல்வி கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய் முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே.

pitaṟṟik kaḻintaṉar pētai maṉitar muyaṟṟiyiṉ mutti aruḷum mutalvi kayaṟṟikaḻ mukkaṇṇuṅ kampalaic cevvāy mukattaruḷ nōkkamum muṉṉuḷḷa tāmē.

Report an error

உள்ளத் திதயத்து நெஞ்சத் தொருமுன்றுள் பிள்ளைத் தடமுளே பேசப் பிறந்தது வள்ளற் றிருவனை வயிற்றினுள் மாமாயைக் கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.

uḷḷat titayattu neñcat torumuṉṟuḷ piḷḷait taṭamuḷē pēcap piṟantatu vaḷḷaṟ ṟiruvaṉai vayiṟṟiṉuḷ māmāyaik kaḷḷa oḷiyiṉ karuttākuṅ kaṉṉiyē.

Report an error

கன்னியுங் கன்னி அழிந்திலள் காதலி துன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி பன்னிய நன்னூற் பகைவரும் அங்குள என்னேஇம் மாயை இருளது தானே.

kaṉṉiyuṅ kaṉṉi aḻintilaḷ kātali tuṉṉiyaṅ kaivaraip peṟṟaṉaḷ tūymoḻi paṉṉiya naṉṉūṟ pakaivarum aṅkuḷa eṉṉēim māyai iruḷatu tāṉē.

Report an error

இருளது சத்தி வெளியதெம் அண்ணல் பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம் தெருளது சிந்தையைத் தெய்வமென் றெண்ணி அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.

iruḷatu catti veḷiyatem aṇṇal poruḷatu puṇṇiyar pōkattuḷ iṉpam teruḷatu cintaiyait teyvameṉ ṟeṇṇi aruḷatu ceyyumem ātip pirāṉē.

Report an error

ஆதி அனாதியும் ஆய பராசத்தி பாதி பராபரை மேலுறை பைந்தொடி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதுமென் னுள்ளத் துடன்முகிழ்ந் தாளே.

āti aṉātiyum āya parācatti pāti parāparai mēluṟai paintoṭi mātu camāti maṉōṉmaṇi maṅkali ōtumeṉ ṉuḷḷat tuṭaṉmukiḻn tāḷē.

Report an error

ஓதிய வெண்ணெண் கலையின் உயர்கலை ஆதியில் வேதமே யாமென் றறிகிலர் சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள் ஆதியென் றோதினள் ஆவின் கிழத்தியே.

ōtiya veṇṇeṇ kalaiyiṉ uyarkalai ātiyil vētamē yāmeṉ ṟaṟikilar cātiyum pētamum tattuva māyniṟpaḷ ātiyeṉ ṟōtiṉaḷ āviṉ kiḻattiyē.

Report an error

ஆவின் கிழத்திநல் லாவடு தண்டுறை நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடும் தேவின் கிழத்தி திருவாஞ் சிவமங்கை மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.

āviṉ kiḻattinal lāvaṭu taṇṭuṟai nāviṉ kiḻatti nalampukaḻn tēttiṭum tēviṉ kiḻatti tiruvāñ civamaṅkai mēvuṅ kiḻatti viṉaikaṭin tāḷē.

Report an error

வினைகடிந் தாருள்ளத் துள்ளொளி மேவித் தனையடைந் தோர்க்கெல்லாந் தத்துவ மாய்நிற்பள் எனையடி மைகொண்ட ஏந்திழை ஈசன் கணவனைக் காண அனாதியு மாமே.

viṉaikaṭin tāruḷḷat tuḷḷoḷi mēvit taṉaiyaṭain tōrkkellān tattuva māyniṟpaḷ eṉaiyaṭi maikoṇṭa ēntiḻai īcaṉ kaṇavaṉaik kāṇa aṉātiyu māmē.

Report an error

ஆதி அனாதி அகாரண காரணி வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற சோதி தனிச்சுடர் சொரூப மாய்நிற்கும் பாதி பராபரை பன்னிரண் டாதியே.

āti aṉāti akāraṇa kāraṇi vētama tāyntaṉaḷ vētiyark kāyniṉṟa cōti taṉiccuṭar corūpa māyniṟkum pāti parāparai paṉṉiraṇ ṭātiyē.

Report an error

அளந்தேன் அகலிடத் தந்தமும் ஈறும் அளந்தேன் அகலிடத் தாதிப் பிரானை அளந்தேன் அகலிடத் தாணொடு பெண்ணும் அளந்தேன் அவளருள் ஆய்ந்துணர்ந் தேனே.

aḷantēṉ akaliṭat tantamum īṟum aḷantēṉ akaliṭat tātip pirāṉai aḷantēṉ akaliṭat tāṇoṭu peṇṇum aḷantēṉ avaḷaruḷ āyntuṇarn tēṉē.

Report an error

உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள் கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.

uṇarntilar īcaṉai ūḻicey catti puṇarntatu pūraṇam puṇṇiyar taṅkaḷ kaṇaṅkaḷait taṉṉaruḷ ceykiṉṟa kaṉṉi koṇarnta vaḻikoṇṭu kumpaka māmē.

Report an error

கும்பக் களிறைந்துங் கோலொடு பாகனும் வம்பில் திகழும் மணிமுடி யண்ணலும் இன்பக் கல்வி இனிதுறை தையலும் அன்பிற் கலவியு ளாயொழிந் தாரே.

kumpak kaḷiṟaintuṅ kōloṭu pākaṉum vampil tikaḻum maṇimuṭi yaṇṇalum iṉpak kalvi iṉituṟai taiyalum aṉpiṟ kalaviyu ḷāyoḻin tārē.

Report an error

இன்பக் கலவியில் இட்டெழு கின்றதோர் அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும் துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள் என்பிற் பராசத்தி என்னம்மை தானே.

iṉpak kalaviyil iṭṭeḻu kiṉṟatōr aṉpiṟ pukavalla ṉāmeṅkaḷ appaṉum tuṉpak kuḻampil tuyaruṟum pācattuḷ eṉpiṟ parācatti eṉṉammai tāṉē.

Report an error

என்னம்மை என்னப்பன் என்னுஞ் செருக்கற்று உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன் மன்னம்மை யாகி மருவி யுரைசெய்யும் பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.

eṉṉammai eṉṉappaṉ eṉṉuñ cerukkaṟṟu uṉṉammai ūḻit talaivaṉum aṅkuḷaṉ maṉṉammai yāki maruvi yuraiceyyum piṉṉammai yāyniṉṟa pērnanti tāṉē.

Report an error

தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன் பார்மேல் இருப்ப தொறுநூறு தானுள பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள் நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.

tārmēl uṟaikiṉṟa taṇmalar nāṉmukaṉ pārmēl iruppa toṟunūṟu tāṉuḷa pūmēl uṟaikiṉṟa pōtakam vantaṉaḷ nāmēl uṟaikiṉṟa nāyaki āṇaiyē.

Report an error

ஆணைய மாய்வருந் தாது ளிருந்தவர் மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின் பாணைய மாய பரத்தை அறிந்தபின் தாணைய மாய தனாதனன் தானே.

āṇaiya māyvarun tātu ḷiruntavar māṇaiya māya maṉattai orukkippiṉ pāṇaiya māya parattai aṟintapiṉ tāṇaiya māya taṉātaṉaṉ tāṉē.

Report an error

தானே எழுந்தஇத் தத்துவ நாயகி வானோர் எழுந்து மதியை விளக்கினள் தேனோர் எழுகின்ற தீபத் தொளியுடன் மானே நடமுடை மன்றறி யீரே.

tāṉē eḻuntait tattuva nāyaki vāṉōr eḻuntu matiyai viḷakkiṉaḷ tēṉōr eḻukiṉṟa tīpat toḷiyuṭaṉ māṉē naṭamuṭai maṉṟaṟi yīrē.

Report an error

அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத் தறிவான மங்கை அருளது சேரிற் பிறியா அறிவறி வாருள்ளம் பேனும் நெறியாய சித்த நினைந்திருந் தாளே.

aṟivāṉa māyaiyum aimpulak kūṭṭat taṟivāṉa maṅkai aruḷatu cēriṟ piṟiyā aṟivaṟi vāruḷḷam pēṉum neṟiyāya citta niṉaintirun tāḷē.

Report an error

இரவும் பகலும் இலாத விடத்தே குரவஞ்செய் கின்ற குழவியை நாடி அரவஞ்செய் யாமல் அருளுடன் தூங்கப் பருவஞ்செய் யாததோர் பாலனு மாமே.

iravum pakalum ilāta viṭattē kuravañcey kiṉṟa kuḻaviyai nāṭi aravañcey yāmal aruḷuṭaṉ tūṅkap paruvañcey yātatōr pālaṉu māmē.

Report an error

பாலனு மாகும் பராசத்தி தன்னொடு மேலணு காவிந்து நாதங்கள் விட்டிட மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச் சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.

pālaṉu mākum parācatti taṉṉoṭu mēlaṇu kāvintu nātaṅkaḷ viṭṭiṭa mūlama tāmeṉum muttikku nērpaṭac cālavu māyniṉṟa taṟparat tāḷē.

Report an error

நின்ற பராசத்தி நீள்பரன் தன்னொடு நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும் நின்றறி யுங்கிரி யாசத்தி நண்ணவே மன்றன வற்றுள் மருவிடுந் தானே.

niṉṟa parācatti nīḷparaṉ taṉṉoṭu niṉṟaṟi ñāṉamum iccaiyu māyniṟkum niṉṟaṟi yuṅkiri yācatti naṇṇavē maṉṟaṉa vaṟṟuḷ maruviṭun tāṉē.

Report an error

மருவொத்த மங்கையுந் தானும் உடனே உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார் கருவொத்து நின்று கலக்கின்ற போது திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.

maruvotta maṅkaiyun tāṉum uṭaṉē uruvottu niṉṟamai oṉṟum uṇarār karuvottu niṉṟu kalakkiṉṟa pōtu tiruvotta cintaivait tentainiṉ ṟāṉē.

Report an error

சிந்தையி னுள்ளே திரியுஞ் சிவசத்தி விந்துவும் நாதமு மாயே விரிந்தனள் சந்திர பூமி சடாதரி சாத்தவி அந்தமொ டாதிய தாம்வண்ணத் தாளே.

cintaiyi ṉuḷḷē tiriyuñ civacatti vintuvum nātamu māyē virintaṉaḷ cantira pūmi caṭātari cāttavi antamo ṭātiya tāmvaṇṇat tāḷē.

Report an error

ஆறி யிருந்த அமுத பயோதரி மாறி யிருந்த வழியறி வாரில்லை தேறி யிருந்துநல் தீபத் தொளியுடன் ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.

āṟi yirunta amuta payōtari māṟi yirunta vaḻiyaṟi vārillai tēṟi yiruntunal tīpat toḷiyuṭaṉ ūṟi yiruntaṉaḷ uḷḷuṭai yārkkē.

Report an error

உடையவன் அங்கி உருத்திர சோதி விடையவன் ஏறி விளங்கி யிருக்குங் கடையவர் போயிடுங் கண்டவர் நெஞ்சத் தடையது வாகிய சாதகர் தாமே.

uṭaiyavaṉ aṅki uruttira cōti viṭaiyavaṉ ēṟi viḷaṅki yirukkuṅ kaṭaiyavar pōyiṭuṅ kaṇṭavar neñcat taṭaiyatu vākiya cātakar tāmē.

Report an error

தாமேல் உறைவிடம் ஆறித ழானது பார்மேல் இதழ்பதி னெட்டிரு நூறுள பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள் பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே.

tāmēl uṟaiviṭam āṟita ḻāṉatu pārmēl itaḻpati ṉeṭṭiru nūṟuḷa pūmēl uṟaikiṉṟa puṇṇiyam vantaṉaḷ pārmēl uṟaikiṉṟa paintoṭi yāḷē.

Report an error

பைந்தொடி யாளும் பரம னிருந்திடத் திண்கொடி யாகத் திகழ்தரு சோதியாம் விண்கொடி யாகி விளங்கி வருதலாற் பெண்கொடி யாக நடந்த துலகே.

paintoṭi yāḷum parama ṉiruntiṭat tiṇkoṭi yākat tikaḻtaru cōtiyām viṇkoṭi yāki viḷaṅki varutalāṟ peṇkoṭi yāka naṭanta tulakē.

Report an error

நடந்தது வம்மலர் நாலுடன் அஞ்சாய் இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப் படர்ந்தது தன்வழிப் பங்கயத் துள்ளே தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே.

naṭantatu vammalar nāluṭaṉ añcāy iruntaṉar kaṉṉikaḷ eṭṭuṭaṉ oṉṟāyp paṭarntatu taṉvaḻip paṅkayat tuḷḷē toṭarntatu uḷvaḻi cōti yaṭuttē.

Report an error

அடுக்குந் தாமரை ஆதி இருப்பிடம் எடுக்குந் தாமரை இலக்கத் துள்ளது மடுக்குந் தாமரை மத்தகத் தேசெல முடுக்குந் தாமரை முச்சது ரத்தே.

aṭukkun tāmarai āti iruppiṭam eṭukkun tāmarai ilakkat tuḷḷatu maṭukkun tāmarai mattakat tēcela muṭukkun tāmarai muccatu rattē.

Report an error

முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர் எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக் கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற எச்சது முத்தும் இருந்தனள் தானே.

muccatu rattē eḻunta muḷaiccuṭar eccatu rattum iṭampeṟa ōṭiṭak kaiccatu rattuk kaṭantuḷ oḷipeṟa eccatu muttum iruntaṉaḷ tāṉē.

Report an error

இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப் பரந்தன வாயு திசை தோறுங் குவிந்தன முத்தின் முகவொளி நோக்கின் நடந்தது தேறல் அதோமுகம் அம்பே.

iruntaṉaḷ taṉmukam āṟoṭu nālāyp parantaṉa vāyu ticai tōṟuṅ kuvintaṉa muttiṉ mukavoḷi nōkkiṉ naṭantatu tēṟal atōmukam ampē.

Report an error

அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி கொம்பன்ன நுண்ணிடைக் கோதை குலாவிய செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும் நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

ampaṉṉa kaṇṇi arivai maṉōṉmaṇi kompaṉṉa nuṇṇiṭaik kōtai kulāviya cempoṉcey yākkai ceṟikamaḻ nāṭoṟum nampaṉai nōkki navilukiṉ ṟāḷē.

Report an error

நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி துகிலுழை யாடை நிலம்பொதி பாதம் அகிலமும் அண்ட முழுதுஞ்செம் மாந்து புகலுமுச் சோதி புனையநிற் பாளே.

navilum perunteyvam nāṉmaṟaic catti tukiluḻai yāṭai nilampoti pātam akilamum aṇṭa muḻutuñcem māntu pukalumuc cōti puṉaiyaniṟ pāḷē.

Report an error

புனையவல் லாள்புவ னத்திறை எங்கள் வனையவல் லாள்அண்ட கோடிகள் உள்ளே புனையவல் லாள்மண்ட லத்தொளி தன்னைப் புனையவல் லாளையும் போற்றி யென்பேனே.

puṉaiyaval lāḷpuva ṉattiṟai eṅkaḷ vaṉaiyaval lāḷaṇṭa kōṭikaḷ uḷḷē puṉaiyaval lāḷmaṇṭa lattoḷi taṉṉaip puṉaiyaval lāḷaiyum pōṟṟi yeṉpēṉē.

Report an error

போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென் ஆற்றலுள் நிற்கும அருந்தவப் பெண்பிள்ளை சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை கூற்றந் துரக்கின்ற கோள்பைந் தொடியே.

pōṟṟiyeṉ pēṉpuva ṉāpati ammaiyeṉ āṟṟaluḷ niṟkuma aruntavap peṇpiḷḷai cīṟṟaṅ kaṭinta tirunutaṟ cēyiḻai kūṟṟan turakkiṉṟa kōḷpain toṭiyē.

Report an error

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச் செடியார் வினைகெடச் சேர்வரை என்றென் றடியார் வினைகெடுத் தாதியு மாமே.

toṭiyār taṭakkaic cukōtaya cuntari vaṭivār tiripurai yāmaṅkai kaṅkaic ceṭiyār viṉaikeṭac cērvarai eṉṟeṉ ṟaṭiyār viṉaikeṭut tātiyu māmē.

Report an error

Illustration: Verse & Place · AI-generated with ChatGPT (Generated for this project).