Skip to content

திருமுறை 1 — திருத்தருமபுரம் · திருத்தருமபுரம்

tiruttarumapuram

tiruttarumapuram

tiruttarumapuram, from book 1 of the Tirumurai.

11 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 1 of the Tirumurai.

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர் நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர் பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர் அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர் வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

mātar maṭappiṭi yummaṭa vaṉṉamu maṉṉatōr naṭai yuṭaim malai makaḷ tuṇaiyeṉa makiḻvar pūtavi ṉappaṭai niṉṟicai pāṭavu māṭuvar avar paṭar caṭai neṭu muṭiyator puṉalar vētamo ṭēḻicai pāṭuva rāḻkaṭal veṇṭirai irain nurai karai poru tuvimmi niṉṟayalē tātaviḻ puṉṉai tayaṅku malarcciṟai vaṇṭaṟai eḻil poḻil kuyil payil tarumapu rampatiyē.

Report an error

பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண் பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர் வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர் சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந் தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல் தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின் றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.

poṅku naṭaippuka lilviṭai yāmava rūrtiveṇ poṭi yaṇi taṭaṅ koḷmār pupūṇa nūlpuraḷa maṅkuli ṭaittava ḻummati cūṭuva rāṭuvar vaḷaṅ kiḷar puṉa laravam vaikiya caṭaiyar caṅku kaṭaṟṟirai yālutai yuṇṭuca rintirin tocin tacain ticaintu cērum veṇmaṇaṟ kuvaimēl taṅku katirmaṇi nittila melliru ḷolkaniṉ ṟilaṅ koḷin nalaṅ keḻiṟ ṟarumapu rampatiyē.

Report an error

விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக் கண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர் கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப் பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ் வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார் தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர் கருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே.

viṇṇuṟu mālvarai pōlviṭai yēṟuvar āṟucū ṭuvar viri curi yoḷikoḷ tōṭuniṉ ṟilaṅkak kaṇṇuṟa niṉṟoḷi ruṅkatir veṇmatik kaṇṇiyar kaḻin tava riḻin tiṭum muṭaitalai kalaṉāp peṇṇuṟa niṉṟavar tammuru vammayaṉ māltoḻav vari vaiyaip piṇain tiṇain taṇaintatum piriyār taṇṇitaḻ mullaiyo ṭeṇṇitaḻ mauval maruṅkalar karuṅ kaḻin neruṅ kunaṟ ṟaruma purampatiyē.

Report an error

வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர் வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர் காருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர் கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர் பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர் படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார் தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர் தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.

vāruṟu meṉmulai naṉṉutal ēḻaiyo ṭāṭuvar vaḷaṅ kiḷar viḷaṅ kutiṅ kaḷvaikiya caṭaiyar kāruṟa niṉṟala rummalark koṉṟai yaṅkaṇṇiyar kaṭu viṭai koṭi veṭikoḷ kāṭuṟai patiyar pāruṟa viṇṇula kampara vappaṭu vōravar paṭu talaip pali koḷal paripavan niṉaiyār tāruṟu nallara vammalar tuṉṉiya tātutir taḻai poḻiṉ maḻain nuḻai tarumapu rampatiyē.

Report an error

நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக் கடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர் பேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிறப் பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார் ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ் வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல் தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை கடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே.

nēruma varkkuṇa rappuki lillaine ṭuñcaṭaik kaṭum puṉal paṭarn tiṭam paṭuvator nilaiyar pēruma varkkeṉai yāyiram muṉṉaippi ṟappiṟap pilā tava ruṭaṟ ṟaṭartta peṟṟi yāraṟivār ārama varkkaḻal vāyator nākama ḻaḵkuṟav veḻuḵ koḻum malar koḷpoṉ ṉitaḻinal lalaṅkal tārama varkkima vāṉmakaḷ ūrvatu pōrviṭai kaṭi paṭu ceṭi poḻiṟ ṟarumapu rampatiyē.

Report an error

கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல் குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய் மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள் யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந் துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற் தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப் புள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே.

kūḻaiyaṅ kōtaiku lāyavaḷ tampiṇai pulkamal kumeṉ mulaip poṟi koḷpoṟ koṭiyiṭait tuvarvāy māḻaiyoṇ kaṇmaṭa vāḷaiyor pākama kiḻntavar valam mali paṭai viṭai koṭiko ṭummaḻuvāḷ yāḻaiyum meḷkiṭa vēḻicai vaṇṭumu raṉṟiṉan tuvaṉ ṟimeṉ ciṟaḵ kaṟai yuṟannaṟav viriyumnaṟ tāḻaiyum ñāḻalum nīṭiya kāṉali ṉaḷḷicaip puḷ ḷiṉan tuyil payil tarumapu rampatiyē.

Report an error

தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித் திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை தொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர் காமரு தண்கழி நீடிய கானல கண்டகங் கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர் வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே.

tēmaru vārkuḻal aṉṉa naṭaippeṭai māṉviḻit tirun tiḻai poruntu mēṉi ceṅkatir viriya tūmaru ceñcaṭai yiṟṟutai veṇmati tuṉṟukoṉṟai tol puṉal ciraṅ karan turitta tōluṭaiyar kāmaru taṇkaḻi nīṭiya kāṉala kaṇṭakaṅ kaṭal aṭai kaḻi yiḻiya muṇṭa kattayalē tāmarai cērkuva ḷaippaṭu kiṟkaḻu nīrmalar veṟi kamaḻ ceṟi vayaṟ ṟarumapu rampatiyē.

Report an error

தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல் குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர் கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர் கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர் பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக் கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர் தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங் கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.

tūvaṇa nīṟaka lampoli yavvirai pulkamal kumeṉ malar varai purai tiraḷpu yammaṇivar kōvaṇa mummuḻai yiṉṉata ḷummuṭai yāṭaiyar kolai mali paṭaiyor cūla mēntiya kuḻakar pāvaṇa māvala ṟattalai pattuṭai yavvarak kaṉav valiyor kavvai cey taruḷpuri talaivar tāvaṇa ēṟuṭai yemmaṭi kaṭkiṭam vaṉṟaṭaṅ kaṭal liṭun taṭaṅ karait tarumapu rampatiyē.

Report an error

வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர் வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர் கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர் ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம் மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார் தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந் தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.

vārmali meṉmulai mātoru pākama tākuvar vaḷaṅ kiḷar mati yaravam vaikiya caṭaiyar kūrmali cūlamum veṇmaḻu vummavar velpaṭai kuṉi cilai taṉim malaiya tēntiya kuḻakar ārmali āḻikoḷ celvaṉum alli koḷtāmaraim micai yavaṉ aṭim muṭi yaḷavu tāmaṟiyār tārmali koṉṟaiya laṅkalu kantavar taṅkiṭan taṭaṅ kaṭal liṭun tirait tarumapu rampatiyē.

Report an error

புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம் மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர் பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர் நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர் முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார் தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந் தடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே.

puttar kaṭattuvar moyttuṟi pulkiya kaiyarpoym moḻin taḻivil peṟṟi yuṟṟa naṟṟavar pulavōr pattarkaḷ attava meyppaya ṉākavu kantavar nikaḻn tavar civan tavar cuṭalaippoṭi yaṇivar muttaṉa veṇṇakai yoṇmalai mātumai poṉṉaṇi puṇar mulai yiṇai tuṇai yaṇaiva tumpiriyār tattaru vittira ḷuntiya mālkaṭa lōtamvan taṭarn tiṭum taṭam poḻiṟ ṟarumapu rampatiyē.

Report an error

பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற் தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப் பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார் இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும் உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே.

poṉṉeṭu naṉmaṇi māḷikai cūḻviḻa vammali poru puṉal tiru vamar pukaliyeṉ ṟulakiṟ taṉṉoṭu nērpiṟa vilpati ñāṉacam pantaṉaḵ tucen tamiḻt taṭaṅ kaṭaṟ ṟarumapu rampatiyaip piṉṉeṭu vārcaṭai yiṟpiṟai yummara vummuṭai yavaṉ piṇai tuṇai kaḻalkaḷ pēṇuta luriyār iṉṉeṭu naṉṉula keytuva reytiya pōkamum uṟu varka ḷiṭar piṇi tuyaraṇai vilarē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).