Skip to content

திருமுறை 4 — தசபுராணம் · தசபுராணம்

tacapurāṇam

tacapurāṇam

tacapurāṇam, from book 4 of the Tirumurai.

11 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 4 of the Tirumurai.

Invocation

4.14.opening

திருச்சிற்றம்பலம்

tirucciṟṟampalam

Editor's note: Traditional opening material, separate from the numbered poems.

பருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட இமையோர் இரிந்து பயமாய்த் திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு சுடுவா னெழுந்த விசைபோய்ப் பெருகிட மற்றிதற்கொர் பிதிகார மொன்றை அருளாய் பிரானே எனலும் அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட அவனண்டர் அண்ட ரரசே.

paruvarai yoṉṟucuṟṟi aravaṅkai viṭṭa imaiyōr irintu payamāyt tiruneṭu mālniṟattai aṭuvāṉ vicumpu cuṭuvā ṉeḻunta vicaipōyp perukiṭa maṟṟitaṟkor pitikāra moṉṟai aruḷāy pirāṉē eṉalum aruḷkoṭu māviṭattai eriyāmal uṇṭa avaṉaṇṭar aṇṭa raracē.

Report an error

நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட நிலநின்று தம்ப மதுவப் பரமொரு தெய்வமெய்த இதுவொப்ப தில்லை யிருபாலு நின்று பணியப் பிரமனு மாலுமேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன் பரமுத லாயதேவர் சிவனாய மூர்த்தி யவனா நமக்கோர் சரணே.

niravoli veḷḷamaṇṭi neṭuvaṇṭa mūṭa nilaniṉṟu tampa matuvap paramoru teyvameyta ituvoppa tillai yirupālu niṉṟu paṇiyap piramaṉu mālumēlai muṭiyōṭu pātam aṟiyāmai niṉṟa periyōṉ paramuta lāyatēvar civaṉāya mūrtti yavaṉā namakkōr caraṇē.

Report an error

காலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக உருவாகி மூவர் உருவில் சாலவு மாகிமிக்க சமயங்க ளாறின் உருவாகி நின்ற தழலோன் ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழு முண்டு குறளாயோ ராலின் இலைமேல் பாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி யவனா நமக்கோர் சரணே.

kālamu nāḷkaḷūḻi paṭaiyā muṉēka uruvāki mūvar uruvil cālavu mākimikka camayaṅka ḷāṟiṉ uruvāki niṉṟa taḻalōṉ ñālamu mēlaiviṇṇō ṭulakēḻu muṇṭu kuṟaḷāyō rāliṉ ilaimēl pālaṉu māyavaṟkōr paramāya mūrtti yavaṉā namakkōr caraṇē.

Report an error

நீடுயர் மண்ணுவிண்ணும் நெடுவேலை குன்றொ டுலகேழு மெங்கு நலியச் சூடிய கையராகி இமையோர் கணங்கள் துதியோதி நின்று தொழலும் ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்து ஒழியாத கோபம் ஒழிய ஆடிய மாநடத்தெ மனலாடி பாதம் அவையா நமக்கோர் சரணே.

nīṭuyar maṇṇuviṇṇum neṭuvēlai kuṉṟo ṭulakēḻu meṅku naliyac cūṭiya kaiyarāki imaiyōr kaṇaṅkaḷ tutiyōti niṉṟu toḻalum ōṭiya tārukaṉṟaṉ uṭalam piḷantu oḻiyāta kōpam oḻiya āṭiya mānaṭatte maṉalāṭi pātam avaiyā namakkōr caraṇē.

Report an error

நிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும் நிதனஞ்செய் தோடு புரமூன் றலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர் அரணம் புகத்தன் அருளாற் கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும் அனல்பாய நீறு புரமா மலைசிலை கையிலொல்க வளைவித்த வள்ள லவனா நமக்கோர் சரணே.

nilaivali iṉṟiyeṅkum nilaṉōṭu viṇṇum nitaṉañcey tōṭu puramūṉ ṟalainali vañciyōṭi ariyōṭu tēvar araṇam pukattaṉ aruḷāṟ kolainali vāḷimūḷa aravaṅkai nāṇum aṉalpāya nīṟu puramā malaicilai kaiyilolka vaḷaivitta vaḷḷa lavaṉā namakkōr caraṇē.

Report an error

நீலநன் மேனிசெங்கண் வளைவெள் ளெயிற்ற னெரிகேசன் நேடி வருநாள் காலைநன் மாலைகொண்டு வழிபாடு செய்யும் அளவின்கண் வந்து குறுகிப் பாலனை ஓடவோடப் பயமெய்து வித்த உயிர்வவ்வு பாசம் விடுமக் காலனை வீடுசெய்த கழல்போலும் அண்டர் தொழுதோது சூடு கழலே.

nīlanaṉ mēṉiceṅkaṇ vaḷaiveḷ ḷeyiṟṟa ṉerikēcaṉ nēṭi varunāḷ kālainaṉ mālaikoṇṭu vaḻipāṭu ceyyum aḷaviṉkaṇ vantu kuṟukip pālaṉai ōṭavōṭap payameytu vitta uyirvavvu pācam viṭumak kālaṉai vīṭuceyta kaḻalpōlum aṇṭar toḻutōtu cūṭu kaḻalē.

Report an error

உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில் அவியுண்ண வந்த இமையோர் பயமுறு மெச்சனங்கி மதியோனு முற்ற படிகண்டு நின்று பயமாய் அயனொடு மாலுமெங்க ளறியாமை யாதி கமியென் றிறைஞ்சி யகலச் சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை கழல்கண்டு கொள்கை சரணே.

uyartava mikkatakkaṉ uyarvēḷvi taṉṉil aviyuṇṇa vanta imaiyōr payamuṟu meccaṉaṅki matiyōṉu muṟṟa paṭikaṇṭu niṉṟu payamāy ayaṉoṭu mālumeṅka ḷaṟiyāmai yāti kamiyeṉ ṟiṟaiñci yakalac cayamuṟu taṉmaikaṇṭa taḻalvaṇṇaṉ entai kaḻalkaṇṭu koḷkai caraṇē.

Report an error

நலமலி மங்கைநங்கை விளையாடி யோடி நயனத் தலங்கள் கரமா உலகினை ஏழுமுற்றும் இருள்மூட மூட இருளோட நெற்றி ஒருகண் அலர்தர அஞ்சிமற்றை நயனங்கை விட்டு மடவாள் இறைஞ்ச மதிபோல் அலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண் அவனா நமக்கோர் சரணே.

nalamali maṅkainaṅkai viḷaiyāṭi yōṭi nayaṉat talaṅkaḷ karamā ulakiṉai ēḻumuṟṟum iruḷmūṭa mūṭa iruḷōṭa neṟṟi orukaṇ alartara añcimaṟṟai nayaṉaṅkai viṭṭu maṭavāḷ iṟaiñca matipōl alartaru cōtipōla alarvitta mukkaṇ avaṉā namakkōr caraṇē.

Report an error

கழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு கணையோன் அணைந்து புகலும் மழைவடி வண்ணன்எண்ணி மகவோனை விட்ட மலரான தொட்ட மதனன் எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள் எரியென் றிறைஞ்சி யகலத் தழல்படு நெற்றிஒற்றை நயனஞ் சிவந்த தழல்வண்ணன் எந்தை சரணே.

kaḻaipaṭu kāṭuteṉṟal kuyilkūva añcu kaṇaiyōṉ aṇaintu pukalum maḻaivaṭi vaṇṇaṉeṇṇi makavōṉai viṭṭa malarāṉa toṭṭa mataṉaṉ eḻilpoṭi ventuvīḻa imaiyōr kaṇaṅkaḷ eriyeṉ ṟiṟaiñci yakalat taḻalpaṭu neṟṟioṟṟai nayaṉañ civanta taḻalvaṇṇaṉ entai caraṇē.

Report an error

தடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக நிறைவென்று தன்க ணதனால் உடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை பெருமான் உகந்து மிகவும் சுடரடி யான்முயன்று சுழல்வித் தரக்கன் இதயம் பிளந்த கொடுமை அடல்வலி ஆழியாழி யவனுக் களித்த அவனா நமக்கோர் சரணே.

taṭamalar āyiraṅkaḷ kuṟaivoṉṟa tāka niṟaiveṉṟu taṉka ṇataṉāl uṭaṉvaḻi pāṭuceyta tirumālai yentai perumāṉ ukantu mikavum cuṭaraṭi yāṉmuyaṉṟu cuḻalvit tarakkaṉ itayam piḷanta koṭumai aṭalvali āḻiyāḻi yavaṉuk kaḷitta avaṉā namakkōr caraṇē.

Report an error

கடுகிய தேர்செலாது கயிலாய மீது கருதேலுன் வீரம் ஒழிநீ முடுகுவ தன்றுதன்ம மெனநின்று பாகன் மொழிவானை நன்று முனியா விடுவிடு வென்றுசென்று விரைவுற் றரக்கன் வரையுற் றெடுக்க முடிதோள் நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம் நினைவுற்ற தென்றன் மனனே.

kaṭukiya tērcelātu kayilāya mītu karutēluṉ vīram oḻinī muṭukuva taṉṟutaṉma meṉaniṉṟu pākaṉ moḻivāṉai naṉṟu muṉiyā viṭuviṭu veṉṟuceṉṟu viraivuṟ ṟarakkaṉ varaiyuṟ ṟeṭukka muṭitōḷ neṭuneṭu iṟṟuvīḻa viraluṟṟa pātam niṉaivuṟṟa teṉṟaṉ maṉaṉē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).