Skip to content

திருமுறை 4 — பாவநாசத்திருப்பதிகம் · பாவநாசத்திருப்பதிகம்

pāvanācattiruppatikam

pāvanācattiruppatikam

pāvanācattiruppatikam, from book 4 of the Tirumurai.

11 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 4 of the Tirumurai.

Invocation

4.15.opening

திருச்சிற்றம்பலம்

tirucciṟṟampalam

Editor's note: Traditional opening material, separate from the numbered poems.

பற்றற் றார்சேற் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச் சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த ஒற்றி யூரெம் உத்தமனை உள்ளத் துள்ளே வைத்தேனே.

paṟṟaṟ ṟārcēṟ paḻampatiyaip pācūr nilāya pavaḷattaic ciṟṟam palatten tikaḻkaṉiyait tīṇṭaṟ kariya tiruvuruvai veṟṟi yūril viricuṭarai vimalar kōṉait tiraicūḻnta oṟṟi yūrem uttamaṉai uḷḷat tuḷḷē vaittēṉē.

Report an error

ஆனைக் காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானைக் கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே.

āṉaik kāvil aṇaṅkiṉai ārūr nilāya ammāṉaik kāṉap pērūrk kaṭṭiyaik kāṉūr muḷaitta karumpiṉai vāṉap pērār vantēttum vāymūr vāḻum valampuriyai māṉak kayilai maḻakaḷiṟṟai matiyaic cuṭarai maṟavēṉē.

Report an error

மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கும் மருந்தினை அதிகை மூதூர் அரசினை ஐயா றமர்ந்த ஐயனை விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே.

matiyaṅ kaṇṇi ñāyiṟṟai mayakkan tīrkkum maruntiṉai atikai mūtūr araciṉai aiyā ṟamarnta aiyaṉai vitiyaip pukaḻai vāṉōrkaḷ vēṇṭit tēṭum viḷakkiṉai netiyai ñāṉak koḻuntiṉai niṉaintēṟ kuḷḷam niṟaintatē.

Report an error

புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை உறந்தை யோங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கு ஞாயிற்றைக் கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை அறஞ்சூழ் அதிகை வீரட்டத் தரிமான் ஏற்றை அடைந்தேனே.

puṟampa yattem muttiṉaip pukalūr ilaṅku poṉṉiṉai uṟantai yōṅku cirāppaḷḷi ulakam viḷakku ñāyiṟṟaik kaṟaṅku maruvik kaḻukkuṉṟiṟ kāṇpār kāṇuṅ kaṇṇāṉai aṟañcūḻ atikai vīraṭṭat tarimāṉ ēṟṟai aṭaintēṉē.

Report an error

கோலக் காவிற் குருமணியைக் குடமூக் குறையும் விடமுணியை ஆலங் காட்டி லந்தேனை அமரர் சென்னி யாய்மலரைப் பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச் சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே.

kōlak kāviṟ kurumaṇiyaik kuṭamūk kuṟaiyum viṭamuṇiyai ālaṅ kāṭṭi lantēṉai amarar ceṉṉi yāymalaraip pāliṟ ṟikaḻum paiṅkaṉiyaip parāyt tuṟaiyem pacumpoṉṉaic cūlat tāṉait tuṇaiyiliyait tōḷaik kuḷirat toḻutēṉē.

Report an error

மருக லுறையுமா ணிக்கத்தை வலஞ் சுழியின் மாலையை கருகா வூரிற் கற்பகத்தைக் காண்டற் கரிய கதிரொளியைப் பெருவே ளூரெம் பிறப்பிலியைப் பேணு வார்கள் பிரிவரிய திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் சிந்தை யுள்ளே வைத்தேனே.

maruka luṟaiyumā ṇikkattai valañ cuḻiyiṉ mālaiyai karukā vūriṟ kaṟpakattaik kāṇṭaṟ kariya katiroḷiyaip peruvē ḷūrem piṟappiliyaip pēṇu vārkaḷ pirivariya tiruvāñ ciyatteñ celvaṉaic cintai yuḷḷē vaittēṉē.

Report an error

எழிலார் இராச சிங்கத்தை இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக் குழலார் கோதை வரைமார்பிற் குற்றா லத்தெங் கூத்தனை நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை அழலார் வண்ணத் தம்மானை அன்பி லணைத்து வைத்தேனே.

eḻilār irāca ciṅkattai irāmēc curattem eḻilēṟṟaik kuḻalār kōtai varaimārpiṟ kuṟṟā latteṅ kūttaṉai niḻalār cōlai neṭuṅkaḷattu nilāya nitta maṇāḷaṉai aḻalār vaṇṇat tammāṉai aṉpi laṇaittu vaittēṉē.

Report an error

மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையும் மணாளனை ஆலைக் கரும்பி னின்சாற்றை அண்ணா மலையெம் அண்ணலைச் சோலைத் துருத்தி நகர்மேய சுடரிற் றிகழுந் துளக்கிலியை மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி யிட்டேனே.

mālait tōṉṟum vaḷarmatiyai maṟaikkāṭ ṭuṟaiyum maṇāḷaṉai ālaik karumpi ṉiṉcāṟṟai aṇṇā malaiyem aṇṇalaic cōlait turutti nakarmēya cuṭariṟ ṟikaḻun tuḷakkiliyai mēlai vāṉōr perumāṉai viruppāl viḻuṅki yiṭṭēṉē.

Report an error

சோற்றுத் துறையெஞ் சோதியைத் துருத்தி மேய தூமணியை ஆற்றிற் பழனத் தம்மானை ஆல வாயெம் மருமணியை நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள் நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத் தோற்றக் கடலை அடலேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே.

cōṟṟut tuṟaiyeñ cōtiyait turutti mēya tūmaṇiyai āṟṟiṟ paḻaṉat tammāṉai āla vāyem marumaṇiyai nīṟṟiṟ polinta nimirtiṇṭō ḷ neyttā ṉatten nilāccuṭarait tōṟṟak kaṭalai aṭalēṟṟait tōḷaik kuḷirat toḻutēṉē.

Report an error

புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப் பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியில் மேய புராணனை வைத்தேன் என்றன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே.

puttū ruṟaiyum puṉitaṉaip pūva ṇattem pōrēṟṟai vittāy miḻalai muḷaittāṉai vēḷvik kuṭiyem vētiyaṉaip poyttār puramūṉ ṟerittāṉaip potiyil mēya purāṇaṉai vaittēṉ eṉṟaṉ maṉattuḷḷē māttūr mēya maruntaiyē.

Report an error

முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை அந்திச் செவ்வான் படியானை அரக்க னாற்றல் அழித்தானைச் சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிசேர்த்தி எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவ நாசமே.

muntit tāṉē muḷaittāṉai mūri veḷḷē ṟūrntāṉai antic cevvāṉ paṭiyāṉai arakka ṉāṟṟal aḻittāṉaic cintai veḷḷap puṉalāṭṭic ceñcoṉ mālai yaṭicērtti entai pemmāṉ eṉṉemmāṉ eṉpār pāva nācamē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).