Tirumurai 6.79.p10
கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான் கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப் பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப் பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாம தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே.
kaittalaṅkaḷ irupatuṭai arakkar kōmāṉ kayilaimalai atutaṉṉaik karutā tōṭi muttilaṅku muṭituḷaṅka vaḷaika ḷeṟṟi muṭukutalun tiruviraloṉ ṟavaṉmēl vaippap pattilaṅku vāyālum pāṭal kēṭṭup parintavaṉuk kirāvaṇaṉeṉ ṟīnta nāma tattuvaṉait talaiyālaṅ kāṭaṉ ṟaṉṉaic cārātē cālanāḷ pōkki ṉēṉē.