Tirumurai 6.80.p1
பாரானைப் பாரினது பயனா னானைப் படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னை ஆராத இன்னமுதை அடியார் தங்கட் கனைத்துலகு மானானை அமரர் கோனைக் காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக் கருதுவார் மனத்தானைக் காலற் செற்ற சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
pārāṉaip pāriṉatu payaṉā ṉāṉaip paṭaippākip palluyirkkum parivōṉ ṟaṉṉai ārāta iṉṉamutai aṭiyār taṅkaṭ kaṉaittulaku māṉāṉai amarar kōṉaik kārāruṅ kaṇṭaṉaik kayilai vēntaik karutuvār maṉattāṉaik kālaṟ ceṟṟa cīrāṉaic celvaṉait tirumāṟ pēṟṟeñ cempavaḷak kuṉṟiṉaicceṉ ṟaṭaintēṉ nāṉē.