Skip to content

திருமுறை 7 — திருக்கழுமலம் · திருக்கழுமலம்

tirukkaḻumalam

tirukkaḻumalam

tirukkaḻumalam, from book 7 of the Tirumurai.

10 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 7 of the Tirumurai.

Invocation

7.58.opening

திருச்சிற்றம்பலம்

tirucciṟṟampalam

Editor's note: Traditional opening material, separate from the numbered poems.

சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத் தன்னருள் தந்தஎந் தலைவனை மலையின் மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக் காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

cātalum piṟattalun tavirtteṉai vakuttut taṉṉaruḷ tantaen talaivaṉai malaiyiṉ mātiṉai matittaṅkōr pālkoṇṭa maṇiyai varupuṉal caṭaiyiṭai vaittaem māṉai ētileṉ maṉattukkōr irumpuṇṭa nīrai eṇvakai oruvaṉai eṅkaḷpi rāṉaik kātilveṇ kuḻaiyaṉaik kaṭalkoḷa mitanta kaḻumala vaḷanakark kaṇṭukoṇ ṭēṉē.

Report an error

மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன் வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன் சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன் துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக் கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

maṟṟoru tuṇaiyiṉi maṟumaikkuṅ kāṇēṉ varuntaluṟ ṟēṉmaṟa vāvaram peṟṟēṉ cuṟṟiya cuṟṟamun tuṇaiyeṉṟu karutēṉ tuṇaiyeṉṟu nāṉtoḻap paṭṭaoṇ cuṭarai muttiyum ñāṉamum vāṉavar aṟiyā muṟaimuṟai palapala neṟikaḷuṅ kāṭṭik kaṟpaṉai kaṟpitta kaṭavuḷai aṭiyēṉ kaḻumala vaḷanakark kaṇṭukoṇ ṭēṉē.

Report an error

திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என் செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன் ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன் உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால் விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன் கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

tiruttiṉai nakaruṟai cēntaṉ appaṉeṉ ceyviṉai aṟuttiṭuñ cempoṉai ampoṉ oruttaṉai allatiṅ kāraiyum uṇarēṉ uṇarvupeṟ ṟēṉuyyuṅ kāraṇan taṉṉāl viruttaṉaip pālaṉaik kaṉaviṭai viravi viḻitteṅkuṅ kāṇamāṭ ṭātuviṭ ṭiruntēṉ karuttaṉai niruttañcey kālaṉai vēlaik kaḻumala vaḷanakark kaṇṭukoṇ ṭēṉē.

Report an error

மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன் பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப் பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார் குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன் கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

maḻaikkarum pummalark koṉṟaiyi ṉāṉai vaḷaikkaluṟ ṟēṉmaṟa vāmaṉam peṟṟēṉ piḻaittoru kāliṉip pōyppiṟa vāmaip perumaipeṟ ṟēṉpeṟṟa tārpeṟu kiṟpār kuḻaikkaruṅ kaṇṭaṉaik kaṇṭukoḷ vāṉē pāṭukiṉ ṟēṉceṉṟu kūṭavum vallēṉ kaḻaikkarum puṅkata lippala cōlaik kaḻumala vaḷanakark kaṇṭukoṇ ṭēṉē.

Report an error

குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங் கொடுமழு வாட்படைக் குழகனே என்றும் வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும் வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப் பசுபதி பதிவின விப்பல நாளுங் கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

kuṇṭalaṅ kuḻaitikaḻ kātaṉē eṉṟuṅ koṭumaḻu vāṭpaṭaik kuḻakaṉē eṉṟum vaṇṭalam pummalark koṉṟaiyaṉ eṉṟum vāyveru vittoḻu tēṉviti yālē paṇṭainam palamaṉa muṅkaḷain toṉṟāyp pacupati pativiṉa vippala nāḷuṅ kaṇṭalaṅ kaḻikkarai ōtamvan tulavuṅ kaḻumala vaḷanakark kaṇṭukoṇ ṭēṉē.

Report an error

வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணி வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன் விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே அரும்பினை அலரினை அமுதினைத் தேனை ஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங் கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

varumperum valviṉai eṉṟirun teṇṇi varuntaluṟ ṟēṉmaṟa vāmaṉam peṟṟēṉ virumpieṉ maṉattiṭai meykuḷirp peyti vēṇṭiniṉ ṟētoḻu tēṉviti yālē arumpiṉai alariṉai amutiṉait tēṉai aiyaṉai aṟavaṉeṉ piṟavivēr aṟukkuṅ karumpiṉaip peruñcennel neruṅkiya kaḻaṉik kaḻumala vaḷanakark kaṇṭukoṇ ṭēṉē.

Report an error

அயலவர் பரவவும் அடியவர் தொழவும் அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன் முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப் புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை மின்னின துருவை என்னிடைப் பொருளைக் கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

ayalavar paravavum aṭiyavar toḻavum aṉparkaḷ cāyaluḷ aṭaiyaluṟ ṟiruntēṉ muyalpavar piṉceṉṟu muyalvalai yāṉai paṭumeṉa moḻintavar vaḻimuḻu teṇṇip puyaliṉait tiruviṉaip poṉṉiṉa toḷiyai miṉṉiṉa turuvai eṉṉiṭaip poruḷaik kayaliṉañ cēloṭu vayalviḷai yāṭuṅ kaḻumala vaḷanakark kaṇṭukoṇ ṭēṉē.

Report an error

நினைதரு பாவங்கள் நாசங்க ளாக நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை மலைதரு மலைமகள் கணவனை வானோர் மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப் புனைதரு புகழினை எங்கள தொளியை இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக் கனைதரு கருங்கடல் ஓதம்வந் துலவுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

niṉaitaru pāvaṅkaḷ nācaṅka ḷāka niṉaintumuṉ toḻuteḻap paṭṭaoṇ cuṭarai malaitaru malaimakaḷ kaṇavaṉai vāṉōr māmaṇi māṇikkat taimmaṟaip poruḷaip puṉaitaru pukaḻiṉai eṅkaḷa toḷiyai iruvarum oruvaṉeṉ ṟuṇarvari yavaṉaik kaṉaitaru karuṅkaṭal ōtamvan tulavuṅ kaḻumala vaḷanakark kaṇṭukoṇ ṭēṉē.

Report an error

மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாயத் துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த உண்மை யெனுந்தக வின்மையை ஓரேன் பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப் பேரரு ளாளனைக் காரிருள் போன்ற கறையணி மிடறுடை அடிகளை அடியேன் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

maṟaiyiṭait tuṇintavar maṉaiyiṭai iruppa vañcaṉai ceytavar poykaiyum māyat tuṟaiyuṟak kuḷittuḷa tākavait tuytta uṇmai yeṉuntaka viṉmaiyai ōrēṉ piṟaiyuṭaic caṭaiyaṉai eṅkaḷpi rāṉaip pēraru ḷāḷaṉaik kāriruḷ pōṉṟa kaṟaiyaṇi miṭaṟuṭai aṭikaḷai aṭiyēṉ kaḻumala vaḷanakark kaṇṭukoṇ ṭēṉē.

Report an error

செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும் விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட் டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால் அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன் சடையன்றன் காதலன் பாடிய பத்துந் தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே.

ceḻumalark koṉṟaiyuṅ kūviḷa malarum viraviya caṭaimuṭi aṭikaḷai niṉaintiṭ ṭaḻumalark kaṇṇiṇai aṭiyavark kallāl aṟivari tavaṉṟiru vaṭiyiṇai iraṇṭuṅ kaḻumala vaḷanakark kaṇṭukoṇ ṭūraṉ caṭaiyaṉṟaṉ kātalaṉ pāṭiya pattun toḻumalar eṭuttakai aṭiyavar tammait tuṉpamum iṭumpaiyuñ cūḻaki lāvē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).