Skip to content

திருமுறை 8 — திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை · திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை

tiruttacāṅkam - aṭimai koṇṭa muṟaimai

tiruttacāṅkam - aṭimai koṇṭa muṟaimai

tiruttacāṅkam - aṭimai koṇṭa muṟaimai, from book 8 of the Tirumurai.

10 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 8 of the Tirumurai.

ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன் செம்பெருமான் வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிரான் என்று.

ērār iḷaṅkiḷiyē eṅkaḷ peruntuṟaikkōṉ cīrār tirunāmam tērnturaiyāy - ārūraṉ cemperumāṉ veṇmalārāṉ pāṟkaṭalāṉ ceppuvapōl emperumāṉ tēvarpirāṉ eṉṟu.

Report an error

ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும் நாதன்மை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்கு அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும் தென்பாண்டி நாடே தெளி.

ētamilā iṉcol marakatamē ēḻpoḻiṟkum nātaṉmai āḷuṭaiyāṉ nāṭuraiyāy - kātalavarkku aṉpāṇṭu mīḷā aruḷpurivāṉ nāṭeṉṟum teṉpāṇṭi nāṭē teḷi.

Report an error

தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும் மாதாடும் பாகத்தான் வாழ்பதியென் - கோதட்டிப் பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும் உத்தர கோசமங்கை யூர்.

tātāṭu pūñcōlait tattāy namaiyāḷum mātāṭum pākattāṉ vāḻpatiyeṉ - kōtaṭṭip pattarellām pārmēṟ civapurampōṟ koṇṭāṭum uttara kōcamaṅkai yūr.

Report an error

செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர் ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய் வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் ஆனந்தங் காணுடையான் ஆறு.

ceyyavāyp paiñciṟakiṟ celvīnañ cintaicēr aiyaṉ peruntuṟaiyāṉ āṟuraiyāy - taiyalāy vāṉvanta cintai malaṅkaḻuva vantiḻiyum āṉantaṅ kāṇuṭaiyāṉ āṟu.

Report an error

கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன் மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்து இருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து.

kiñcukavāy añcukamē kēṭil peruntuṟaikkōṉ mañcaṉ maruvum malaipakarāy - neñcattu iruḷakala vāḷvīci iṉpamarum mutti aruḷumalai eṉpatukāṇ āyntu.

Report an error

இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும் தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப வான்புரவி யூரும் மகிழ்ந்து.

ippāṭē vantiyampu kūṭupukal eṉkiḷiyē oppāṭāc cīruṭaiyāṉ ūrvateṉṉē - eppōtum tēṉpuraiyuñ cintaiyarāyt teyvappeṇ ṇētticaippa vāṉpuravi yūrum makiḻntu.

Report an error

கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோள் மாற்றாறை வெல்லும் படைபகராய் - ஏற்றார் அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங் கழுக்கடைகாண் கைக்கொள் படை.

kōṟṟēṉ moḻikkiḷḷāy kōtil peruntuṟaikkōḷ māṟṟāṟai vellum paṭaipakarāy - ēṟṟār aḻukkaṭaiyā neñcuruka mummalaṅkaḷ pāyuṅ kaḻukkaṭaikāṇ kaikkoḷ paṭai.

Report an error

இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோள் முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற் பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும் பருமிக்க நாதப் பறை.

iṉpāl moḻikkiḷḷāy eṅkaḷ peruntuṟaikkōḷ muṉpāl muḻaṅkum muraciyampāy - aṉpāṟ piṟavip pakaikalaṅkap pēriṉpat tōṅkum parumikka nātap paṟai.

Report an error

ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூரும் அன்பர்பால் மேய பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினை நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான் தாளிஅறு காம் உவந்த தார்.

āya moḻikkiḷḷāy aḷḷūrum aṉparpāl mēya peruntuṟaiyāṉ meyttāreṉ - tīyaviṉai nāḷumaṇu kāvaṇṇam nāyēṉai āḷuṭaiyāṉ tāḷiaṟu kām uvanta tār.

Report an error

சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன் கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும் ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும் கோதிலா ஏறாம் கொடி.

cōlaip pacuṅkiḷiyē tūnīrp peruntuṟaikkōṉ kōlam poliyuṅ koṭikūṟāy - cālavum ētilār tuṇṇeṉṉa mēlviḷaṅki ērkāṭṭum kōtilā ēṟām koṭi.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).