Tirumurai 8.1.383
ஏசா நிற்பர் என்னைஉனக் கடியா னென்று பிறரெல்லாம் பேசா நிற்பர் யான்தானும் பேணா நிற்பேன் நின்னருளே தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே.
ēcā niṟpar eṉṉaiuṉak kaṭiyā ṉeṉṟu piṟarellām pēcā niṟpar yāṉtāṉum pēṇā niṟpēṉ niṉṉaruḷē tēcā nēcar cūḻntirukkun tiruvō lakkañ cēvikka īcā poṉṉam palattāṭum entāy iṉittāṉ iraṅkāyē.