Tirumurai 8.1.396
சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே சொல்லுதற் கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்தமா கடலே தீதிலா நன்மைத் திருவருட்குன்றே திருப்பெருந்துறையுறை சிவனே யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய் வந்துநின் இணையடி தந்தே.
cōtiyāyt tōṉṟum uruvamē aruvām oruvaṉē collutaṟ kariya ātiyē naṭuvē antamē pantam aṟukkum āṉantamā kaṭalē tītilā naṉmait tiruvaruṭkuṉṟē tirupperuntuṟaiyuṟai civaṉē yātunī pōvatōr vakaiyeṉakkaruḷāy vantuniṉ iṇaiyaṭi tantē.