Skip to content

Tirumurai 8.1.395

பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பே நீருறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின்னருள் வெள்ளச் சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே திருப்பெருந்துறையுறை சிவனே ஆருற வெனக்கிய காரய லுள்ளார் ஆனந்தம் ஆக்குமென் சோதி.

pārpatam aṇṭam aṉaittumāy muḷaittup parantatōr paṭaroḷip parappē nīruṟu tīyē niṉaivatēl ariya niṉmalā niṉṉaruḷ veḷḷac cīruṟu cintai eḻuntatōr tēṉē tirupperuntuṟaiyuṟai civaṉē āruṟa veṉakkiya kāraya luḷḷār āṉantam ākkumeṉ cōti.

Report an error