Tirumurai 11.300.19
நன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்தோற்று நின்றறிவு தோற்று நிறைதோற்று - நன்றாகக் கைவண்டுங் கண்வண்டும் ஓடக் கலைஓட நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் - மொய்கொண்ட மங்கை மங்கை யிடங்கடவா மாண்பினாள் வானிழிந்த கங்கைச் சுழியனைய உந்தியாள் - தங்கிய . அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி கொங்கை கமலம் முகங்கமலம் - பொங்கெழிலார் இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேயெழிலார் பட்டுடைய அல்குலுந் தேர்த்தட்டு - மட்டுவிரி
naṉṟaṟivār coṉṉa nalantōṟṟu nāṇtōṟṟu niṉṟaṟivu tōṟṟu niṟaitōṟṟu - naṉṟākak kaivaṇṭuṅ kaṇvaṇṭum ōṭak kalaiōṭa neyviṇṭa pūṅkuḻalāḷ niṉṟoḻintāḷ - moykoṇṭa maṅkai maṅkai yiṭaṅkaṭavā māṇpiṉāḷ vāṉiḻinta kaṅkaic cuḻiyaṉaiya untiyāḷ - taṅkiya . aṅkai kamalam aṭikamalam māṉnōkki koṅkai kamalam mukaṅkamalam - poṅkeḻilār iṭṭiṭaiyum vañci irumpaṇaittōḷ vēyeḻilār paṭṭuṭaiya alkulun tērttaṭṭu - maṭṭuviri
Editor's note: Lines 217–228 of the complete continuous poem 11.300; a reading passage, not a separately numbered stanza.