Skip to content

Tirumurai 11.300.20

கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில் ஏய்ந்த மணி முறுவல் இன்முத்தம் - வாய்ந்தசீர் வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக் கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் - குண்டலங்கள் காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித் தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து - மாதராள் . பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும் சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் - நற்கோட்டு வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல் ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு - தெள்ளியநீர் தாழுஞ் சடையான் சடாமகுடந் தோன்றுதலும்

kūntal aṟalpavaḷam ceyyavāy avvāyil ēynta maṇi muṟuval iṉmuttam - vāyntacīr vaṇṭu vaḷāya vaḷarvā cikaicūṭṭik kaṇṭi kaḻuttiṟ kaviṉcērttik - kuṇṭalaṅkaḷ kātuk kaṇintu kaṉamē kalaitiruttit tītil ceḻuṅkōlañ cittirittu - mātarāḷ . poṟkūṭṭiṟ pūvaiyai vāṅki ataṉōṭum coṟkōṭṭi koṇṭirunta ēlvaikkaṇ - naṟkōṭṭu veḷḷi vilaṅkalmēl vīṟṟirunta ñāyiṟupōl oḷḷiya mālviṭaiyai mēlkoṇṭu - teḷḷiyanīr tāḻuñ caṭaiyāṉ caṭāmakuṭan tōṉṟutalum

Editor's note: Lines 229–240 of the complete continuous poem 11.300; a reading passage, not a separately numbered stanza.

Report an error