Skip to content

Tirumurai 11.300.21

வாழுமே மம்மர் மனத்தளாய்ச் - சூழொளியான் தார்நோக்குந் தன்தாரும் நோக்கும் அவனுடைய ஏர்நோக்குந் தன்ன தெழில் நோக்கும் - பேரருளான் தோள்நோக்குந் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின் நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து - நாண் நோக்கா . துள்ளம் உருக ஒழியாத வேட்கையாம் வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய மடந்தை தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர் வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் - ஏய்ந்தசீர் ஈசன் சிலையும் எழில்வான் பவளமும்

vāḻumē mammar maṉattaḷāyc - cūḻoḷiyāṉ tārnōkkun taṉtārum nōkkum avaṉuṭaiya ērnōkkun taṉṉa teḻil nōkkum - pēraruḷāṉ tōḷnōkkun taṉtōḷum nōkkum avaṉmārpiṉ nīḷnōkkam vaittu neṭituyirttu - nāṇ nōkkā . tuḷḷam uruka oḻiyāta vēṭkaiyām veḷḷat tiṭaiyaḻunti veytuyirttāḷ - oḷḷiya maṭantai tīntamiḻiṉ teyva vaṭivāḷ tiruntiyacīr vāynta maṭantaip pirāyattāḷ - ēyntacīr īcaṉ cilaiyum eḻilvāṉ pavaḷamum

Editor's note: Lines 241–252 of the complete continuous poem 11.300; a reading passage, not a separately numbered stanza.

Report an error