Tirumurai 11.489.6
விண்முதற் பூதம் ஐந்தவை நீயே புத்தியும் நீயே முத்தியும் நீயே சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே, அதனால் கூடல் அலவாய்க் குழகன் ஆவ தறியா தருந்தமிழ் பழித்தனன் அடியேன் ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்று வேண்டு மதுவினி வேண்டுவன் விரைந்தே.
viṇmutaṟ pūtam aintavai nīyē puttiyum nīyē muttiyum nīyē colaṟkarun taṉmait tollōy nīyē, ataṉāl kūṭal alavāyk kuḻakaṉ āva taṟiyā taruntamiḻ paḻittaṉaṉ aṭiyēṉ īṇṭiya ciṟappiṉ iṇaiyaṭik kīḻniṉṟu vēṇṭu matuviṉi vēṇṭuvaṉ viraintē.
Editor's note: Lines 61–67 of the complete continuous poem 11.489; a reading passage, not a separately numbered stanza.