Tirumurai 11.902.1
வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாது தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்காது உண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி அவியடு நர்க்குச் சுவைபகர்ந் தேவி ஆரா உண்டி அயின்றன ராகித் .... தூராக் குழியைத் தூர்த்துப் பாரா விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும் தன்னிற் சிறந்த நன்மூ தாளரைக் கூஉய்முன் னின்றுதன்ஏவல் கேட்கும் சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும் ...... பொய்யொடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்றும் மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத்
vāḻntaṉam eṉṟu tāḻntavark kutavātu taṉṉuyirk kiraṅki maṉṉuyirk kiraṅkātu uṇṭip poruṭṭāṟ kaṇṭaṉa veḵki aviyaṭu narkkuc cuvaipakarn tēvi ārā uṇṭi ayiṉṟaṉa rākit .... tūrāk kuḻiyait tūrttup pārā viḻuppamum kulaṉum oḻukkamum kalviyum taṉṉiṟ ciṟanta naṉmū tāḷaraik kūuymuṉ ṉiṉṟutaṉēval kēṭkum ciṟāart tokutiyiṉ uṟāap pēciyum ...... poyyoṭu puṉmaitaṉ pullarkkup pukaṉṟum meyyum māṉamum mēṉmaiyum orīit
Editor's note: Lines 1–12 of the complete continuous poem 11.902; a reading passage, not a separately numbered stanza.