Tirumurai 11.913
நோக்கிற்றுக் காமன் உடல்பொடி யாக நுதிவிரலாற் தாக்கிற் றரக்கன் தலைகீழ்ப் படத்தன் சுடர்வடிவாள் ஓக்கிற்றுத் தக்கன் தலைஉருண் டோடச் சலந்தரனைப் போக்கிற் றுயர்பொன்னி சூழ்மரு தாளுடைப் புண்ணியமே.
nōkkiṟṟuk kāmaṉ uṭalpoṭi yāka nutiviralāṟ tākkiṟ ṟarakkaṉ talaikīḻp paṭattaṉ cuṭarvaṭivāḷ ōkkiṟṟut takkaṉ talaiuruṇ ṭōṭac calantaraṉaip pōkkiṟ ṟuyarpoṉṉi cūḻmaru tāḷuṭaip puṇṇiyamē.