Skip to content

Tirumurai 8.1.391

உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார் உணர்வுக்குந் தெரிவரும் பொருளே இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே திருப்பெருந்துறையுறை சிவனே குணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக் குறுகினேற் கினியென்ன குறையே.

uṇarnta māmuṉivar umparō ṭoḻintār uṇarvukkun terivarum poruḷē iṇaṅkili ellā uyirkaṭkum uyirē eṉaip piṟap paṟukkum emmaruntē tiṇintatōr iruḷil teḷintatū veḷiyē tirupperuntuṟaiyuṟai civaṉē kuṇaṅkaḷ tāmillā iṉpamē uṉṉaik kuṟukiṉēṟ kiṉiyeṉṉa kuṟaiyē.

Report an error