Skip to content

Tirumurai 8.1.392

குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தேன் மனத்திடை மின்னிய மன்னே சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் இனியுன்னை யென்னிரக் கேனே.

kuṟaivilā niṟaivē kōtilā amutē īṟilāk koḻuñcuṭark kuṉṟē maṟaiyumāy maṟaiyiṉ poruḷumāy vantēṉ maṉattiṭai miṉṉiya maṉṉē ciṟaipeṟā nīrpōl cintaivāyppāyum tirupperuntuṟaiyuṟai civaṉē iṟaivaṉē nīyeṉ uṭaliṭaṅ koṇṭāy iṉiyuṉṉai yeṉṉirak kēṉē.

Report an error