Read / Kamba Ramayanam / Yuddha Kandam — makarak kaṇṇaṉ vataip paṭalam of 119 யுத்த காண்டம் — மகரக் கண்ணன் வதைப் படலம் · யுத்த காண்டம் — மகரக் கண்ணன் வதைப் படலம்
Yuddha Kandam — makarak kaṇṇaṉ vataip paṭalam yutta kāṇṭam — makarak kaṇṇaṉ vataip paṭalam
॥
The original Tamil verses of Kambar’s Ramayanam.
38 verses · Tamil with transliteration
சொன்னார் அவர்; சொல் செவியில் தொடர்வோன்
இன்னாத மனத்தின் இலங்கையர் கோன்
வெம் நாக உயிர்ப்பினன் விம்மினனால்;
அன்னான் நிலை கண்டு அயல்நின்று அறைவான் :
coṉṉār avar; col ceviyil toṭarvōṉ
iṉṉāta maṉattiṉ ilaṅkaiyar kōṉ
vem nāka uyirppiṉaṉ vimmiṉaṉāl;
aṉṉāṉ nilai kaṇṭu ayalniṉṟu aṟaivāṉ :
'முந்தே என தாதையை மொய் அமர்வாய்
அந்தோ! உயிர் உண்டவன் ஆருயிர்மேல்
உந்தாய்; எனை யாதும் உணர்ந்திலையோ?
எந்தாய்! ஒரு நீ இடர் கூருதியோ?
'muntē eṉa tātaiyai moy amarvāy
antō! uyir uṇṭavaṉ āruyirmēl
untāy; eṉai yātum uṇarntilaiyō?
entāy! oru nī iṭar kūrutiyō?
யானே செல எண்ணுவன் எய்த அவன்
தான் நேர்வது தீது எனவே தணிவேன்;
வானே நிலனே முதல் மற்றும் எலாம்
கோனே எனை வெல்வது ஒர் கொள்கையதோ?
yāṉē cela eṇṇuvaṉ eyta avaṉ
tāṉ nērvatu tītu eṉavē taṇivēṉ;
vāṉē nilaṉē mutal maṟṟum elām
kōṉē eṉai velvatu or koḷkaiyatō?
'அருந்துயர்க் கடல் உளான் என் அம்மனை, அழுத கண்ணள்,
பெருந்திருக் கழித்தல் ஆற்றாள், "கணவனைக் கொன்று பேர்ந்தோன்
கருந்தலைக் கலத்தின் அல்லால், கடனது கழியேன் '' என்றாள்;
பருந்தினுக்கு இனிய வேலாய்! இன்னருள் பணித்தி 'என்றான்.
'aruntuyark kaṭal uḷāṉ eṉ ammaṉai, aḻuta kaṇṇaḷ,
peruntiruk kaḻittal āṟṟāḷ, "kaṇavaṉaik koṉṟu pērntōṉ
karuntalaik kalattiṉ allāl, kaṭaṉatu kaḻiyēṉ '' eṉṟāḷ;
paruntiṉukku iṉiya vēlāy! iṉṉaruḷ paṇitti 'eṉṟāṉ.
அவ் உரை மகரக் கண்ணன் அறைதலும், அரக்கன், 'ஐய!
செவ்விது; சேறி! சென்று, உன் பழம் பகை தீர்த்தி! 'என்றான்
வெவ்வழி அவனும், பெற்ற விடையினன் தேர்மேற் கொண்டான்.
வவ்விய வில்லன் போனான், வரம் பெற்று வளர்ந்த தோளான்.
av urai makarak kaṇṇaṉ aṟaitalum, arakkaṉ, 'aiya!
cevvitu; cēṟi! ceṉṟu, uṉ paḻam pakai tīrtti! 'eṉṟāṉ
vevvaḻi avaṉum, peṟṟa viṭaiyiṉaṉ tērmēṟ koṇṭāṉ.
vavviya villaṉ pōṉāṉ, varam peṟṟu vaḷarnta tōḷāṉ.
தன்னுடைச் சேனை கோடி ஐந்து உடன் தழுவ, தானை
மன்னுடைச் சேனை வெள்ளம் ஓர் ஐந்து மழையின் பொங்கிப்
பின்னுடைத்தாக, பேரி கடல்பட பெயர்ந்த தூளி
பொன் உடைச் சியைத்து உச்சிக்கு உச்சியும் புதைய, போனான்.
taṉṉuṭaic cēṉai kōṭi aintu uṭaṉ taḻuva, tāṉai
maṉṉuṭaic cēṉai veḷḷam ōr aintu maḻaiyiṉ poṅkip
piṉṉuṭaittāka, pēri kaṭalpaṭa peyarnta tūḷi
poṉ uṭaic ciyaittu uccikku ucciyum putaiya, pōṉāṉ.
'சோணிதக் கண்ணனோடு சிங்கனும், துரகத் திண்தேர்த்
தாள்முதல் காவல் பூண்டு செல்க' என, 'தக்கது 'என்னா
ஆள்முதல் தானையோடும் அனைவரும் தொடரப் போனான்,
நாள்முதல் திங்கள் தன்னைத் தழுவிய அனைய நண்பான்.
'cōṇitak kaṇṇaṉōṭu ciṅkaṉum, turakat tiṇtērt
tāḷmutal kāval pūṇṭu celka' eṉa, 'takkatu 'eṉṉā
āḷmutal tāṉaiyōṭum aṉaivarum toṭarap pōṉāṉ,
nāḷmutal tiṅkaḷ taṉṉait taḻuviya aṉaiya naṇpāṉ.
பல்பெரும் பதாகைப் பத்தி மீமிசைத் தொடுத்த பந்தர்,
எல்லவன் சுடர் ஒண் கற்றை முற்ற, இன்நிழலை ஈய,
தொல் சின யானை அம்கை விலாழி நீர்த் துவலை தூற்ற,
செல் பெருங் கவியின் சேனை அமர்த் தொழில் சிரமம் தீர்ந்த
palperum patākaip patti mīmicait toṭutta pantar,
ellavaṉ cuṭar oṇ kaṟṟai muṟṟa, iṉniḻalai īya,
tol ciṉa yāṉai amkai vilāḻi nīrt tuvalai tūṟṟa,
cel peruṅ kaviyiṉ cēṉai amart toḻil ciramam tīrnta
'முழங்கின யானை; வாசி ஒலித்தன; முரசின் பண்ணை
தழங்கின; வயவர் ஆர்த்தார் ' என்பதோர் முறைமை தள்ள,
வழங்கின, பதலை ஓதை, அண்டத்தின் வரம்பின் காறும்;
புழுங்கின உயிர்கள், யாண்டும் கால்புகப் புரை இன்றாக
'muḻaṅkiṉa yāṉai; vāci olittaṉa; muraciṉ paṇṇai
taḻaṅkiṉa; vayavar ārttār ' eṉpatōr muṟaimai taḷḷa,
vaḻaṅkiṉa, patalai ōtai, aṇṭattiṉ varampiṉ kāṟum;
puḻuṅkiṉa uyirkaḷ, yāṇṭum kālpukap purai iṉṟāka
வெய்தினின் உற்ற தானை முறைவிடா நூழில் வெம் போர்
செய்தன; செருக்கிச் சென்று நெருக்கினர் தலைவர்; சேர்த்த
கையொடு கைகள் உற்றுக் கலந்தன; கல்லும் வில்லும்
எய்தன எறிந்த; யானை ஈர்த்தன கோத்த சோரி.
veytiṉiṉ uṟṟa tāṉai muṟaiviṭā nūḻil vem pōr
ceytaṉa; cerukkic ceṉṟu nerukkiṉar talaivar; cērtta
kaiyoṭu kaikaḷ uṟṟuk kalantaṉa; kallum villum
eytaṉa eṟinta; yāṉai īrttaṉa kōtta cōri.
வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி,
மீனொடு மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச,
கானகம் இடியுண்டு என்னக் கவிக்குலம் மடியும் கவ்வி,
போனகம் நுகரும் பேய்கள் வாய்ப் புறம் புடைப்போடு ஆர்ப்ப
vāṉara vīrar viṭṭa malaikaḷai arakkar vavvi,
mīṉoṭu mēkam cinta vicaittaṉar mīṭṭum vīca,
kāṉakam iṭiyuṇṭu eṉṉak kavikkulam maṭiyum kavvi,
pōṉakam nukarum pēykaḷ vāyp puṟam puṭaippōṭu ārppa
மைந் நிற அரக்கர் வன்கை வயிர வாள் வலியின் வாங்கி,
மெய்ந் நிறத்து எறிந்து கொல்வர், வானர வீரர்; வீரர்
கை நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி,
மொய்ந்நிறத்து எறிவர், எற்றி முருக்குவர்; அரக்கர் முன்பர்.
main niṟa arakkar vaṉkai vayira vāḷ valiyiṉ vāṅki,
meyn niṟattu eṟintu kolvar, vāṉara vīrar; vīrar
kai niṟaittu eṭutta kallum maraṉum tam karattiṉ vāṅki,
moynniṟattu eṟivar, eṟṟi murukkuvar; arakkar muṉpar.
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகரக்கண் மழை ஏறு என்ன,
திண்திறல் அரக்கன் கொற்றப் பொன் தடஞ் சில்லித் தேரை,
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டுக்
கொண்டல்மேல் ஓட்டிச் சென்றான்; குரங்கு இனப் படையைக் கொன்றான
vaṇṭu ulām alaṅkal mārpaṉ makarakkaṇ maḻai ēṟu eṉṉa,
tiṇtiṟal arakkaṉ koṟṟap poṉ taṭañ cillit tērai,
taṇṭalai maruta vaippiṉ kaṅkai nīr taḻuvum nāṭṭuk
koṇṭalmēl ōṭṭic ceṉṟāṉ; kuraṅku iṉap paṭaiyaik koṉṟāṉa
'இந்திரன் பகைஞனே கொல்? ' என்பது ஓர் அச்சம் எய்தித்
தந்திரம் இரிந்து சிந்த, படைப் பெருந் தலைவர், தாக்கி
எந்திரம் எறிந்த என்ன, ஏவுண்டு புரண்டார்; எய்தி,
சுந்தரத் தோளினானை நோக்கி நின்று, இனைய சொன்னான்.
'intiraṉ pakaiñaṉē kol? ' eṉpatu ōr accam eytit
tantiram irintu cinta, paṭaip perun talaivar, tākki
entiram eṟinta eṉṉa, ēvuṇṭu puraṇṭār; eyti,
cuntarat tōḷiṉāṉai nōkki niṉṟu, iṉaiya coṉṉāṉ.
"என்னுடைத் தாதை தன்னை இன் உயிர் உண்டாய் " என்று
முன் உடைத்தாய தீய முழுப்பகை மூவர்க்கு இன்றி,
நினுடைத்து ஆயது அன்றே; இன்று அது நிமிர்வென் 'என்றான்
பொன்னுடைத் தாதை வண்டு குடைந்து உணும் பொலம்பொன் தாரான்
"eṉṉuṭait tātai taṉṉai iṉ uyir uṇṭāy " eṉṟu
muṉ uṭaittāya tīya muḻuppakai mūvarkku iṉṟi,
niṉuṭaittu āyatu aṉṟē; iṉṟu atu nimirveṉ 'eṉṟāṉ
poṉṉuṭait tātai vaṇṭu kuṭaintu uṇum polampoṉ tārāṉ
தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரியக் கேட்டான்
'நீய் கரன் புதல்வன் கொல்லோ? நெடும்பகை நிமிர வந்தாய்;
ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு? ஐய!
ஏயது சொன்னாய் 'என்றான், இசையினுக்கு இசைந்த தோளான்
tīyavaṉ pakarnta māṟṟam cēvakaṉ teriyak kēṭṭāṉ
'nīy karaṉ putalvaṉ kollō? neṭumpakai nimira vantāy;
āyatu kaṭaṉē aṉṟō āṇ piṟantu amaintārkku? aiya!
ēyatu coṉṉāy 'eṉṟāṉ, icaiyiṉukku icainta tōḷāṉ
உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து, 'உன்னோடு எந்தை
செருமுடித்து, என்கண் நின்ற சினம் முடித்து அமைவென் 'என்னா,
கருமுடித்து அமைந்த மேகம், கால் முடித்து எழுந்த காலம்,
பெருமுடிக் கிரியில் பெய்யும் தாரை போல், பகழி பெய்தான்.
urum iṭittu eṉṉa vil nāṇ oli paṭuttu, 'uṉṉōṭu entai
cerumuṭittu, eṉkaṇ niṉṟa ciṉam muṭittu amaiveṉ 'eṉṉā,
karumuṭittu amainta mēkam, kāl muṭittu eḻunta kālam,
perumuṭik kiriyil peyyum tārai pōl, pakaḻi peytāṉ.
அம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி,
தம்பிதன் கவச மீதே இரட்டிச் சாயகங்கள் தாக்கி
வெம்பு இகல் அனுமன் மீதே வெங்கணை மாரி வித்தி
உம்பர் தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான்.
ampuyak kaṇṇaṉ kaṇṭattu āyiram pakaḻi nāṭṭi,
tampitaṉ kavaca mītē iraṭṭic cāyakaṅkaḷ tākki
vempu ikal aṉumaṉ mītē veṅkaṇai māri vitti
umpar tam ulakam muṟṟum caraṅkaḷāy mūṭi uyttāṉ.
சொரிந்தன பகழி எல்லாம் சுடர்க் கடுங் கணைகள் தூவி,
அரிந்தனன் அகற்றி, மற்று அ(வ்) ஆண்தகை அலங்கல் ஆகத்து,
எரிந்து ஒரு பகழி பாய எய்தனன், இராமன்; ஏவ,
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற்று நின்றது அன்றே.
corintaṉa pakaḻi ellām cuṭark kaṭuṅ kaṇaikaḷ tūvi,
arintaṉaṉ akaṟṟi, maṟṟu a(v) āṇtakai alaṅkal ākattu,
erintu oru pakaḻi pāya eytaṉaṉ, irāmaṉ; ēva,
nerintu eḻu puruvattāṉ taṉ niṟattu uṟṟu niṉṟatu aṉṟē.
ஏ உண்டு துளக்கம் எய்தா, இரத்தகப் பரிதி ஈன்ற
பூவுண்ட கண்ணன், வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான்
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர,
தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான்.
ē uṇṭu tuḷakkam eytā, irattakap pariti īṉṟa
pūvuṇṭa kaṇṇaṉ, vāyiṉ pukai uṇṭatu umiḻvāṉ pōlvāṉ
tēvuṇṭa kīrtti aṇṇal tiru uṇṭa kavacam cēra,
tūvuṇṭa vayira vāḷi āyiram tūvi ārttāṉ.
அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார்; ஆழி
மன்னனும், முறுவல் எய்தி, வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி,
பொன் நெடுந் தடந்தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி,
வில் நடு அறுத்து, பாகன் தலையையும் நிலத்து வீழ்த்தான்.
aṉṉatu kaṇṭa vāṉōr aticayam uṟṟār; āḻi
maṉṉaṉum, muṟuval eyti, vāy ampu ōr āṟu vāṅki,
poṉ neṭun taṭantēr pūṇṭa puraviyiṉ kuraṅkaḷ pōkki,
vil naṭu aṟuttu, pākaṉ talaiyaiyum nilattu vīḻttāṉ.
மார்பிடை நின்ற வாளி வாயிடை வெயிலின் வாரும்
சோரியன், விசும்பினூடு ஓர் இமைப்பு இடை தோன்றா நின்றான்,
கார் உரும் ஏறும், காற்றும், கனலியும், கடைநாள் வையம்
பேர்வுறு காலம் என்ன, பெருக்கினன், தவத்தின் பெற்றான்.
mārpiṭai niṉṟa vāḷi vāyiṭai veyiliṉ vārum
cōriyaṉ, vicumpiṉūṭu ōr imaippu iṭai tōṉṟā niṉṟāṉ,
kār urum ēṟum, kāṟṟum, kaṉaliyum, kaṭaināḷ vaiyam
pērvuṟu kālam eṉṉa, perukkiṉaṉ, tavattiṉ peṟṟāṉ.
உரும் முறை அநந்த கோடி உதிர்ந்தன; ஊழி நாளின்
இரு முறை காற்றுச் சீறி எழுந்தது; விழுந்த எங்கும்
கரு முறை நிறைந்த மேகம் கான்றன கல்லின் மாரி;
பொரு முறை மயங்கி, சுற்றும் இரியலின் கவிகள் போன.
urum muṟai ananta kōṭi utirntaṉa; ūḻi nāḷiṉ
iru muṟai kāṟṟuc cīṟi eḻuntatu; viḻunta eṅkum
karu muṟai niṟainta mēkam kāṉṟaṉa kalliṉ māri;
poru muṟai mayaṅki, cuṟṟum iriyaliṉ kavikaḷ pōṉa.
போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்புப் போர்ப்ப,
தீ இனம் அமையச் செல்லும் மாயமா மாரி சிந்த,
ஆயிர கோடி மேலும் அவிந்தன கவிகள்; ஐயன்,
'மாயமோ? வரமோ? 'என்றான்; வீடணன் வணங்கிச் சொல்வான்
pōyiṉa ticaikaḷ eṅkum pukaiyoṭu neruppup pōrppa,
tī iṉam amaiyac cellum māyamā māri cinta,
āyira kōṭi mēlum avintaṉa kavikaḷ; aiyaṉ,
'māyamō? varamō? 'eṉṟāṉ; vīṭaṇaṉ vaṇaṅkic colvāṉ
'நோற்றுடைத் தவத்தின் நோன்மை நோக்கினர், கருணை நோக்கி,
காற்றுடைச் செல்வன் தானும், மழையுடைக் கடவுள் தானும்,
மாற்றலர், ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது 'என்றான்;
நூற்று இதழ்க் கமலக் கண்ணன், 'அகற்றுவென் நொடியின் 'என்றான்.
'nōṟṟuṭait tavattiṉ nōṉmai nōkkiṉar, karuṇai nōkki,
kāṟṟuṭaic celvaṉ tāṉum, maḻaiyuṭaik kaṭavuḷ tāṉum,
māṟṟalar, īnta teyva varattiṉāl vantatu 'eṉṟāṉ;
nūṟṟu itaḻk kamalak kaṇṇaṉ, 'akaṟṟuveṉ noṭiyiṉ 'eṉṟāṉ.
காலவன் படையும், தெய்வக் கடலவன் படையும், காலக்
கோல வன் சிலையில் கோத்து, கொடுங் கணையோடும் கூட்டி,
மேலவன் துரத்தலோடும், விசும்பின் நின்று எரிந்து, வெய்தின்
மால் இருங் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும்.
kālavaṉ paṭaiyum, teyvak kaṭalavaṉ paṭaiyum, kālak
kōla vaṉ cilaiyil kōttu, koṭuṅ kaṇaiyōṭum kūṭṭi,
mēlavaṉ turattalōṭum, vicumpiṉ niṉṟu erintu, veytiṉ
māl iruṅ kaṭaliṉ vīḻntu maṟaintaṉa maḻaiyum kāṟṟum.
அத் துணை, அரக்கன் நோக்கி, அந்தர வானம் எல்லாம்
ஒத்தன உருவே ஆக்கி, தான் மறைந்து ஒளித்து, சூலப்
பத்திகள் கோடி கோடி பரப்பினன்; அதனைப் பார்த்த
வித்தகன், 'ஒருவன் செய்த வினையம் '! என்று இனைய சொன்னான்;
at tuṇai, arakkaṉ nōkki, antara vāṉam ellām
ottaṉa uruvē ākki, tāṉ maṟaintu oḷittu, cūlap
pattikaḷ kōṭi kōṭi parappiṉaṉ; ataṉaip pārtta
vittakaṉ, 'oruvaṉ ceyta viṉaiyam '! eṉṟu iṉaiya coṉṉāṉ;
'மாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பிலா உருவம்; தான் எத்
தேயத்தான் என்னா வண்ணம் கரந்தனன்; தெரிந்திலாதான்,
காயத்தால் இனையன் என்று நினையலாம் கருத்தன் அல்லன்;
தீ ஒத்தான் திறத்தின் என்னை செயல்? 'எனச் சிந்தை நொந்தான்.
'māyattāl vakuttāṉ yāṇṭum varampilā uruvam; tāṉ et
tēyattāṉ eṉṉā vaṇṇam karantaṉaṉ; terintilātāṉ,
kāyattāl iṉaiyaṉ eṉṟu niṉaiyalām karuttaṉ allaṉ;
tī ottāṉ tiṟattiṉ eṉṉai ceyal? 'eṉac cintai nontāṉ.
அம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன் தன் அருள் இல் யாக்கை
உம்பரில் பரப்பி, தான் வேறு ஒளித்தனன், என்ன ஓர் வான்,
செம்புனல் சுவடு நோக்கி "இது நெறி 'என்று தேவர்
தம்பிரான் பகழி தூண்ட, தலை அற்றுத் தலத்தன் ஆனான்
ampiṉvāy āṟu cōrum arakkaṉ taṉ aruḷ il yākkai
umparil parappi, tāṉ vēṟu oḷittaṉaṉ, eṉṉa ōr vāṉ,
cempuṉal cuvaṭu nōkki "itu neṟi 'eṉṟu tēvar
tampirāṉ pakaḻi tūṇṭa, talai aṟṟut talattaṉ āṉāṉ
அயில்படைத்து உருமின் செல்லும் அம்பொடும், அரக்கன் யாக்கை,
புயல்படக் குருதி வீசி, படியிடைப் புரள்தலோடும்
வெயில் கெடுத்து இருளை ஓட்டும் காலத்தின் விளைவினோடும்
துயில் கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது சூழ்ந்த மாயை.
ayilpaṭaittu urumiṉ cellum ampoṭum, arakkaṉ yākkai,
puyalpaṭak kuruti vīci, paṭiyiṭaip puraḷtalōṭum
veyil keṭuttu iruḷai ōṭṭum kālattiṉ viḷaiviṉōṭum
tuyil keṭak kaṉavu māyntāl ottatu cūḻnta māyai.
குருதியின் கண்ணன், வண்ணக் கொடி நெடுந் தேரன், கோடைப்
பருதியின் நடுவண் தோன்றும் பசுஞ்சுடர் மேகப் பண்பன்,
எரிகணை சிந்தி, காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான்
விரிகடல் தட்டான், கொல்லன், வெஞ்சினத் தச்சன், வெய்யோன்.
kurutiyiṉ kaṇṇaṉ, vaṇṇak koṭi neṭun tēraṉ, kōṭaip
parutiyiṉ naṭuvaṇ tōṉṟum pacuñcuṭar mēkap paṇpaṉ,
erikaṇai cinti, kāliṉ eytiṉāṉ taṉṉōṭu ēṟṟāṉ
virikaṭal taṭṭāṉ, kollaṉ, veñciṉat taccaṉ, veyyōṉ.
அன்று, அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி
ஒன்று அல பகழி மாரி, ஊழித் தீ என்ன உய்த்தான்
நின்றவன், நெடியது ஆங்கோர் தருவினால் அகல நீக்கி,
சென்றனன் கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான்.
aṉṟu, avaṉ nāma vil nāṇ alaṅkal tōḷ ilaṅka vāṅki
oṉṟu ala pakaḻi māri, ūḻit tī eṉṉa uyttāṉ
niṉṟavaṉ, neṭiyatu āṅkōr taruviṉāl akala nīkki,
ceṉṟaṉaṉ kariyiṉ vārikku etir paṭar cīyam aṉṉāṉ.
கரத்தினில் திரியா நின்ற மரத்தினைக் கண்டமாகச்
சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி,
உரத்தினைச் சுருக்கிப் பாரின் ஒடுங்கினான், தன்னை ஒப்பான்
சிரத்தினில் குதித்தான்; தேவர் திசைமுகம் கிழிய ஆர்த்தார்.
karattiṉil tiriyā niṉṟa marattiṉaik kaṇṭamākac
carattiṉiṉ tuṇittu vīḻtta taṟukaṇāṉ taṉṉai nōkki,
urattiṉaic curukkip pāriṉ oṭuṅkiṉāṉ, taṉṉai oppāṉ
cirattiṉil kutittāṉ; tēvar ticaimukam kiḻiya ārttār.
எரியும் வெங் குன்றின் உம்பர், இந்திர வில் இட்டு என்ன,
பெரியவன் தலைமேல் நின்ற பேர் எழிலாளன், சோரி
சொரிய, வன்கண்ணின் மூக்கின் செவிகளின் மூளை தூங்க,
நெரிய, வன் தலையைக் காலால் உதைத்து, மாநிலத்தில் இட்டான்.
eriyum veṅ kuṉṟiṉ umpar, intira vil iṭṭu eṉṉa,
periyavaṉ talaimēl niṉṟa pēr eḻilāḷaṉ, cōri
coriya, vaṉkaṇṇiṉ mūkkiṉ cevikaḷiṉ mūḷai tūṅka,
neriya, vaṉ talaiyaik kālāl utaittu, mānilattil iṭṭāṉ.
அங்கு அவன் உலத்தலோடும், அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான்,
சிங்கன், வெங்கணையன், வில்லன், தாரணி தேரின் மேலான்
'எங்கு அடா போதி? 'என்னா, எய்தினன்; எதிர் இலாத
பங்கம் இல் மேரு ஆற்றல், பனசன்வந்து, இடையில் பாய்ந்தான்.
aṅku avaṉ ulattalōṭum, aḻal koḻuntu oḻukum kaṇṇāṉ,
ciṅkaṉ, veṅkaṇaiyaṉ, villaṉ, tāraṇi tēriṉ mēlāṉ
'eṅku aṭā pōti? 'eṉṉā, eytiṉaṉ; etir ilāta
paṅkam il mēru āṟṟal, paṉacaṉvantu, iṭaiyil pāyntāṉ.
பாய்ந்தவன் தோளில், மார்பில், பல்லங்கள் நல்ல பண்போடு
ஆய்ந்தன, அசனி போல, ஐ இரண்டு அழுந்த எய்தான்;
காய்ந்தனன், கனலி நெய்யால் கனன்றது போலக் காந்தி;
ஏய்ந்து எழு தேரினோடும், இமைப்பிடை எடுத்துக் கொண்டான்.
pāyntavaṉ tōḷil, mārpil, pallaṅkaḷ nalla paṇpōṭu
āyntaṉa, acaṉi pōla, ai iraṇṭu aḻunta eytāṉ;
kāyntaṉaṉ, kaṉali neyyāl kaṉaṉṟatu pōlak kānti;
ēyntu eḻu tēriṉōṭum, imaippiṭai eṭuttuk koṇṭāṉ.
தேரொடும் எடுத்தலோடு, நிலத்திடைக் குதித்த செங்கண்
மேருவின் தோற்றத்தான் தன் உச்சிமேல் அதனை வீச,
பார் இடை விழுதலோடும், தானவன் உம்பர் பாய,
சோரியும் உயிரும் சோர, துகைத்தனன் வயிரத் தோளான்.
tēroṭum eṭuttalōṭu, nilattiṭaik kutitta ceṅkaṇ
mēruviṉ tōṟṟattāṉ taṉ uccimēl ataṉai vīca,
pār iṭai viḻutalōṭum, tāṉavaṉ umpar pāya,
cōriyum uyirum cōra, tukaittaṉaṉ vayirat tōḷāṉ.
தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும், கவியின் தானை
மராமரம், மலை, என்று இன்ன வழங்கவும், வளைந்த தானை,
பராவ அரும் வெள்ளம் பத்தும் பட்டன பட்டிலாதார்
இராவணன் தூதர் போனார் படைக்கலம் எடுத்திலாதார்.
tarātala vēntaṉ maintar carattiṉum, kaviyiṉ tāṉai
marāmaram, malai, eṉṟu iṉṉa vaḻaṅkavum, vaḷainta tāṉai,
parāva arum veḷḷam pattum paṭṭaṉa paṭṭilātār
irāvaṇaṉ tūtar pōṉār paṭaikkalam eṭuttilātār.
← Yuddha Kandam — paṭait talaivar vataip paṭalam Yuddha Kandam — paṭait talaivar vataip paṭalam Yuddha Kandam — piramāttirap paṭalam → Yuddha Kandam — piramāttirap paṭalam Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).